ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

ராசிபலன் - ஜூன் 18 முதல் ஜூலை 1 - ம் தேதி வரை

ராசிபலன் - ஜூன் 18 முதல் ஜூலை 1 - ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன் - ஜூன் 18 முதல் ஜூலை 1 - ம் தேதி வரை

ராசிபலன் - ஜூன் 18 முதல் ஜூலை 1 - ம் தேதி வரை

ராசிபலன் - ஜூன் 18 முதல் ஜூலை 1 - ம் தேதி வரை

மேஷம்

சூரியன் 3-ம் வீட்டில் நுழைந்திருப்பதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அரசு வகைக் காரியங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகளை அவர்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புதன் சாதகமாக இருப்பதால், புதியவர்கள் நண்பர்களாவார்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள்.

தனாதிபதி சுக்கிரன் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வாகன வசதி பெருகும். வீடு, மனை அமையும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்த, புதிதாகக் கொள்முதல் செய்வீர்கள். பழைய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கலைத்துறையினரின் புகழ், கௌரவம் உயரும்.

வி.ஐ.பி-களின் பாராட்டைப் பெறும் காலம் இது

ராசிபலன் - ஜூன் 18 முதல் ஜூலை 1 - ம் தேதி வரை

ரிஷபம்

ராசிநாதன் சுக்கிரனும் குருவும் வலுவான வீடுகளில் பயணிப்பதால், இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். பழுதான மின்சார, மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், குடும்பத்தில் நிலவி வந்த சண்டை - சச்சரவுகள் நீங்கும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள்.பழைய சொந்தங்களைச் சந்திப்பீர்கள்.

சூரியன் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், அலைச்சல் குறையும். 2-ம் வீட்டில் ராகுவும் 8-ம் வீட்டில் கேதுவும் சனியும் தொடர்வதால், கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். வியாபாரத்தில் இழந்தவற்றை மீட்பீர்கள். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினரின் கடின உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

ரகசியங்களைக் காக்கவேண்டிய தருணம் இது.

ராசிபலன் - ஜூன் 18 முதல் ஜூலை 1 - ம் தேதி வரை

மிதுனம்

ராசிநாதன் புதன் சாதகமாகச் செல்வதால் தைரியம் பிறக்கும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் ஓரளவு சாதகமாக நிற்பதால், பிள்ளைகளின் உயர் கல்வி, மற்றும் திருமண முயற்சிகளில் அலைச்சல் இருந்தாலும் ஜெயம்  கிடைக்கும்.

சூரியன் ராசிக்குள் நிற்பதால் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. ராசியிலேயே ராகு நிற்பதால், எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 7-ம் வீட்டில் கேது தொடர்வதால், மனைவியுடன் வீண் வாக்குவாதம் செய்யவேண்டாம். வியாபாரத்தில் வேலையாள்கள் உதவியாக இருப்பார்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் மீண்டும் கிடைக்கும். கலைத் துறையினருக்கு வரவேண்டிய சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

சிக்கனமாய் இருப்பது நல்லது.

ராசிபலன் - ஜூன் 18 முதல் ஜூலை 1 - ம் தேதி வரை

கடகம்

சுக்கிரன் சாதகமாக அமர்ந்திருப்பதால் புதிய வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். சூரியன் 12 - ம் வீட்டில் மறைந்திருப்பதால் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்திவிடுங்கள்.

12-ம் வீட்டில் ராகு மறைந்திருப்பதால் தூக்கமின்மை, திடீர் பயணங்கள் ஏற்படும். கேதுவும் சனியும் வலுவாக இருப்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். பங்குச்சந்தை மூலம் பணம் வரும். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டு. கலைத்துறையினரின் சம்பளம் உயரும்.

சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன் - ஜூன் 18 முதல் ஜூலை 1 - ம் தேதி வரை

சிம்மம்

புதனும் உங்கள் ராசிநாதன் சூரியனும் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், சவாலான காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். அரசியலில் செல்வாக்கு உயரும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத்திறன் அதிகரிக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் வேலைகளை மீண்டும் தொடங்குவீர்கள்.

ராகு பகவான் லாப வீட்டில் நிற்பதால், திட்டமிட்ட காரியங்கள் கை கூடும். தூரத்துச் சொந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பழைய வேலையாள்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்தியோகத்தில், சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். கலைத்துறையினரின் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் காலம் இது.

ராசிபலன் - ஜூன் 18 முதல் ஜூலை 1 - ம் தேதி வரை

கன்னி

ன-பாக்கியாதிபதியான சுக்கிரன் சொந்த வீட்டில் வலுவாக நிற்பதால், சோம்பல் நீங்கி உற்சாகம் பிறக்கும். திடீர் பண வரவு உண்டு. குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். சூரியன் 10-ம் வீட்டில் அமர்ந்துள்ளதால், வீண்செலவுகள் குறையும். புதிய வேலை கிடைக்கும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

உங்கள் ராசிநாதன் புதன் வலுவாக இருப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ராகுவும் கேதுவும் சரியில்லாததால் தாயாருக்குக் கை, கால் வலி வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில்,  அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர், வீண் வதந்தி களுக்கு ஆளாகாமல் கவனமாகச் செயல்படவேண்டும்.

இழந்ததை மீட்கும் பொன்னான தருணம் இது.

ராசிபலன் - ஜூன் 18 முதல் ஜூலை 1 - ம் தேதி வரை

துலாம்

ங்கள் பாக்கியாதிபதி புதன் வலுவாக இருப்பதால், மனதில் உற்சாகம் பிறக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புது வேலை கிடைக்கும். உங்களின் ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

சூரியன் 9-ம் வீட்டில் அமர்ந்துள்ளதால், தந்தையாருடன் கருத்து மோதல்கள் வேண்டாம். மகான்கள், சித்தர்களின் ஆசிகள் கிடைக்கும். கேதுவும் சனியும் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பதவியிலிருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில், அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு, திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்த்தும் காலம் இது.

ராசிபலன் - ஜூன் 18 முதல் ஜூலை 1 - ம் தேதி வரை

விருச்சிகம்

சுக்கிரன் சாதகமான வீட்டில் நிற்பதால், புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். அதிகாரம் மிக்கப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கும். அடகு வைத்திருந்த நகையை மீட்பீர்கள்.

புதனும் சூரியனும் 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால், அரசியலில் செல்வாக்கு கூடும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும். கேது 2-ம் வீட்டில் நிற்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் வையுங்கள். ராகு 8-ம் வீட்டில் நிற்பதால், அவ்வப்போது வீண் அச்சம் எழும். வியாபாரத்தில், ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில், வளைந்துகொடுத்துப் போவது நல்லது. கலைத்துறையினர், மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.

வேலைச்சுமை அதிகரிக்கும் காலம் இது.

ராசிபலன் - ஜூன் 18 முதல் ஜூலை 1 - ம் தேதி வரை

தனுசு

புதன் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தெம்பு பிறக்கும். வி.ஐ.பி களின் நட்பால் சில விஷயங்களைச் சாதித்துக் காட்டுவீர்கள். பூர்வீகச் சொத்தில் உங்களின் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். உறவினர்கள் உதவுவார்கள்.

சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால், பயணங்களில் கவனமாக இருங்கள். மனைவியுடன் பிணக்குகள் வரும். 7-ம் வீட்டில் நிற்கும் சூரியனால் முன்கோபம், வீண் அலைச்சல் வந்து விலகும். கேது, ராசிக்குள் நிற்பதால் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகின்றன என்பதை அறிந்து, புது முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில், உங்களின் திறமையை மூத்த அதிகாரி புரிந்துகொண்டு உதவுவார். கலைத்துறையினரைப் பழைய நிறுவனங்கள் அழைத்துப் பேசும்; புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

 சமூகத்தில் மதிப்பு - மரியாதை அதிகரிக்கும் தருணம் இது.

ராசிபலன் - ஜூன் 18 முதல் ஜூலை 1 - ம் தேதி வரை

மகரம்

சுக்கிரன் சாதமாக நிற்பதால் பணவரவு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். சூரியன் 6-ம் வீட்டில் அமர்ந்ததால், எதிர்ப்புகள் அடங்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்கக் காரியங்கள் விரைந்து முடியும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.

புதன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் நண்பர்கள், உறவினர்களுடன் கவனமாகப் பழகவும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். 6-ம் வீட்டில் ராகு பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், பழைய கடனில் ஒரு பகுதியைத் தருவீர்கள். 12-ம் வீட்டில் கேது மறைந்திருப்பதால், புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில், உயரதிகாரிகளை விமர்சனம் செய்யாதீர்கள். கலைத் துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

தடைகளைத் தாண்டி முன்னேறும் தருணம் இது.

ராசிபலன் - ஜூன் 18 முதல் ஜூலை 1 - ம் தேதி வரை

கும்பம்

கேதுவும் சனியும் 11-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளைக் குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு உண்டு. கணவன், மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனால் 5-ம் வீட்டில் நிற்கும் ராகுவால் பிள்ளைகள் முரண்படுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தில், உயரதிகாரியின் கோபத்துக்கு ஆளாகாமல் பணியாற்றுங்கள். கலைத்துறையினர் கடின உழைப்பால் சாதித்துக்காட்டுவார்கள்.

சகிப்புத்தன்மையால் சாதிக்கும் காலம் இது.

ராசிபலன் - ஜூன் 18 முதல் ஜூலை 1 - ம் தேதி வரை

மீனம்

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், நண்பர்கள் உதவுவார்கள். விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். சூரியன் 4-ம் வீட்டில் நிற்பதால், பயணங்கள் உண்டு.  தாயாரின் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. அரசு வகைக் காரியங்கள் இழுபறியாகி, பின்னர் நல்லவிதமாக முடியும்.

குரு பகவான் 9-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், சிலருக்குக் குழந்தை வரம் கிடைக்கும். சிலருக்குப் புதிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும். ராகு, கேதுவால் வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில், தேங்கிக் கிடந்த சரக்குகளை புது யுக்திகளால் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில், வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்குப் பழைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் வரும்.

எதிர்பாராத வெற்றிகளைச் சந்திக்கும் நேரம் இது.

- ‘ஜோதிட ரத்னா’ முனைவர்  கே.பி.வித்யாதரன்