சுக்கிரனின் அம்சமாக வருவது பூராட நட்சத்திரம்.

`இதில் பிறந்தவர்கள் அதிக உயரமும் குறுகிய நெற்றியும் உள்ளவர்கள், வாசனைத் திரவியங்கள்மீது விருப்பம் உள்ளவர்கள், பலருக்கும் ஆலோசனை அளிப்பவர்கள், சுவையான உணவை விரும்பி உண்பவர்கள், தாய்ப் பாசம் மிகுந்தவர்கள், பொய் சொல்லாதவர்கள், பயணத்தில் விருப்பம் கொண்டவர்கள்’ என்கிறது ஜாதக அலங்காரம்.

`தாமரையைப் போன்ற சிவந்த கரங்களைக் கொண்டவர்கள், பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுபவர்கள், வாய்மை விரும்பிகள், கல்விமீது நாட்டம் கொண்டவர்கள்’ என்கிறது நட்சத்திர மாலை எனும் நூல்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், கனிவான பேச்சால் அனைவரையும் ஈர்ப்பீர்கள். `பூராடம் போராடும்’ என்ற கூற்றுக்கு இணங்க, எப்பாடு பட்டேனும் நினைத்ததை நடத்திமுடிப்பதில் வல்லவர். பிரச்னைகளைத் தைரியமாக எதிர்கொள்பவர் நீங்கள். பேதம் பார்க்காமல் சரிசமமாகப் பழகுவீர்கள். எதிர்பாராத சம்பவங்கள் உங்கள் வாழ்வைத் திசைதிருப்பும்.

சூதுவாது இல்லாமல் பேசுவீர்கள். தேகத்தை நன்கு பராமரிப்பீர்கள். எந்த விஷயத்தையும் ஒரு முறை கேட்டால், அதை அப்படியே கிரகித்துக்கொள்ளும் கற்பூர புத்தி கொண்டவர். ‘பூராடத்தில் நூலாடாது’ என்றொரு சொல்வழக்கு இருக்கிறது. இதைத் தவறாக அர்த்தம் செய்துகொண்டு, `பூராட நட்சத்திரத்தில் பெண் பிறந்தால், அவளுக்கு மாங்கல்ய பலம் இருக்காது’ என்று சிலர் கூறுவது வழக்கம். ஆனால், `பூராடத்தில் நூலாடாது’ என்பதன் உட்பொருள் வேறு. `நூல்’ என்பதைப் `பாடப் புத்தகம் என்று பொருள்கொள்ளவேண்டும். அதாவது, கல்வியில் ஆரம்பத்தில் அலட்சியமாக இருப்பார்கள் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். அதுவும் ஆரம்பத்தில் மட்டும்தான்; கல்லூரிக் கல்வியில் முதன்மையாக இருப்பார்கள்.

பலருக்கும் குடும்பச் சூழ்நிலை காரணமாகவோ, உடல்நிலை காரணமாகவோ கல்வி தடைப்பட்டு பின்னர் சரியாகும். சிலர், இளங்கலையில் ஒரு பாடப்பிரிவிலும் முதுகலையில் மற்றொரு பாடப்பிரிவிலும் தேர்ச்சி பெறுவார்கள். படிப்பில் ஏற்படும் இந்தக் குழப்பத்தையே, ‘பூராடத்தில் நூலாடாது’ என்று கூறியிருக்கிறார்களே தவிர, மண வாழ்க்கைக்கும் இந்தப் பழமொழிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.

நீங்கள் அமைதியை மிகவும் விரும்புவீர்கள். பூக்கள், அருவிகள் மற்றும் பசுமையைக் கண்டால், மனத்தைப் பறிகொடுப்பீர்கள். எல்லோரிடமும் மனம்விட்டுப் பேசுவீர்கள்.

சிறு வயதிலேயே ஓவியத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகம் உண்டு. கண் பார்த்ததைக் கையால் வரைவதில் வல்லவர். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும் நீங்கள், மற்றவர்களும் அவ்வாறே இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். பொதுநலச் சிந்தனை அதிகம் உண்டு. சக்திக்கு மீறிய விஷயங்களில் நாட்டம் கொள்ளமாட்டீர்கள். பிரச்னைகளை மேலோட்டமாக அணுகாமல், அலசி ஆராய்ந்து தீர்வு காண்பீர்கள்.

நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவர். சிலர், உங்களைப் பற்றி புறம் பேசுவார்கள். யோகம், தியானம் போன்றவற்றிலும் தற்காப்புக் கலைகளிலும் ஆர்வம் உள்ளவர்.

பள்ளிப்பருவத்தில் கூடா நட்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இரக்கப்பட்டும் ஏமாறுவீர்கள். கணக்குப் பதிவியல், வணிகவியல், நிதி, மக்கள்தொடர்பு, பொது மேலாண்மை, துப்பறிதல், ஃபேஷன் டெக்னாலஜி, தொலைத் தொடர்பு, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் முன்னேறுவீர்கள்.

பொதுவாக, நீங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள். முழு உரிமை, சலுகை தரும் நிறுவனத்தில் மட்டுமே தொடர்ந்து வேலை பார்ப்பீர்கள். அனைத்துத் திறமைகளையும் பயன்படுத்தி, கம்பெனியை முன்னேறச் செய்வீர்கள். சிலர், சுயதொழில் தொடங்குவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பும் உண்டு. 37 வயதிலிருந்து நாடாளும் யோகம் தேடி வரும். அரசியலில் செல்வாக்கு அடைவீர்கள். உங்களில் சிலருக்கு மறுமணம் புரியும் நிலை ஏற்படலாம். பிள்ளைகளின் மீது பாசமாக இருப்பீர்கள். தைராய்டு, சிறுநீரகக் கல், வயிற்றுப்புண், கீழ்மூட்டுவாதம், சர்க்கரை வியாதி ஆகியவை வந்து நீங்கும். நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்கள்.

முதல் பாதம்

(சுக்கிரன் + குரு + சூரியன்)

முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சூரியன். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் அயராது உழைப்பார்கள். அவ்வப்போது கோபப்படுவார்கள். நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் அதை ஓர் அனுபவமாகவே எடுத்துக்கொள்வார்கள். தன் கையே தனக்குதவி என்றிருப்பார்கள். சிறு வயதிலேயே பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

விளையாட்டு மற்றும் கலைகளில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். யார் மனதும் புண்படும்படி பேச மாட்டார்கள். இவர்களில் சிலருக்குத் தந்தையால் கிடைக்கும் சுகபோக வாழ்க்கை குறைவுதான். பெற்றோரைப் பிரிந்து சென்று கல்வி கற்கும் சூழ்நிலை சிலருக்கு உருவாகும். அதிகாரப் பதவியில் அமர்வார்கள். மேலாண்மையில் சிறந்து விளங்குவார்கள். கரடுமுரடானவர்களையும் பேச்சால் கனியவைக்கும் சாமர்த்தியும் உண்டு. இவர்களில் பலருக்கு, 27 வயதிலேயே சொந்த வீடு, வாகனம் அமையும். 36 வயதிலிருந்து இவர்களுடைய வாழ்க்கை பரபரப்பாகும். சிலருக்குத் தாமதமாகக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். எனவே, குரு பகவானும் 5-ம் வீட்டுக்கு அதிபதியும் வலுவாக இருக்கும் ஜாதகத்தை இவர்களுடன் சேர்த்துவைக்க வேண்டும். எல்லா வளங்களும் உண்டாகும்.

பரிகாரம்: தாரமங்கலத்தில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீசிவகாமியம்மை உடனுறை ஸ்ரீகயிலாசநாதரை வழிபட்டு வாருங்கள்; வாழ்க்கை செழிக்கும்.

