
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''அன்னிக்கி அடர்ந்த காடா இருந்துச்சு சபரிமலை. பக்தர்களின் வருகையும் கணிசமாத்தான் இருந்துச்சு. குடிக்கத் தண்ணிகூடக் கிடைக்காது. ஒரு பர்லாங் தூரம் போகணும் தண்ணிக்கு! அதேபோல, பம்பை நதியில நம்ம முகத்தைப் பார்க்கலாம். பளிங்கு மாதிரி அப்படித் தெளிவா இருக்கும் பம்பா ஆறு. இன்னிக்கி, எங்கே திரும்பினாலும் ஐயப்ப பக்தர்கள்தான்; சபரிமலையில எள்ளு போட்டா, எள்ளு விழ இடமில்லை. அந்த அளவுக்கு பெருங்கூட்டம்! ஆனா என்ன... பம்பை நதி அசுத்தமாயிடுச்சு; அந்தக் கரையோரப் பகுதி அலங்கோலமாயிடுச்சு!'' என்று வேதனை யுடன் தெரிவிக்கிறார் சந்தானராமன் குருசாமி.
''என் மகன் பிறந்து பல வருஷமாகியும் பேச்சு வரலை அவனுக்கு! அந்த வருஷம், மாலை போட்டுட்டுப் போனவன், சபரிமலை சந்நிதானத்துல கண்ணீர்விட்டுக் கதறி அழுதுட்டேன். என்ன ஆச்சரியம்... மலைக்குப் போயிட்டு வந்த ரெண்டாவது நாளே பேச ஆரம்பிச்சிட்டான், பையன்'' என்றவர், தொடர்ந்தார்...
''மனைவிக்கு ஒரு தடவை திடீர்னு உடல்நிலை மோசமாயிடுச்சு. அதே நேரத்துல, பொருளாதார ரீதியாகவும் பல கஷ்டங்கள். ஐயப்பனைவிட்டா எனக்கு வேற கதி ஏது? தினமும் வீட்ல சரணம் சொல்லும் போது, 'என் மனைவி நல்லாருக்கணும்; நாலு
காசு சேமிக்கற அளவுக்கு வாழ்க்கை உயரணும்’னு
வேண்டிக்கிட்டேன். ஐயப்பனோட கருணையால, இன்னிக்கி என் மனைவி நல்லாருக்காங்க; பசங்க எல்லாரும் வளர்ந்து, வெளிநாட்ல வேலை பாக்கறாங்க; எங்க குடும்பமும் சுபிட்சமா இருக்கு'' என்று மெய்சிலிர்க்கச் சொல்கிறார் சந்தானராமன்.
''உடல் சுத்தத்தோட மனசு சுத்தமும் சேர, முழு நம்பிக்கையோடு மாலை போட்டு விரதமிருந்து சபரிமலைக்குப் போனா, வாழ்க்கைல நல்லதொரு திருப்புமுனை ஏற்படும்'' என்றவர், கரம் குவித்து பெருங்குரலெடுத்து சரணம் சொன்னார்...
'ஸ்வாமியே சரணம் ஐயப்பா’
- இ.லோகேஸ்வரி, படங்கள் : செ.சிவபாலன்