
நரசிம்ம புராணத்தில் இடம்பெற்றுள்ள அற்புதமான ஸ்தோத்திரம் இது. அனுதினமும் இந்த ஸ்தோத்திரப் பாடலைப் பாடி நரசிம்மரை வழிபடுவதால், தீராத கடன் பிரச்னைகள் நீங்கி மனநிம்மதி உண்டாகும். வீட்டில் லட்சுமிகடாட்சம் பெருகும்.
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தானாம் வரதாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
கருத்து: ஸ்ரீலட்சுமிதேவியால் ஆலிங்கனம் செய்யப் பட்ட இடதுபாகத்தை உடையவரும், பக்தர்களுக்கு வரங்களைக் கொடுப்பவரும், மகா வீரருமான ஸ்ரீநரசிம்மரை, கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன். அவர் அருள்பாலிக்கவேண்டும்.
சுகப்பிரசவம் நிகழும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்தப் பிரச்னையும் சிக்கலுமின்றி சுகப்பிரசவம் நிகழவேண்டும் என்பதே கர்ப்பிணிப் பெண்களின் விருப்ப மாகவும் வேண்டுதலாகவும் அமையும். திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகையை மனதாரத் தியானித்து அனுதினமும் வழிபட்டுவந்தால், எவ்வித பிரச்னையும் இல்லாமல் சுகப்பிரசவம் நிகழ அருள்பாலிப்பாள் அந்தத் அம்பிகை.
வேறொரு வழிபாடும் உண்டு. 15 திதிகளில் 3-வது திதி திரிதியை. இதற்கான தெய்வம் பஹமாலினி. இந்த அம்மனை கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால், சுகப்பிரசவம் நிகழும் என்பது ஐதிகம்.
ஓம் பஹமாலின்யை வித்மஹே சர்வ வசங்கரியை தீமஹி
தந்நோ நித்யா ப்ரசோதயாத்
ஜாதக ரீதியான கோளாறுகள் இருப்பின், அந்தத் தடைகள் நீங்கி, சுகப்பிரசவம் நிகழ இந்த மந்திரம் கைகொடுக்கும்.