இரண்டாம் பாதம்

(சுக்கிரன் + குரு + புதன்)

இரண்டாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி புதன். இதில் பிறந்தவர்களுக்கு வட்ட முகமும் எடுப்பான மூக்கும் இருக்கும். அடுத்தவர் வயிறு குலுங்கிச் சிரிக்கும்படி பேசுவார்கள். திடீரென்று யோசனையில் மூழ்குவார்கள். பெற்றோர் மீது பிரியம் வைத்திருப்பார்கள். ஆனால், சிலநேரங்களில் தனக்குப் பெற்றோர் முக்கியத்துவம் தரவில்லை என நினைப்பார்கள்.

அடுத்தவர் நிழலில் வாழமாட்டார்கள். சுயநலக்காரர்களை அருகில் அண்டவிட மாட்டார்கள். மனைவி, பிள்ளைகளிடம் நண்பர் போன்று பழகுவார்கள். பத்திரிகை, கல்வி ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம் ஆகியவற்றை வைத்து நடத்துவார்கள். ஆடம்பர வாழ்க்கையை விரும்பமாட்டார்கள். ‘நாலுபேருக்கு நம்மால் முடிந்த நல்லதைச் செய்வோமே’ என்று தத்துவம் பேசுவார்கள். சந்நியாசத்தில் நாட்டம் இருக்கும். இவர்களில் சிலர், அதிக சொத்துகள் கொண்ட மடாதிபதியாக விளங்குவார்கள். 28 வயது முதல் எதையும் சாதித்துக்காட்டுவார்கள்.

பரிகாரம்: திருக்கரம்பனூர் எனும் உத்தமர் கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீபூரணவல்லித் தாயார் உடனுறை ஸ்ரீபுருஷோத்தமப் பெருமாளை வழிபட்டு வாருங்கள்; எதிர்காலம் சிறக்கும்.

மூன்றாம் பாதம்

(சுக்கிரன் + குரு + சுக்கிரன்)

மூன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சுக்கிரன். இதில் பிறந்தவர்கள் எங்கும் எதிலும் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பார்கள். செயற்கரிய செயல்களைச் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். சிறு வயதிலேயே வசதியுடன் வாழ்வார்கள். சங்கீதம், நாட்டியம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

ஸ்கேட்டிங், கைப்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் ஆகியவற்றில் மிகவும் விருப்பம் இருக்கும். புகழ்பெற்ற கிளப்புகளில் பெரிய பதவி வகிப்பார்கள். இலவசக் கண் சிகிச்சை முகாம், கண் தானம், ரத்த தானம், எய்ட்ஸ் விழிப்பு உணர்வுப் பிரசாரம் போன்றவற்றை முன்னின்று நடத்தி, சமூக நலனுக்காகப் பாடுபடுவார்கள். வியாபாரத்தில் ஈடுபாடு அதிகம் உண்டு. ஏற்றுமதி, இறக்குமதி வகைகள் அதிக ஆதாயம் தரும்.

ஏஜென்சி, துணி வியாபாரம், நகை வியாபாரம், ஸ்டார் ஓட்டல் நடத்துதல் ஆகியவற்றால் லாபம் உண்டு. காதலித்தவரையே கல்யாணம் முடிப்பார்கள். மனைவியை நண்பராக நடத்துவார்கள். குடும்பத்துடன் உல்லாசப் பயணமாக அயல்நாடு செல்வார்கள். ரம்மியமான சூழலையே விரும்புவார்கள். 22 வயது முதல் பெரிய பொறுப்புகளும் பதவிகளும் தேடி வரும்.

பரிகாரம்: காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் சாதிப்பீர்கள்.

நான்காம் பாதம்

(சுக்கிரன் + குரு + செவ்வாய்)

நான்காம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி செவ்வாய். இதில் பிறந்தவர்கள் கறாராகப் பேசுவார்கள். விட்டுக்கொடுக்கும் குணம் குறைவாகத்தான் இருக்கும். சொத்துகள் மீது ஆர்வம் இருக்கும். இவர்களில் பலர் தோப்பு - தோட்டம், எஸ்டேட் என்று சொத்து சேர்ப்பார்கள். எல்லோரும் நம்பும்படி பேசுவார்கள். சில விஷயங்களை மிகைப்படுத்துவார்கள்.

