'பஞ்சாட்சரம்’ புத்தகத்தை தமிழில் படிக்க விரும்புகிறேன். எங்கு கிடைக்கும்?

- கிருஷ்ணாம்பாள் ஸ்ரீநிவாசன், கரமனை

தந்திர சூடாமணி, சிவ சரித்திர தந்திரம், தாட்சாயினி தந்திரம், மோகினி இருதய தந்திரம், சித்த சாமர தந்திரம் மற்றும் ஹ்ருதய தந்திரம் ஆகிய நூல்கள் எங்கு விற்பனைக்கு கிடைக்கும்? தகவல் தெரிந்தவர்கள் தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.

- சா.அனந்தகுமார், கன்யாகுமரி

. எ.ங்கள் மூதாதையர், காட்டேரி பாப்பாத்தி அம்மனை குலதெய்வமாக வழிபட்டு வந்தார்கள் என்று அறிகி றோம். மேலும் ஆத்தூர் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்ததாகவும் தெரிகிறது. தமிழகத்தில், அந்த அம்மன் கோயில் எங்கு உள்ளது? அம்மனை வழிபடும் முறைகள் என்ன? இதுகுறித்த விவரங்களை அன்பர்கள் தெரிவித்தால், நாங்கள் குல தெய்வ வழிபாடு செய்ய உதவியாக இருக்கும்..
- என்.ரகோத்தமன், சேலம்

வீரசேகர ஞான தேசிகர் மற்றும் கஞ்சனூர் ஸ்ரீவைத்தியலிங்க சுவாமிகள் ஆகியோரது உரை நூல்களுடன் கூடிய 'ஞான வாசிட்டம்’ எனும் வேதாந்த நூலைப் படிக்க ஆவலாக உள்ளேன். இந்த நூல் எந்த பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது? எங்கு கிடைக்கும்? விவரம் சொல்லுங்களேன்!

- வ.தியாகமணி, சென்னை-37

ஆலமரத்தடி ஐயனை வழிபடும் முறைகள் என்ன? ஐயனைத் துதிக்க தமிழ்ப் பாடல்கள் மற்றும் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் ஏதும் உள்ளனவா? அவை எங்கு கிடைக்கும்? அன்பர்கள் எவரிடமேனும் இருந்தால் பிரதி எடுத்து அனுப்பி உதவுங்கள்.

- ஏ.ஆர்.ராமச்சந்திரன், திருச்சி

'நூற்றெட்டு அம்மனின் திருவுருவங்களும் கொண்ட மிகப்பெரிய அட்டை, பல கடைகளில் தேடியும் கிடைக்கவில்லை. எங்கு கிடைக்கும்? அன்பர்கள் எவரிடமேனும் இருந்தால் அனுப்பி வைத்து உதவுங்களேன்’ என கடந்த 7.2.12 இதழில் புதுச்சேரி வாசகர் டி.ரவி கேட்டிருந்தார்.

108 அம்மனின் திருவுருவப்படம் சென்னை வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில், ரத்தினமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு 108 அம்மன் திருக்கோயிலில் கிடைக்கும் என்று சென்னை வாசகர் கே.ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

'என் கொள்ளுத் தாத்தா ஆதம்பாவூர் எனும் கிராமத்தில் வாழ்ந்தார் என்றும், அங்கு பிரபலமான ஜோதிடராக இருந்தார் என்றும் அறிந்தோம். ஆதம்பாவூர் எனும் கிராமம் எங்கு உள்ளது? அங்கே முக்கியமான ஆலயங்கள் ஏதும் உள்ளனவா? விவரம் அறிந்த அன்பர்கள், தகவல் தந்தால் மகிழ்வேன்’ என கடந்த 7.2.12 இதழில் சென்னை வாசகி ஆர்.கலாவதி கேட்டிருந்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது ஆதம்பாவூர் கிராமம். நன்னிலம் பேருந்து நிலையத் தில் இருந்து, குப்பம் கிராமத்துக்குச் சென்றால், அங்கிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் ஆதம்பாவூர் அமைந்துள்ளது. ஆனால் அந்த ஊரில் என்னென்ன கோயில்கள் உள்ளன என்பது தெரியவில்லை என சென்னை சேலையூர் வாசகர் எஸ்.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

'திருப்பூர் மாவட்டம் தாராபுரத்துக்கு அருகில் ஸ்ரீசடையப்ப சுவாமி திருக் கோயில் உள்ளதாமே? ஆனால், எந்த ஊரில் உள்ளது என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை. இந்தக் கோயில் எங்கு உள்ளது? எப்படிச் செல்வது? அறிந்த அன்பர்கள் தகவல் தந்து உதவினால், கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வழிபட உதவியாக இருக்கும்’ என கடந்த 13.12.11 இதழில் சென்னை வாசகர் டி.அண்ணாமலை கேட்டிருந்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் அப்படி யரு கோயில் இருப்பது குறித்துத் தெரியவில்லை. நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழியில் உள்ள மேலாங்கோடியில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது வில்லுக்குறி. அங்கிருந்து வலது பக்கம் பிரியும் சாலையில், திருவிடைக்கோடு எனும் பகுதியில் ஸ்ரீசடையப்ப சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. கே.சாய்குமார் என்பவர் எழுதிய 'நாஞ்சில் நாட்டு சிவாலயம்’ புத்தகத்தில் இந்தக் கோயில் குறித்த விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம் என்று சென்னை வாசகர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

'தினசரி பூஜையில், ஸ்ரீபாம்பன் சுவாமிகள் இயற்றிய ஸ்ரீசண்முக கவசம் பாராயணம் செய்து வழிபட விரும்புகிறேன். இந்தக் கவசம் எந்த நூலில் உள்ளது? எங்கு கிடைக்கும்?’ என கடந்த 7.2.12 இதழில் மயிலாடுதுறை வாசகர் ஜி.டி.சுப்ரமணியன் கேட்டிருந்தார்.

சென்னை மயிலாப்பூர் கிரி டிரேடிங் ஏஜன்ஸி மற்றும் அதன் கிளை நிறுவனங்களில் 'ஸ்ரீசண்முக கவசம்’ புத்தகம் மற்றும் சி.டி ஆகியன விற்பனைக்குக் கிடைக்கும் என சென்னை வேளச்சேரி வாசகர் இரா.கல்யாணசுந்தரம், மதுரை வாசகி மீனாட்சி பட்டாபிராமன், குடியாத்தம் கிருபானந்தம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஏகம் பதிப்பக வெளியீடான 'முருகன் அருள்’ புத்தகத்தில், ஸ்ரீபாம்பன் சுவாமிகள் இயற்றிய ஸ்ரீசண்முக கவசம், குமாரஸ்தவம், சண்முக கவசத்தின் மகிமை போன்றன இடம்பெற்றுள்ளன என வேலூர் வாசகி எஸ்.ஸ்ரீரேகா, சென்னை ஸ்ரீபப்ளிகேஷன்ஸ் வெளியீடான 'நித்ய பூஜாமலர்’ புத்தகத்தில் ஸ்ரீசண்முக கவசம் இடம்பெற்றுள்ளது என்று திருவனந்தபுரம் வாசகர் ராமநாதன், சென்னை அம்மன் பதிப்பக வெளியீடான ஸ்ரீசுப்ரமண்யர் ஸ்தோத்திர மாலா புத்தகத்தில் உள்ளது என சென்னை வாசகர் கணபதி ஆகியோர் தெரிவித்துள்ளனர். சி.என்.நாச்சியப்பன் என்பவர் தொகுத்த 'கவசக் கொத்து’ புத்தகத்தில் உள்ளது என கோவை வாசகர் கிருஷ்ணா நாராயணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஸ்ரீசண்முக கவசம் புத்தகப் பிரதியை வாசகர்கள் சேலையூர் ஆர்.விஜயபாரதி, பெங்களூரு ஜி.ஏ.கிருஷ்ணமூர்த்தி, மும்பை கே.சங்கரராமன், திருச்சி சு.தெய்வகுமார், அரியலூர் த.வீராசாமி, சென்னை வாசகர்கள் பா.ஜவகர், கே.ராஜகோபால், எம்.நடராஜன், ஏ.கோபாலகிருஷ்ணன் மற்றும் செல்வி ஆகியோர் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த பிரதிகளுடன், இசையமைப்பாளர் பிரசாத் கணேஷ் அனுப்பிவைத்துள்ள ஸ்ரீசண்முக கவசம் புத்தகமும், சி.டியும் மயிலாடு துறை வாசகர் ஜி.டி.சுப்ரமண்யத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

பல வருடங்களாக கடுமையான கழுத்து வலியினால் அவதிப்படுவ தாகவும், அதிலிருந்து நிவாரணம் பெற மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகள் அல்லது பாராயணம் செய்ய வேண்டிய ஸ்லோகங்கள் உள்ளதா எனவும், சென்னை வாசகி ஆர்.ஏ.பூரணி கடந்த 21.12.11 இதழில் கேட்டிருந்தார்.

கடந்த 24.1.12 இதழில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சஷ்டி கவசம், சண்முக கவசம், சுப்ரமண்ய புஜங்கம் பாராயணம் செய்து வழிபடலாம் என்று, சென்னை வாசகர் ஆர்.கே.சுந்தரம் தெரிவித்திருந்தார்.

தற்போது, திருநீற்றுப்பதிகத்தை யும் பாராயணம் செய்தால் நல்லது என கோவை வாசகர் சி.கதிர்வேல் அனுப்பிவைத்திருந்த அந்த நூல் வாசகி பூரணிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.