மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

ராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

ராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

ராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

மேஷம்: மனமும் உடலும் உற்சாகமடையும். முடியாமலிருந்த பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். குடும்பத்தில் உங்களின் கை ஓங்கும். கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம்குறித்து முக்கிய முடிவெடுப்பீர்கள். பழைய கடன் தீரும். புது வாகனம் வாங்குவீர்கள். வி.ஐ.பிக்கள் அறிமுகமாவார்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை முடிப்பீர்கள். நாத்தனார், கொழுந்தனார் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

ரிஷபம்: எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். குழந்தை பாக்கியம் சிலருக்குக்கிட்டும். அரசு வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மாமியார் உதவிகரமாக இருப்பார். சகோதரர் உதவுவார். குலதெய்வ கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் வேலைகளைத் தடங்கலின்றி முடித்துவையுங்கள். மூளை பலத்தால் முன்னேறும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

மிதுனம்: இதுவரை இருந்த தடைகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் வி.ஐ.பிக்களிடமிருந்து கிடைக்கும். கணவருக்குக் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவார். அனுசரித்துப் போவது நல்லது. பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியாதபடி செலவுகள் அதிகரிக்கும். நாத்தனாரிடம் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். உங்களுக்குள் இருக்கும் கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. உடல்நலத்தில் அக்கறை தேவை. வியாபாரத்தில் சில சலுகைகள் வழங்கி போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். புதிய திட்டங்கள் தீட்டும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். இங்கிதமான பேச்சால் கடினமான காரியங்களைக்கூட சுலபமாக முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பதவிகள் தேடி வரும். புதிதாகச் சொத்து வாங்குவீர்கள். கணவன் மனைவி இருவரும் கலந்து பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாள்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்த உறவினர்களைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான தள்ளுபடிகளை வழங்கி லாபம் பார்ப்பீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வும் பதவி உயர்வும் தேடி வரும். தோல்வியிலிருந்து விடுபடும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

சிம்மம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் நெருங்கிவருவார்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள். கணவர், உங்களின் புதிய முயற்சிகளைப் பாராட்டுவார். மாமனார், மாமியார் வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். பழைய வாகனத்தை மாற்றி, புது வாகனம் வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். முதலீட்டை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமை யுடன் இருந்த மோதல் நீங்கும். திட சிந்தனையால் வெல்லும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

கன்னி: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. வி.ஐ.பிக்கள் நண்பர்களாவார்கள். நீங்கள் சொல்வதைக் கேட்டு, அதன்படி உங்கள் கணவர் நடந்துகொள்வார். மகனுக்கு வேலை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் தனித் திறமையை வளர்ப்பீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். நாத்தனாருக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். விலகி நின்ற உறவினர்களில் சிலர் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வரும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நிமிர்ந்து நடக்கும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

துலாம்: சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளை, எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்ப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த உரசல்போக்கு மாறும். பணவரவு திருப்தி தரும். கணவருக்கு இருந்த தாழ்வுமனப்பான்மை விலகும். அவரின் வேலைச்சுமையைப் பகிர்ந்துகொள்வீர்கள். நாத்தனார் உதவிகரமாக இருப்பார். பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சகோதரர்களால் பயனடைவீர்கள். கடனாக வாங்கியிருந்த பணத்தை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த பகை விலகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துகொள்வீர்கள். தொந்தரவுகள் நீங்கி சாதிக்கும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

விருச்சிகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்துக் காத்திருந்த தொகை கைக்கு வரும். அதிகாரம் மிக்க பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய சொந்தங்கள் தேடிவரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிடைக்கும். கணவர் உங்களின் பெருந்தன்மையை இப்போது புரிந்துகொள்வார். பிள்ளைகளால் மதிப்பு கூடும். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்னைகள் நீங்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். நாத்தனாருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். நட்புவட்டம் விரிவடையும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்குப் பல ஆலோசனைகள் தருவீர்கள். அச்சம் விலகி, அதிகாரம் பெருகும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

தனுசு: பிள்ளைகளால் செல்வாக்கு உயரும். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடியும். மகனை, விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். மனை, வாகனம் வாங்குவீர்கள். கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். பணவரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மாமனார், மாமியார் வழியில் மதிப்பு கூடும். ஆனால், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் வகையில் சின்னச்சின்ன சங்கடங்கள் வந்து நீங்கும். உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்கள் பிரச்னை ஓயும். புதிய கிளை ஒன்றைத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் பேசும்போது கவனமாகப் பேசவும். தீர்க்கமான முடிவால் வெற்றிபெறும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

மகரம்: தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். கணவருடன் இருந்த மோதல் விலகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வருகிற 15-ம் தேதி முதல், கடன் பிரச்னையிலிருந்து தப்பிக்க புது வழி கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க இடம் கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். பிரபலங்கள் ஆதரிப்பார்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் ஊதிய உயர்வு உண்டு. சிக்கல்களிலிருந்து விடுபடும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

கும்பம்: கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பணபலம் உயரும். உறவினர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, மனை வாங்குவது விற்பது விரைந்து முடியும். கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தோழிகளால் ஆதாயம் உண்டு. சிலருக்கு புதிய இடத்தில்  வேலை கிடைக்கும். மாமனார் மதிப்பார். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் செலவுகள் அதிகமிருக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். பங்குதாரர்களைப் புதிதாகச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். அதற்கேற்ப சம்பளமும் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படும் நேரமிது.

ராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

மீனம்: தடுமாற்றம், தயக்கம் நீங்கி தைரியம் பிறக்கும். திருமணம், சீமந்தம் என சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மேல்மட்ட அரசியல் பிரமுகர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று, புது இடம் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். கமிஷன் வகையாலும் ஆதாயமடைவீர்கள். இளைய சகோதரர் உதவுவார். பழைய கடன் பிரச்னைகளைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பலம், பலவீனம் உணரும் நேரமிது.

- `ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்