பல வருடங்கள் பழகிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் மணிக்கணக்காகப் பேசினாலும் சொந்த விஷயங்களை வெளிக்காட்டிக்கொள்ளாத மர்ம மனிதர்கள் இவர்கள். ராணுவம், காவல் போன்ற துறைகளில் பெரிய பதவி வகிப்பார்கள். வீரசாகசங்களில் விருப்பம் இருக்கும். இவர்களில் பலரும் நாட்டு நலனுக்காக சொத்தையே தானம் செய்பவர்களாக இருப்பார்கள். சிறு வயதிலேயே, தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் குணம் மிகுந்திருக்கும். விளையாட்டில், தன் அணியின் வெற்றிக்காக இறுதி வரை போராடுவார்கள். வாழ்க்கைத் துணைவர் மீது கண்டிப்பு காட்டினாலும், அதீத அன்பு செலுத்துபவராகத் திகழ்வார்கள். பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்ப்பார்கள்.

9 முதல் 16 வயதுக்குள், வீர-தீர விருதுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. 34 வயதிலிருந்து பெரிய சக்தியாக உருவெடுப்பார்கள்.

பரிகாரம்: திருஆவினன்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப் பெருமானை தரிசித்து வழிபட்டு வாருங்கள்; வினைகள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும்.

- ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

பூராட நட்சத்திரம்

நட்சத்திர தேவதை : வாருணி என்ற ஜலதேவி.

வடிவம் : பிறைச்சந்திர வடிவமுடைய நான்கு நட்சத்திரங்கள் சேர்ந்த கூட்டம்.

எழுத்துகள் : பூ, த, ப, டா.

ஆளும் உறுப்புகள் : தொடை, இடுப்பு, நரம்பு.

பார்வை : கீழ்நோக்கு.

பாகை : 253.20 - 266.40

நிறம் : வெண்மை.

இருப்பிடம் : சூன்யம்.

கணம் : மனுஷ கணம்.

குணம் : உக்கிரம்.

பறவை : கௌதாரி.

மிருகம் : ஆண் குரங்கு.

மரம் : பாலுள்ள வஞ்சி.

மலர் : அரளி.

நாடி : மத்திம நாடி.

ஆகுதி : சிவப்பு அரிசி.

பஞ்சபூதம் : வாயு.

நைவேந்தியம் : பால் ஏடு.

தெய்வம் : ஸ்ரீஜலகண்டேஸ்வரர்.

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் பஸ்சிமேசாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி
தந்நோ வருண ப்ரசோதயாத்

அதிர்ஷ்ட எண்கள் : 2, 6, 8.

அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஜா நிறம், வெள்ளை.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், சனி.

அதிர்ஷ்ட ரத்தினம் : அக்வாமெரின் பச்சை.

அதிர்ஷ்ட உலோகம் : வெள்ளி.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்: சாக்கிய நாயனார், காரியார் நாயனார்.

பூராட நட்சத்திரத்தில்...

கிணறு, குளம் வெட்டுதல், கடன் பைசல், மந்திரப் பிரயோகம், வாகனம் வாங்குதல், மாடு-கன்று வாங்குதல், கரும்பு நடவு, முத்து, பவழம் வாங்குதல், அவற்றை அணிதல், மருந்து உண்ணுதல், பரிகார பூஜை ஆகியவற்றைச் செய்தால் நன்மையும் வெற்றியும் கிட்டும்.

பரிகார ஹோம மந்திரம்

யா திவ்யா ஆப: பயஸா ஸம்பபூவு:
யா அந்தரிக்ஷ உத பார்த்தி வீர்யா:
யாஸாமஷாடா அனுயந்தி காமம்
தா ந ஆப: சஹஸம் ஸ்யோநா பவந்து
யாச்ச கூப்யா யாச்ச நாத்யா: ஸமுத்ரியா:
யாச்ச வைசந்தீருத ப்ராஸசீர்யா:
யாஸாமஷாடா மது பக்ஷயந்தி