திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

ராசிபலன் - ஜூன் 4 முதல் ஜூன் 17 -ம் தேதி வரை

ராசிபலன் - ஜூன் 4 முதல் ஜூன் 17 -ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன் - ஜூன் 4 முதல் ஜூன் 17 -ம் தேதி வரை

ராசிபலன் - ஜூன் 4 முதல் ஜூன் 17 -ம் தேதி வரை

ராசிபலன் - ஜூன் 4 முதல் ஜூன் 17 -ம் தேதி வரை

மேஷம்

சுக்கிரன் தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். புதன், ராகு, செவ்வாய் ஆகிய கிரகங்கள் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய நட்பு மலரும். பிள்ளைகளை உயர் கல்வியில் சேர்ப்பீர்கள். சொத்து வாங்குவதிலும் விற்பதிலும் இருந்துவந்த வில்லங்கம் விலகும். உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும்.

8 - ம் வீட்டில் குரு நிற்பதால், பொது விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். சிக்கனமாக இருக்கவேண்டுமென்று நீங்கள் நினைத்தாலும் அவசியச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். கலைத்துறையினர் கௌரவிக்கப்படுவார்கள்.

எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடித்துக்காட்டும் நேரம் இது.

ராசிபலன் - ஜூன் 4 முதல் ஜூன் 17 -ம் தேதி வரை

ரிஷபம்

புதனும் ராசிநாதன் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், தடைப்பட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஓரளவு பணவரவு உண்டு. 2 - ம் வீட்டில் செவ்வாயும் ராகுவும் நிற்பதால் சோர்வும் ஒருவித படபடப்பும் ஏற்படும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக முடியும். எவரையும் விமர்சித்துப் பேசாதீர்கள்.

குரு சாதகமாக இருப்பதால் வி.ஐ.பி-கள் அறிமுகமாவார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும்.  உத்தியோகத்தில், மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும், உடன்பணிபுரிபவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள். கலைத்துறையினரின் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

எதிலும் வேகம் காட்டாமல் அமைதி காக்கவேண்டிய நேரம் இது.

ராசிபலன் - ஜூன் 4 முதல் ஜூன் 17 -ம் தேதி வரை

மிதுனம்

ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். வி.ஐ.பி-கள் உதவுவார்கள். உறவினர்களும் நண்பர்களும் உங்களிடம் மிக முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். நெடுநாள்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். சுக்கிரன் சொந்த வீட்டில் அமர்ந்திருப்பதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பழைய சொத்தை விற்றுவிட்டு, புது வீடு வாங்குவீர்கள்.

செவ்வாய் ராசியில் நிற்க, 15 - ம் தேதி வரை சூரியன் 12-ம் வீட்டில் நிற்பதால், திடீர்ப் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில், அதிரடி சலுகைகள் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில், சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். கலைத் துறையினருக்கு வரவேண்டிய சம்பளப் பாக்கிகள் வந்து சேரும்.

மன உறுதியுடன் போராடி வெல்லும் காலம் இது.

ராசிபலன் - ஜூன் 4 முதல் ஜூன் 17 -ம் தேதி வரை

கடகம்

 லாப வீட்டில் முக்கிய கிரகங்கள் வலுவாக அமர்ந்திருப்பதால், எதையும் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர்  மார்க்கெட் மூலம் பணம் வரும். முக்கிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கோயிலைப் புதுப்பிக்க நிதி உதவி செய்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும்.

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், மனதுக்கு இதமான செய்திகள் வரும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். வேலையாள்களிடம் கறாராக இருங்கள். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

உங்கள் வாழ்வில் பிரச்னைகள் ஓய்ந்து தென்றல் வீசும் காலம் இது.

ராசிபலன் - ஜூன் 4 முதல் ஜூன் 17 -ம் தேதி வரை

சிம்மம்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், நீங்கள் எதிர்பார்த்தது போல் வீட்டு மனை வாங்குவீர்கள். புதன் சாதகமாகச் செல்வதால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.

சூரியனும் செவ்வாயும் சாதகமாக இருப்பதால், உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். பண வரவு உண்டு. மேலும் செல்வாக்கு, கௌரவப் பதவிகள் ஆகியவை தேடி வரும். புதிய வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் கல்லூரி, பள்ளிச் சேர்க்கையைப் போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில், புது யுக்திகளால் தேங்கிக்கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில், அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர், மூத்த கலைஞர்களின் வழிகாட்டுதல் மூலம் வெற்றியடைவார்கள்.

அதிரடியான சில மாற்றங்கள் நிகழும் காலம் இது.

ராசிபலன் - ஜூன் 4 முதல் ஜூன் 17 -ம் தேதி வரை

கன்னி

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், புதிய வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில்  உங்களின் அந்தஸ்து உயரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

செவ்வாயின் போக்கும் சாதகமாக இருப்பதால், பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருப்பார்கள். வழக்கு சாதகமாகும். 4 - ம் வீட்டில் நிற்கும் சனி, கேது ஆகிய கிரகங்களால் வேலைச்சுமை அதிகரிக்கும். உங்களில் பலர், சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். கலைத்துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

உங்களின் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும் நேரம் இது.

ராசிபலன் - ஜூன் 4 முதல் ஜூன் 17 -ம் தேதி வரை

துலாம்

புதன் சாதகமாக இருப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. வி.ஐ.பி-களின் தொடர்பு கிடைக்கும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்பு உணர்வு அதிகமாகும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தை வழியில் ஆதரவு பெருகும்.

கேதுவும் சனியும் 3 - ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வெற்றிபெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். முன்பணம் கொடுத்திருந்த சொத்துக்கு மீதிப் பணத்தையும் கொடுத்து, பத்திரப்பதிவு செய்வீர்கள். குரு சாதகமாக இருப்பதால் செல்வம், செல்வாக்கு கூடும். சுப விசேஷங்கள் கூடிவரும். வங்கியில் அடமானம் வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். வியாபாரத்தில் லாபம் உயரும்.  உத்தியோகத்தில், உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு, நழுவிச்சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும்.

போராட்டங்களைக் கடந்து சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன் - ஜூன் 4 முதல் ஜூன் 17 -ம் தேதி வரை

விருச்சிகம்

சுக்கிரன் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். முகப்பொலிவு கூடும். சமூக அந்தஸ்து உயரும். திருமணம் கூடி வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். சிலருக்குக் குழந்தைப்பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவார்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. ஆபரணங்கள் வாங்குவீர்கள். கடன் பிரச்னைகளை எளிதில் சமாளிப்பீர்கள்.

ஜன்ம குரு நீடிப்பதால், உங்களின் திறமையை நிரூபிப்பதில் போராட்டம் அதிகம் இருக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். அரசுவகைக் காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலையாள் களும் பங்குதாரர்களும் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில், உயர் அதிகாரியின் ஆதரவால் உங்களின் செல்வாக்கு உயரும். கலைத்துறையினரின் வருமானம் உயர வழி பிறக்கும்; புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.

 நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இது.

ராசிபலன் - ஜூன் 4 முதல் ஜூன் 17 -ம் தேதி வரை

தனுசு

சூரியனும் புதனும் சாதகமாக அமர்ந்திருப்பதால், எதிலும் வெற்றி உண்டு. நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். தடைப்பட்டிருந்த கட்டட வேலையைத் தொடங்குவீர்கள். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை பைசல் செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.

சுக்கிரன் 6 - ம் வீட்டில் மறைந்திருப்பதால் அலைச்சலும் செலவுகளும் இருக்கும். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் பழுதாகும். குரு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால், மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில், எதிர்பாராத ஏமாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில், வீண் பேச்சுகளைத் தவிர்க்கவும். கலைத்துறையினர், தங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் நேரம் இது.

ராசிபலன் - ஜூன் 4 முதல் ஜூன் 17 -ம் தேதி வரை

மகரம்

செவ்வாய் 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சகோதரர்கள் சாதகமாக இருப்பார்கள். 6-ம் வீட்டில் ராகு நீடிப்பதால் அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.  சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.

புதன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களால் செலவுகள் வரும். வியாபாரத்தில், வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில், உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கலைத்துறையினர், பொது நிகழ்ச்சி களில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவார்கள்.

திட்டமிட்டு வெற்றிக்கனியைப் பறிக்கும் காலம் இது.

ராசிபலன் - ஜூன் 4 முதல் ஜூன் 17 -ம் தேதி வரை

கும்பம்

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் செயல்வேகம் கூடும். பழைய வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப் பற்றாக்குறையைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். வாகனப் பழுதைச் சரிசெய்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குரு 10-ம் வீட்டில் தொடர்வதால், வேலை அதிகரிக்கும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம்.

புதன் 5-ம் வீட்டில் நிற்பதால் வி.ஐ.பி-கள் உதவுவார்கள். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். செவ்வாயும் ராகுவும் 5 - ல் நிற்பதால், பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில், பங்குதாரர்களின் தொந்தரவுகளை விட்டுப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். கலைத்துறையினர் மறைமுகப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

முன்னெச்சரிக்கையுடன் எதையும் செய்வீர்கள்.

ராசிபலன் - ஜூன் 4 முதல் ஜூன் 17 -ம் தேதி வரை

மீனம்

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், திடீர் யோகம் உண்டாகும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. பூர்விகச் சொத்தால் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்களும் நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள்.

குரு பகவான் 9-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், நினைத்த காரியம் நிறைவேறும். கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கேது 10-ம் வீட்டில் தொடர்வதால் வேலைப்பளு அதிகரிக்கும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில், உயரதிகாரிகள் உங்களை அன்பாக நடத்துவார்கள். கலைத்துறையினரின் படைப்புத்திறன் வளரும்.

முக்கிய முடிவுகளால் முன்னேற்றம் காணும் வேளை இது.

-‘ஜோதிட ரத்னா’ முனைவர்  கே.பி.வித்யாதரன்