Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

Published:Updated:
உதவலாம் வாருங்கள்!

கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய, நந்தனார் பாடல்கள் புத்தகமாகவோ சி.டியாகவோ  வெளியாகி உள்ளதா? எங்கு கிடைக்கும்?

- கிருஷ்ணாபாய் திருமூர்த்தி, சிவகாசி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உதவலாம் வாருங்கள்!

ஜாபால ரிஷியின் வம்சாவளியினர் நாங்கள். அவரது வாழ்க்கைச் சரிதத்தை அறிய விரும்புகிறேன். அவரைப் பற்றிய புத்தகம் எதுவும் உள்ளதா? எங்கு கிடைக்கும்? தகவல் தெரிந்த அன்பர்கள் தெரிவித்தால் மகிழ்வேன். மேலும், வருண பகவான் ஸ்லோகம், அஷ்டோத்ரம், வருண பகவானின் சிறப்புகள் கொண்ட புத்தகம் எங்கு கிடைக்கும்?

- டி.ஆர்.சங்கர், திண்டுக்கல்

ஸ்ரீசனி பகவான் குறித்து பாடப்பெற்ற பத்து வழிபாட்டு பாடல்களைப் பாடிப் பாராயணம் செய்ய விரும்புகிறேன். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'சனியனே! காகம் ஏறும் தம்பிரானே’ என்று வரும். இந்தப் பாடல்கள் அடங்கிய புத்தகம் எங்கு கிடைக்கும்?

- எல்.ஸவிதா, திருச்சி-4

கேரள மாநிலம் அல்லது திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களில், ஸ்ரீகால பைரவர் வழிபாடு சிறப்புற நடைபெறும் ஆலயம் ஏதேனும் உள்ளதா? ஸ்ரீகால பைரவர் வழிபாடு குறித்த புத்தகம் எங்கு கிடைக்கும்?

- எம்.வெங்கட்ராமன், திருவனந்தபுரம்

உதவலாம் வாருங்கள்!

'ஓம் முருகா உன் நாமம் என்ன இனிமை’ எனத் துவங்கும் பாடலை சீர்காழி சிவசிதம்பரம் பாடியதாக அறிகிறேன். இந்தப் பாடல் இடம்பெற்றுள்ள ஆல்பத்தின் பெயர் மற்றும் அந்த சி.டி எங்கு கிடைக்கும்? விபரம் தெரிந்த அன்பர்கள் உதவுங்களேன்.

- ஏ.ஆர்.ஆர்.சுதர்ஸனன், சென்னை-26

ன் மாமனார் குடும்பம், திருநெல்வேலி  தருவை கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டது. நாங்கள் நைத்ரூப காஸ்யப கோத்திரக்காரர்கள். எங்களின் குலதெய்வம் எது, எங்கு உள்ளது எனத் தெரியவில்லை. சிங்கிக்குளம் எனும் ஊரில் உள்ள அம்மன்தான் எங்கள் குலதெய்வம் என்கின்றனர் சிலர். விவரம் தெரிந்த அன்பர்கள், தகவல் தந்து உதவுங்களேன்!

- எஸ்.பாரதி, சென்னை-23

உதவலாம் வாருங்கள்!
##~##
'தண்டபாணி தேசிகர் பாடிய பாடல்கள் சி.டி. தொகுப்பாக வெளியாகி உள்ளதா? எங்கு கிடைக்கும்?’ என கடந்த 10.1.12 இதழில் சேலம் வாசகர் வி.சேதுமாதவன் கேட்டிருந்தார்.

தண்டபாணி தேசிகர் பாடிய பாடல்களை, சென்னை வாணி ரிக்கார்டிங் கம்பெனியினர் சி.டி. தொகுப்புகளாக வெளியிட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர் கிரி டிரேடிங் ஏஜன்ஸி மற்றும் அதன் கிளைகளில் விற்பனைக்கு கிடைக்கும் என்று சென்னை வாசகி ராஜேஸ்வரி, திருவனந்தபுரம் வாசகர் டி.வி.ராமநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

உதவலாம் வாருங்கள்!

'எங்கள் பாட்டி, என் சிறுவயதில், தேப்பெருமாநல்லூர் 'அன்னதான சிவன்’ மற்றும் நெமிலி பெரியவர் ஆகிய மகான்கள் குறித்து விவரித்துள்ளார். தற்போது, அந்த மகான்களைப் பற்றி ஏதேனும் நூல்கள் இருந்தால், படிக்க ஆவலாக இருக்கிறேன். அந்தப் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்?’  என கடந்த 27.12.11 இதழில் ஜெய்ப்பூர் வாசகர் ஸ்ரீநிவாஸ் வெங்கடேஷ் கேட்டிருந்தார்.

'இங்கு வந்து ஸ்வாமியை வழிபட்டால், மறுபிறவி இல்லை எனும் சிறப்பு உடையது கும்பகோணம் திருநாகேஸ்வரம் அருகில் உள்ள தேப்பெருமாநல்லூர் ஸ்ரீவிஸ்வநாத ஸ்வாமி திருக்கோயில். இந்த ஊரில் இருந்த மகா சிவபக்தர் சிவன், தனி ஒருவராக கையில் சொம்பு ஏந்தியபடி, திரவியங்களைச் சேகரித்து, ஸ்ரீநாகேஸ்வர ஸ்வாமி கோபுரங்களைத் திருப்பணி செய்ததுடன் பல சிவ க்ஷேத்திரங்களில் அன்னதானம் செய்தார். இதனால், அன்னதான சிவன் என்று அழைக்கப்பட்டார். காஞ்சி மகாபெரியவர், இவரின் சேவையைச் சிலாகித்துள்ளார்.  

மேலும், நெமிலி பெரியவர் எனப்படும் ஸ்ரீவைகுண்டப் பெருமாள் ஆலயம் திருத்தணியில் இருந்து நாகலாபுரம் செல்லும் வழியில் சுமார் 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கையில் ரேகை பளிச்சென்று தெரிய... அமர்ந்த கோலத்தில் அருள்கிறார் ஸ்ரீவைகுண்டப் பெருமாள்’ என்று சென்னை வாசகி ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும், அவர் அனுப்பி வைத்துள்ள விவரங்கள், ஜெய்ப்பூர் வாசகர் ஸ்ரீநிவாஸுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

'கேரளாவின் பந்தனம்திட்டா தாலுகாவில், பித்ரு காரியம் செய்வதற்கு ஏற்ற ஆலயம் இருக்கிறதாமே? அந்தக் கோயில் எங்கே இருக்கிறது? அங்கு அருள்பாலிக்கும் ஸ்வாமியின் திருநாமம் என்ன? தமிழகத்தில், பித்ரு தோஷம் போக்குவதற்கும் பித்ரு காரியங்களைச் செய்வதற்குமான தலங்கள் என்ன?’ என கடந்த 27.12.11 இதழில் கூந்தலூர் வாசகர் வி.சந்திரசேகரன் கேட்டிருந்தார்.

கேரளா மாநிலத்தில் உள்ள திருநாவாய் என்ற ஊரில் உள்ள திருநாவாய் முகுந்தன் பெருமாள் கோயிலுக்கு எதிரே பாரதப்புழா ஆறு செல்கிறது. இந்தத் தலத்தில் பித்ரு காரியங்களை நிறைவேற்றுவது, காசியில் செய்வதற்கு நிகரானது என்பார்கள். சென்னை - கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் சென்று, திருநாவாய் என, ஸ்டேஷனில் இறங்கவேண்டும் என்று வாசகர்கள் சென்னை தேவநாதன், திருச்சி கனகசபாபதி ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும், கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள திருநெல்லி, திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள திருவல்லம், வர்க்கலா ஆகிய தலங்களில் பித்ரு காரியம் செய்வது விசேஷம் என்று சென்னை வாசகர்கள் ராஜேஸ்வரி மற்றும் ராஜகோபாலன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் திருவையாறு, திருச்சி காவிரிக் கரை, நாகை மாவட்டம் பேரளம் அருகில் திலதர்ப்பணபுரி, ராமேஸ்வரம், பவானி கூடுதுறை, சீர்காழி அருகில் திருமுல்லைவாசல் முல்லை வனநாதர் ஆலயம், சென்னை அருகில் செங்கல் பட்டு-திருக்கழுக்குன்றம் வழியிலுள்ள நென்மேலி ஸ்ரீலக்ஷ்மி நாராயணர் ஆலயம் ஆகியவை பித்ரு காரியத்துக்கு உகந்தவை என  சென்னை வாசகர்கள் தேவநாதன் ராஜகோபாலன், கோவை வாசகர் கதிர்வேல் மற்றும் கடலூர் வாசகர் ஜவகர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

'தணிகைமலை சாரேனோ சாமியழகைப் பாரேனோ’ என்று தொடங்கும் பாட்டு ஒன்று, சிறுவயதில் பூஜைகளில் பாடி வழிபட்டதாக ஞாபகம்.  அன்பர்கள் எவருக்கேனும் முழுப் பாடலும் தெரிந்தால், அனுப்பி உதவுங்கள்’ என கடந்த 24.1.12 இதழில் சென்னை வாசகி டி.சந்திரிகா கேட்டிருந்தார்.

வள்ளலார் அருளிய 'திருவருட்பா அமுதம்’ என்று நூலில் 'பாராயணம் திரட்டு’ என்ற பகுதியில் அந்தப் பாடல் உள்ளது எனத் தெரிவித்ததுடன் வாசகர்கள் சேலம் சுப.சௌந்தரவல்லி, தர்மபுரி கிருஷ்ணன், பெங்களூரு நடராஜன், திருவனந்த புரம் ராமநாதன், கோவை நந்திவர்மன், திருப்பூர் ராமசாமி ஆகியோர் பாடலின் பிரதியை அனுப்பி யுள்ளனர். அந்தப் பிரதி, வாசகி சந்திரிகாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism