திருத்தலங்கள்
ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

கேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா?

கேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா?

கேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா?

? பெரும்பாலும் பெருமாள் ஆலயங்களில் நவகிரக சந்நிதி இருப்பதில்லையே, ஏன்?

- கூந்தலூர் வி.சந்திரசேகரன், கும்பகோணம்

கேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா?

ஆலயங்களை ஆகமங்களின் கட்டளைப்படியே நம் முன்னோர் அமைத்து வந்தனர். பிற்காலத்தில் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததாலும் தவறான வழிகாட்டுதல்களாலும் சட்டங்கள் பெரிதும் தளர்த்தப்பட்டன.

கடவுளால் அளிக்கப்பட்ட சட்டங்கள் அல்லது கட்டளைகளின்படி, மக்களின் நலன் வேண்டி நடைபெற்ற பூஜைமுறைகள், அதிகாரம் பெற்ற சிலரின் கட்டளைக்கு ஏற்ப மூல ஆகமங் களிலிருந்து விலகின. பக்தி என்பதே போதும்; வழிபாட்டுமுறைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற தவறான புரிதலால், பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் தாக்கங்களே, நாம் தற்போது அனுபவித்து வரும் இயற்கைச் சீற்றங்கள் எனலாம்.

சிவாலயங்கள் சிவாகமங்களின்படி அமைக்கப்படுவதைப் போலவே வைஷ்ணவ ஆலயங்கள் பாஞ்சராத்ர அல்லது வைகாநஸ ஆகமப்படி அமைக்கப்படுகின்றன. அவற்றில் நவகிரகப் பிரதிஷ்டை பற்றிய குறிப்புகள் இல்லாத காரணத்தால்தான் பெருமாள் கோயில்களில் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படுவதில்லை.

கேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா?

மிகத் தொன்மையான காலத்தில் சிவாலயங் களிலும் சிவசூரியன் என்று போற்றப்படும் ஆதவனும் சந்திரனும் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தனர்.

ஆலயங்களில் நவகோள்களின் சந்நிதி இல்லா விட்டாலும், ஸநாதன தர்மத்தில் தோன்றிய  அனைவரும், தாங்கள் பரம்பொருளாகக் கருதும் இறைவன் நவகோள்கள் மூலம் பலாபலன்களை அளிப்பார் என்பதை அறிந்து, அவர்களின் நித்திய வழிபாடுகளில் நவகிரகங்களுக்கு உரிய பூஜை வழிபாடுகளைக் கடைப்பிடித்து வருவதை நாம் காணலாம்.

? சிலர், இல்லங்களில் ஹோமம் செய்யும்போது, மொசைக் தரை பாதிப்படையக்கூடாது என்பதற்காக ரெடிமேடாகக் கிடைக்கும் இரும்பு குண்டங்களைப் பயன்படுத்துகின்றனர். இது சரியா?

பித்ருக்களை  முன்னிட்டுச் செய்யும் சிராத்த காரியங்களின்போது, இரும்பு குண்டங்களைப்  பயன் படுத்தினால் பித்ருக்கள் வரமாட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். இதுகுறித்தும் சற்று விளக்கினால் நன்றாக இருக்கும்.


- ஆர்.பாஸ்கரன், பெங்களூரு


பொதுவாகவே இரும்பு சம்பந்தமுடைய பொருள்களைப் பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் எவர்சில்வர் தட்டு போன்ற பொருள்களைக்கூடப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், தற்போது பல இடங்களில் பல சூழ்நிலைகளில் பயன்படுத்திவருவது சற்று கவலையளிப்பதாகவே உள்ளது. முக்கியமாக, ஹோமம் போன்ற உயரிய கிரியைகளுக்கு இரும்பு சம்பந்தப்பட்ட பொருள்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. அதேநேரம், `இதனால் பித்ருக்கள் வரமாட்டார்கள்' என்று சொல்வது தவறு. நாம் அன்பாக அழைத்தால் கண்டிப்பாக வருவார்கள்.

தாங்கள் தொலைபேசியில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, தங்களின் தொலைபேசி யில் ஏதேனும் பிரச்னை இருந்தால், உரையாடலில் சிறிது சிரமம் இருக்கலாம் அவ்வளவுதான்.

அதுபோல் பூஜைகளோ, முன்னோர் ஆராதனை களோ... இயன்றவரை அவற்றுக்கென்று கூறப்பட்ட பொருள்களைக்கொண்டே செய்யவேண்டும். அப்போதுதான் முழுமையான பலன் நமக்குக் கிடைக்கும். பூஜை, ஹோமங்களில் இரும்பு சம்பந்தமானவற்றைத் தவிர்த்து, செப்பு, பித்தளை, வெள்ளி, மண் அல்லது மரம் போன்றவற்றால் ஆன பொருள்களைப் பயன்படுத்தலாம்.

? சில வீடுகளில் துளசிச் செடியுடன் தொட்டாற் சிணுங்கியையும் சேர்த்து வளர்க்கிறார்கள்.அதற்குக் காரணம் என்ன?

- சந்திரசேகரன், கூந்தலூர்


மரம், செடி, கொடிகளைப் பராமரிக்கவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனினும் இதுபோன்று இந்தச் செடியுடன் இன்னின்ன வளர்க்கவேண்டும் என்று ஒரு சிலவற்றைத் தவிர வேறு எதற்கும் சொல்லப்பட்டதாகத் தெரிய வில்லை. தாங்கள் கூறியுள்ள விஷயம் ஏதேனும் ஒரு பகுதியில் அல்லது ஒரு குடும்பத்தினர் கடைப்பிடிக்கும் வழக்கமாக இருக்கலாம். இதற்குப் பிரமாணம் எதுவும் இல்லை. 

? எப்போதும் எங்கள் வீட்டில் சண்டையும் சச்சரவுமாக உள்ளது. நாங்கள் நிம்மதியாக இருக்க என்ன செய்யவேண்டும்?

- சுஜாதா, சென்னை-82

இந்த உலகத்தில் நாம் மனிதர்களாகப் பிறந்திருப் பது கடவுளின் கருணை. ஒரு நொடியைக்கூட தேவையற்ற விஷயங்களில் வீணடிக்கக்கூடாது. நிம்மதி என்பது வெளியிலிருந்து வரக்கூடியதல்ல. நம் மனதைச் சார்ந்தது. எனவே, முதலில் மனதளவில் தாங்கள் தங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அதற்குத் தனிமை அவசியம்.

கேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா?

யோகா, வழிபாட்டு முறைகளைக் கடைப் பிடித்தல் போன்றவற்றால் அலைபாயும் மனதை ஒருநிலைப்படுத்திவிடலாம். அந்தக் கால ரிஷிகள் நம்முடைய நன்மையை வேண்டி நமக்கு அளித்த மிகப்பெரிய அருள்பிரசாதமே இத்தகைய வழிபாட்டு முறைகள். காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பு உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து கடவுளை வழிபடுங்கள். தீபத்தை ஏற்றுவதால், நம் குடும்பத்தினரின் உள்ளங்களில் இருக்கும் இருள் அகன்று ஒளி பெருகும். ஓர் அறை இருட்டாக இருந்தால், `இருட்டாக இருக்கிறதே' என்று சலித்துக்கொள்ளாமல், ஒரு விளக்கை ஏற்றினால், எப்படி இருள் விலகி அந்த அறைக்குள் ஒளி பரவுகிறதோ, அதேபோல் குலதெய்வ வழிபாடு, நல்ல பழக்கவழக்கங்கள் போன்றவை நம் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆற்றல்கொண்டவை.

நம் வாழ்க்கை முறையை நம் முன்னோர்களின் வழிகாட்டுதலின்படி அமைத்துக்கொண்டால்,  நம்மைச் சுற்றியிருக்கக்கூடிய குழப்பங்கள் விலகி நன்மைகள் விளையும். நம்முடைய அடிப்படை தர்மங்களைக் கடைப்பிடித்து வந்தால், நம் முன்வினைகளின் அளவைப் பொறுத்து தகுந்த காலத்தில் தீயவை விலகி, நன்மைகள் அருளப் பெற்று சந்தோஷமான வாழ்வு அமையப் பெறலாம்.

-காளிகாம்பாள் கோயில் சிவஸ்ரீ சண்முகசிவாசார்யர்

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை `காளிகாம்பாள் கோயில்'  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002