Published:Updated:

கொள்ளிடம் ஆற்றில் மீனவர் வலையில் கிடைத்த பழைமை வாய்ந்த சிவலிங்கம்!

sivalingam

கொள்ளிடம் ஆற்றில் மீனவர் வலையில் கிடைத்த பழைமை வாய்ந்த சிவலிங்கம்!
கொள்ளிடம் ஆற்றில் மீனவர் வலையில் கிடைத்த பழைமை வாய்ந்த சிவலிங்கம்!

கொள்ளிடம் ஆற்றில் வலையில் சிக்கிய சிவலிங்கத்தை வைத்து கோயில் கட்ட பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்த மீனவர்கள் விஜி மற்றும் குமார் ஆகிய இருவரும் நேற்று கொள்ளிடம் ஆற்றில் நாட்டுப் படகு மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வீசிய  வலையில் ஏதோ ஒரு எடை அதிகமான பொருள் சிக்கியதால் வலையை இழுக்க முடியாமல் திணறினர். பின்னர் பொறுமையாக சிரமப்பட்டு கரைக்கு  இழுத்துக்கொண்டு வந்து பார்த்த போது, வலையில் சிவலிங்கம் ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டனர். இந்த சிவலிங்கம் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழைமைவாய்ந்தது என்றும் கூறப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அங்குள்ள விநாயகர் கோயில் வளாகத்தில் வைத்து பயபக்தியுடன் வழிபாடு செய்து வருகின்றனர். சிவன் அருளால் சிவலிங்கம் கொள்ளிடம் ஆற்றங்கரைத் தெருவை நாடி வந்துள்ளதாகவும், விரைவில் கோயில் கட்டி அதில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடப் போவதாகவும், தெருவாசிகள் தெரிவித்தனர்

இதுகுறித்து சிவபக்தர் பிரபு கூறுகையில், ``இந்த சிவலிங்கம் மிகவும் பழைமையானது. ஒரு காலத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரமாக இருந்த  கோயில் வெள்ளப்பெருக்கால், சிதைந்து தண்ணீரில் மூழ்கியிருக்கலாம். அப்போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிவலிங்கம் தற்போது கிடைத்திருக்கிறது. இது ஊருக்கு கிடைத்த பெரும் பாக்கியம். இதை கோயில்கட்டி வணங்குவது பூர்வஜென்ம புண்ணியம்" என்றார். 

படம்: பா.பிரசன்னா