Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

Published:Updated:
உதவலாம் வாருங்கள்!
##~##
'க

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ர்மவிபாகம்’ எனும் பரிகார நூல் தமிழில் வெளி வந்துள்ளதா?  எங்கு கிடைக்கும்? படிக்க ஆவலாக உள்ளேன்.

- பி.பி.கோதை, சிதம்பரம்

ஸ்ரீஅத்யாத்ம ராமாயணம் நூலில் பால காண்டம்  பகுதியில் (பிரதம சர்க்கத்தில்), 'ராமம் வித்திம் பரப் ப்ரும்ம’ என்று தொடங்கும் ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து வழிபட விரும்புகிறேன். இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்? அல்லது, அன்பர்கள் எவரிடமேனும் இருந்தால், பிரதி எடுத்து அனுப்பி உதவுங்கள்.

- கே.ஆர்.அனந்தலக்ஷ்மி, சென்னை-5

உதவலாம் வாருங்கள்!

ன் அம்மா, 'காலாடு கிருஷ்ணா...’ மற்றும் 'காலாடும் மன்னார்சாமி’ என்ற மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி குறித்த பாடல் மற்றும் 'மங்களம் ருக்மிணீ ரமணாய ஸ்ரீபதே... மங்களம் ரமணீய மூர்த்தே...’ என்று தொடங்கும் ஆரத்திப் பாடலையும் தினமும் பாடி, பூஜை செய்வதை சிறு வயதில் பார்த்திருக்கிறேன். இந்தப் பாடல்களை முழுமையாக அறிந்துகொள்ள விரும்புகிறேன். தெரிந்த அன்பர்கள் எழுதி அனுப்புங்களேன்.

- ஜானகி ஸ்ரீநிவாஸன், சென்னை-4

பாம்பே சகோதரிகள் தமிழில் பாடிய 'விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம்’ ஆகியவை புத்தகமாக வெளியாகி உள்ளதா? எங்கு கிடைக்கும்? மேலும், நவாவரண பூஜை குறித்த விபரங்கள் தேவை. தகவல் தெரிந்த அன்பர்கள் உதவினால் மகிழ்வேன்.

- கே.எஸ்.முத்து, தென்காசி

நாங்கள் வன்னியர்குல சத்திரியர் இனத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் குலதெய்வமான பெரியாச்சி கோயில், நாகை மாவட்டத்தில், வேதாரண்யம் அல்லது அதற்கு அருகில் இருப்பதாகச் சொல்வர். கோயில் தெரியாததால், குலதெய்வ வழிபாடு செய்ய இயலாமல் தவிக்கிறோம். நாகை மாவட்டத்தில், வேறு எங்கேனும் பெரியாச்சி கோயில் உள்ளதா? எங்கு உள்ளது? எப்படிச் செல்வது? வழிகாட்டுங்களேன்!

- எஸ்.தமிழ்ச்செல்வன், சிதம்பரம்

உதவலாம் வாருங்கள்!

'ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, உத்த வருக்கு அருளியதாகச் சொல்லப்படும் 'உத்தவ புராணம்’ படிக்க ஆவலாக உள்ளேன். அந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்?’ என கடந்த 7.2.2012 இதழில் திருச்சி வாசகர் ஆர்.கணேசன் கேட்டிருந்தார்.

உத்தவ புராணம் புத்தகம் தமிழ் மூலத்தில் அருமையான விளக்க உரையுடன், 'கீதா பிரஸ், 8/1 எம், ரேஸ் கோர்ஸ் சாலை, ரேஸ் கோர்ஸ், கோவை’ என்ற முகவரியில் விற்பனைக்குக் கிடைக்கும் என வாசகர்கள் கோவை சி.கிருஷ்ண நாராயணன், சென்னை ஆர்.விஜய பாரதி ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும், வர்த்தமானன் பதிப்பக வெளியீடான ஸ்ரீமத் பாகவதம் புத்தகத்தில், 'அவதூதர் சொன்னவை’ என்ற தலைப்பில் வ.ஜோதியின் உரைநடையில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உத்தவருக்கு அருளியவை இடம்பெற்றுள்ளன. 'வர்த்தமானன் பதிப்பகம், 21, ராமகிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17’ என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் எனவும், ஸ்ரீபகவன் நாமா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட தமிழ் மூலம் மற்றும் விளக்க உரையுடன் கூடிய ஸ்ரீமத் பாகவதம் நூலில், 'உத்தவருக்கு உபதேசம்’ உள்ளது; ஸ்ரீபகவன் நாமா பப்ளிகேஷன்ஸ், ராம மந்திரம், 2, விநாயகம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33’ என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்றும் புதுக்கோட்டை வாசகர் கே.நாராயணன் தெரிவித்துள்ளார்.

உதவலாம் வாருங்கள்!

'கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய, நந்தனார் பாடல்கள் புத்தகமாகவோ சி.டியாகவோ வெளியாகி உள்ளதா? எங்கு கிடைக்கும்?’ என கடந்த 21.2.2012 இதழில் சிவகாசி வாசகி கிருஷ்ணாபாய் திருமூர்த்தி கேட்டிருந்தார்.

கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய 'நந்தனார் பாடல்கள்’ சென்னை சங்கீதா லைவ் காஸெட்ஸ் நிறுவனத்தாரால் சி.டியாக வெளியிடப்பட்டுள்ளது. 'சங்கீதா, தி மாஸ்டர் ரிக்கார்டிங் கம்பெனி, எண்-25, 3-வது தெரு, குமரன் காலனி, வடபழனி, சென்னை’ என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், நந்தனார் சரித்திர கீர்த்தனை நூல் வடிவத்தில், 'நியூ புக் லேண்ட்ஸ், 52-சி, அடித்தளம், வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை-17’ என்ற முகவரியில் விற்பனைக்கு கிடைக்கும் என்று சென்னை வாசகி இராஜேஸ்வரி மதி தெரிவித்துள்ளார்.

'என் மாமனார் குடும்பம், திருநெல்வேலி தருவை கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டது. நாங்கள் நைத்ருப காஸ்யப கோத்திரக்காரர்கள். எங்களின் குலதெய்வம் எது, எங்கு உள்ளது என்றே தெரியவில்லை. சிங்கி குளம் எனும் ஊரில் உள்ள அம்மன்தான் எங்கள் குலதெய்வம் என்கின்றனர் சிலர். விவரம் தெரிந்த அன்பர்கள், தகவல் தந்து உதவுங்களேன்’ என கடந்த 21.2.12 இதழில் சென்னை வாசகி எஸ்.பாரதி கேட்டிருந்தார்.

'நாங்களும் திருநெல்வேலி மாவட்டம் சிங்கிகுளம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நைத்ருப காஸ்யப கோத்திரக் காரர்களே. ஐந்து வருடங்களுக்கு முன்பு, சாஸ்தாதான் எங்கள் குலதெய்வம் என்றும், சிங்கிகுளம் அருகில் உள்ள வாகைக்குளம் இடத்தில் சாஸ்தா கோயில் அமைந்துள்ளது என்றும் அறிந்து, குலதெய்வ வழிபாட்டை செய்து வருகிறோம். அருகிலேயே, மலைமேல் பகவதி அம்மனுக்கும் ஆலயம் உள்ளது. ’ என்று சென்னை வாசகி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

'சேங்காலிபுரம் ஸ்ரீஅனந்தராம தீட்சிதர் இயற்றிய 'ஸ்ரீஜய மங்கள ஸ்தோத்திரம்’ இரண்டு பாகங்களாக உள்ளதாமே! இந்தப் புத்தகத்தை வீட்டில் வைத்துப் படித்து வந்தால், நன்மைகள் பெருகும் என்பார்கள். இந்த நூல் எங்கு கிடைக்கும்? எந்த பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்?’ என கடந்த 7.2.2012 இதழில் புதுச்சேரி வாசகர் எஸ்.மோகன முரளிதரன் கேட்டிருந்தார்.

சேங்காலிபுரம் ஸ்ரீஅனந்தராம தீட்சிதர் இயற்றிய ஸ்ரீஜய மங்கள ஸ்தோத்திரம் புத்தகங்கள், சேலம் லிட்டரரி பிரஸ் நிறுவனத்தாரால் வெளியிடப் பட்டுள்ளன. 'லிட்டரரி பிரஸ், எண்.4-ஏ, பஜார் தெரு, சேலம்’ என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம். மேலும், சென்னை மயிலாப்பூரில் உள்ள கிரி டிரேடிங் ஏஜென்ஸி மற்றும் அதன் கிளைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என வாசகர்கள் திருப்பூர் த.சுவாமிநாதன், மும்பை பி.சுப்ரமணியம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

'ஸ்ரீசனி பகவான் குறித்து பாடப்பெற்ற பத்து வழிபாட்டு பாடல்களைப் பாடிப் பாராயணம் செய்ய விரும்புகிறேன். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'சனியனே! காகம் ஏறும் தம்பிரானே’ என்று வரும். இந்தப் பாடல்கள் அடங்கிய புத்தகம் எங்கு கிடைக்கும்?’ என கடந்த 21.2.2012 இதழில் திருச்சி வாசகி எல்.ஸவிதா கேட்டிருந்தார்.

'தேவரெண் திசைக்கதிபர்’ என்று தொடங்கும் சனி பகவான் ஸ்தோத்திரப் பாடல்கள், 'சகல சௌபாக்கியங்கள் தரும் ஸ்ரீதுர்கா வழிபாடு’ எனும் புத்தகத்தில் ஸ்ரீசனி பகவான் கவசம் என்ற தலைப்பில் அமைந் துள்ளது. அந்தப் புத்தகம் 'செல்வ நிலையம், புதுமண்டபம், மதுரை’ என்ற முகவரியிலும், சென்னை கலைமகள் பதிப்பகம் மற்றும் சென்னை மயிலாப்பூர் கிரி டிரேடிங் ஏஜன்ஸி மற்றும் அதன் கிளைகளிலும் விற்பனைக்கு கிடைக்கும் என பெங்களூரு வாசகி சுகந்தி மணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், சனி பகவான் ஸ்தோத்திரப் பாடல்களை வாசகர்கள் பொள்ளாச்சி டி.மகேஸ்வரி, திருவனந்தபுரம் டி.வி.ராம நாதன், அரியலூர் த.வீராசாமி, மதுரை பெ.மகேஸ்வரி, சென்னை இராஜேஸ்வரி மதி, தருமபுரி ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் அனுப்பி வைத்துள்ளனர். ஸ்தோத்திரப் பாடல்களின் பிரதி வாசகி எல்.ஸவிதாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism