Published:Updated:

உதவலாம்...வாருங்கள் !

உதவலாம்...வாருங்கள் !

உதவலாம்...வாருங்கள் !

உதவலாம்...வாருங்கள் !

Published:Updated:
உதவலாம்...வாருங்கள் !
##~##
பௌ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ர்ணமி தினங்களில், வலம்புரிச் சங்கின் மூலம்  ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். அபிஷேகம்  முடிந்து வலம்புரிச் சங்கை, 'யதா ஸ்தானம்’ செய்யும் முன்பு சங்குக்கு அர்ச்சனை செய்யவேண்டும் என் கின்றனர் சிலர். சங்கு பூஜை என தனியே உள்ளதா? இதற்கான புத்தகம் ஏதும் உள்ளதா? விவரம் தெரிந்த வாசக நண்பர்கள், தகவல் தந்து உதவுங்கள்.

- என்.ராதாகிருஷ்ணன், நல்லாத்தூர்

ன்பான கணவன், இனிமையான இல்லறம் என அமைந்து, மாங்கல்ய பலத்துடன் நிம்மதியாக வாழ ஏதேனும் ஸ்லோகங்கள் உள்ளனவா? தினமும் வீட்டுப் பூஜை அறையில் அமர்ந்து, என்ன பாராயணம் செய்யவேண்டும்? விவரம் தெரிந்த வாசக சகோதரர்கள், தகவல் தந்து உதவுங்களேன்!

- டி.சீதாலட்சுமி, சென்னை-50

உதவலாம்...வாருங்கள் !

ஸ்ரீசக்ர பூஜை செய்ய விரும்புகிறேன். ஆனால், எப்படிச் செய்வது என்று தெரியவில்லை. இதை, முறைப்படி கற்றுக் கொடுப்பவர் எவரேனும் இருக்கிறார்களா? இதற்கான மையங்கள், வழிபாட்டு மன்றங்கள் ஏதும் உள்ளனவா? தகவல் தெரிந்த அன்பர்கள் உதவுங்களேன்!  

- பிரபுராம்குமார், சிவகாசி (வாய்ஸ்மெயில்)

ழந்த செல்வம் மற்றும் புகழைத் திரும்பப் பெறுவதற்கு, ஸ்ரீகார்த்த வீர்யார்ஜுன ராஜாவை வணங்க வேண்டும் என்கின்றனர். இவருக்குக் கோயில் உள்ளதா? அல்லது, ஏதேனும் கோயிலில் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறாரா? இவருடைய திருவுருவப்படம் எங்கு கிடைக்கும்? எப்படி வழிபடவேண்டும்? விவரம் தெரிந்த அன்பர்கள், தகவல் தந்தால் பேருதவியாக இருக்கும்.

- மரகதா ராஜன், சென்னை-93

பூரான் கடி விஷம், தோல் நோய்கள், வெண் குஷ்டம் போன்றவற்றைப் போக்கும் வல்லமை கொண்ட வெள்ளழிஞ்சில் (செம்மரம் என்றும் தோதகத்தி என்றும் சொல்வார்கள்) என்னும் மரம், எந்தத் தலத்தின் விருட்சமாகப் போற்றப்படுகிறது? உங்கள் ஊரில் உள்ள ஆலயத்தில் இதுதான் ஸ்தல விருட்சம் எனில், விவரம் அனுப்பி உதவுங்களேன்!

- பூர்ணிமா, வேலூர்

'பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால்தான் இந்த ஆலயத்துக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க முடியும்’ எனச் சிறப்பித்துச் சொல்லப்படும் சிவாலயம் திருவாரூர், குடவாசல், கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு நடுவே உள்ளதாமே?! இந்தத் தலத்துக்கு எப்படிச் செல்வது? கோயிலின் தொலைபேசி எண் என்ன? விவரம் தெரிந்த வாசக அன்பர்கள் தகவல் தாருங்களேன்!

- சீதாராமன், சென்னை

'நலியச் செய்யும் நோய்கள் நீங்கிட...’ எனும் முருகப்பெருமானின் துதிகள் கொண்ட புத்தகம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நூல் எங்கு கிடைக்கும்? விவரம் அறிந்தவர்கள் தகவல் தந்து உதவுங்களேன்.

- எஸ்.ராதா, ராமநாதபுரம்

உதவலாம்...வாருங்கள் !

கலைகளில் சிறந்து விளங்க செல்ல வேண்டிய ஸ்தலங்கள் மற்றும் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள் ஆகியவை குறித்து கோலார்தங்கவயல் வாசகர் மனிஷ் கேட்டிருந்தார்.

உதவலாம்...வாருங்கள் !

'ஆதாரம் சர்வ வித்யானாம்’ எனத் துவங்கும் ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்து, ஸ்ரீஹயக்ரீவரை ஆராதிக்கவேண்டும். அதேபோல், தினமும் குமரகுருபரர் அருளிய 'சகலகலாவல்லி’யைப் படித்துவர, பலன் உறுதி! ஸ்ரீஹயக்ரீவருக்கு வியாழக் கிழமை தோறும் அர்ச்சனை செய்தும், கூத்தனூர் ஸ்ரீசரஸ்வதிதேவியை தரிசித்தும் வழிபட, கலைகளில் சிறந்து விளங்கலாம் என்று மதுரை வாசகி மீனாக்ஷி பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.

வசிஷ்ட மகரிஷி அருளிய, தாரித்ரிய தஹந சிவ ஸ்தோத்திரம் குறித்து குலசேகரம்- செருப்பாலூர் வாசகர் சத்தியன் கேட்டிருந்தார்.

இந்த ஸ்லோகத்தின் பிரதியை பேகூர் வாசகர் எம்.ராமசாமி, சென்னை வாசகர்கள் கே.சென்னியப்பன், ஆர்.எம்.சுந்தர், ஆர்.சபீதாதேவி, டி.கே.சூரிய

நாராயணன், எஸ்.விசாலாட்சி, எஸ்.ரவி, பத்மினி பாஸ்கர், புதுடெல்லி வாசகர் ஆர்.ஜி.நாராயணன், நாச்சியார்கோவில் வாசகர் கோ.ஞானசேகரன், கோவை பேரூர் வாசகி வி.ஜி.விஜயலட்சுமி, கடலூர் கூத்தப்பாக்கம் வாசகர் எஸ்.நாராயணன், செகந்திராபாத் வாசகி வி.சியாமளாரமணி, பெருங்களத்தூர் எஸ்.டி நடராஜன் ஆகியோர் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த ஸ்லோகத்தை தினமும் மூன்று வேளை படித்து வந்தால், பிறவிக்கடன், பொருளாதாரக் கடன் ஆகியன நீங்கும்; ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழலாம். கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருச்சேறை தலத்தில் ஸ்ரீசாரபரமேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ருண விமோசன லிங்கேஸ்வரர் சந்நிதி உள்ளது. 11 திங்கட்கிழமைகள் தொடர்ந்து வந்து, இவரைப் பிரார்த்தித்து, இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து வழிபட்டால், அனைத்துப் பிரச்னைகளும் நீங்கி, எந்தக் கடனுமின்றி நிம்மதியாக வாழலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஒன்பது ஸ்லோகங்கள் கொண்ட இவை, சிவ ஸ்தோத்திரங்கள் எனும் நூலில் உள்ளன. இந்த நூல், சென்னை மயிலாப்பூர் கிரி டிரேடிங் உள்ளிட்ட பல கடைகளிலும் கிடைக்கும் எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.

''கங்கா சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் எங்கு கிடைக்கும்? இந்த ஸ்தோத்திரம் எந்த நூலில் உள்ளது?'' என்று சந்தவாசல் வாசகர் சம்பத் கேட்டிருந்தார்.

உதவலாம்...வாருங்கள் !

''என் கணவர் சுப்ரமணியன் சுமார் 20 வருடங் கள், கங்கைக் கரையில் வசித்து, கங்கையின் புனிதத்தை நன்கு உணர்ந்தவர். மேலும், ஸ்ரீகங்கா சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தை அனுதினமும் ஜபித்து வந்தவர். அவரது நினைவாக, சம்ஸ்கிருதத்தில் உள்ள இந்த ஸ்தோத்திரத்தை மிகுந்த கவனத்துடனும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் தமிழாக்கம் செய்தோம். தவிர, ஹிந்தி எழுத்துக்களில் எந்தத் தவறும் நேர்ந்துவிடக்கூடாதே என்று ஹிந்தி அறிந்தவர் களைக் கொண்டு அச்சிட்டுப் கையடக்கப் புத்தகமாகக் கொண்டு வந்தோம். விற்பனை நோக்கமின்றி, தமிழ் மக்களுக்கு இலவசமாகத் தரும் நோக்கத்தில், ஏராளமான அன்பர்களுக்கு அனுப்பிவருகிறோம்'' என்று வாய்ஸ் மெயில் மூலம் (044 42890021) தகவல் தெரிவித்த சென்னை வாசகி சுஜாதா சுப்ரமணியன், சந்தவாசல் வாசகர் சம்பத்துக்கு வழங்கும்படி அந்தப் புத்தகத்தை அனுப்பியுள்ளார்.

அந்த நூல், வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

'நவக்கிரக காயத்ரி மற்றும் நவக்கிரக ஸ்துதி ஆகியவை எந்த நூலில் உள்ளன? எங்கு கிடைக்கும்? அறிந்த அன்பர்கள் உதவுங்களேன்’ என்று கேட்டிருந்தார் சென்னை வாசகி டாக்டர் பி.எஸ்.சாந்தகுமாரி.

நவக்கிரக ஸ்துதிப் பாடல்கள், நவக்கிரகங்களுக்கு உரிய மலர்கள் மற்றும் தானியங்கள் குறித்த விவரங்களும், நவக்கிரக அஷ்டோத்திர சத நாமாவளி மற்றும் நவக்கிரக காயத்ரி மந்திரம் அடங்கிய புத்தகப் பிரதியை தருமபுரி மாக்கனூர் வாசகர் ஆ.கிருஷ்ணன், சென்னை வாசகர் ஜி.கிருஷ்ணரத்னம் ஆகியோர் அனுப்பியுள்ளனர்.

வாசகி சாந்தகுமாரிக்கு, இந்தப் பிரதி அனுப்பி வைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism