நந்தன வருட ராசிபலன்கள்
ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!
ன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.
##~##
காபாரதத்தின் அனைத்து ஸ்லோகங்களுக்கும் சம்ஸ்கிருதம் மற்றும் தமிழில் எவரேனும் விளக்கங்களைத் தந்துள்ளனரா? அந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்?

- ஷரண்கார்த்தி, சென்னை-53

ஸ்ரீஅப்பைய தீட்சிதர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் மீது கிரந்தம் இயற்றியதாகவும், அந்த ஸ்லோகங்களை 'அபிதகுசாஸ்தவம்’ என்று சொல்வார்கள் என்றும் அறிந்தேன். அவை புத்தகமாக வெளியாகி உள்ளதா? எங்கு கிடைக்கும்?

- பா.சந்திரமௌலி, தருமபுரி

உதவலாம் வாருங்கள்!

ல வருடங்களாக, எங்களின் குலதெய்வம் எது என்றே தெரியாமல் இருந்து வந்தோம். தற்போது எங்கள் குலதெய்வம் ஸ்ரீகாளியம்மன் என்றும், கேரளாவின் பாலக்காடு கல்பாத்தி சேகரிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் அவளுக்கு ஆலயம் உள்ளது என்றும் சொல்கின்றனர். அப்படியரு கோயில் அந்தப் பகுதியில் உள்ளதா? விவரம் தெரிந்த அன்பர்கள் தகவல் தாருங்களேன்!

- பார்வதி ஷர்மா, சென்னை-53

ம்பர் இயற்றிய (அனைத்து மூலக் கதைகளும் அடங்கிய) கம்பராமாயணம் நூல் எங்கு கிடைக்கும்?

- ஆர்.அழகர்சாமி, மதுரை

ஸ்ரீஆதிசங்கரர் அருளிய திரிபுரசுந்தரி மானஸ பூஜா ஸ்தோத்திரம், ம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்திரம், தேவி சதுஷ் ஷட்யுபசார ஸ்தோத்திரம் ஆகிய நூல்களை தமிழில் அர்த்தத்துடன் படிக்க விரும்புகிறேன். எங்கு கிடைக்கும்?

- ஜெயலெட்சுமி சர்மா

வேம்படிக் கருப்பசாமிக்கு கோயில் எங்கேனும் உள்ளதா? நாடார் சமூகத்தவர்கள் பலரும் குலதெய்வமாக வணங்கி வழிபடும் கோயிலாம் அது! என் நண்பர் குடும்பம், குலதெய்வ வழிபாடு செய்யாமல் நீண்டகாலமாக தவித்து வருகிறது. மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேம்படிக் கருப்பசாமி கோயில் இருந்தால், அதற்கான வழியைச் சொல்லுங்களேன்!  

- கல்யாணி ஹரி

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

'கேரள மாநிலம் அல்லது திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களில், ஸ்ரீகாலபைரவர் வழிபாடு சிறப்புற நடைபெறும் ஆலயம் ஏதேனும் உள்ளதா? ஸ்ரீகாலபைரவர் வழிபாடு குறித்த புத்தகம் எங்கு கிடைக்கும்?’ என கடந்த 21.2.12 இதழில் திருவனந்தபுரம் வாசகர் எம்.வெங்கட்ராமன் கேட்டிருந்தார்.

ஸ்ரீகால பைரவர் வழிபாடு குறித்த முழு தகவல்களும் அடங்கிய ஸ்ரீகால பைரவர் பூஜா மந்திரங்கள் புத்தகம், வன்னி விநாயகர் புத்தக நிலையம், 58-ஏ, அருள்மிகு ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயில், மதுரை-1 என்ற முகவரியில் விற்பனைக்குக் கிடைக்கும்.

மேலும், மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் திருக்கோயில், மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் உள்ள ஸ்ரீகால பைரவர் கோயில், தஞ்சை பெரியகோயில், காரைக்குடி -  திருப்பத்தூர் ஸ்ரீபைரவர் கோயில், திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கோயில், நெல்லை மாவட்டம் இலஞ்சி ஸ்ரீகுமரன் கோயில், கும்பகோணம் அருகில் சிவபுரம் சிவகுருநாதன் கோயில், கொல்லிமலை ஸ்ரீஅறப்பளீஸ்வரர் கோயில், ஆகிய தலங்களில் ஸ்ரீகாலபைரவர் வழிபாடுகள் சிறப்புற நடைபெறும். ஸ்ரீஞான பைரவர், ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷ பைரவர், ஸ்ரீஉன்மத்த பைரவர், ஸ்ரீயோக பைரவர் ஆகிய நான்கு பைரவ மூர்த்திகளையும் ஸ்ரீசதுர்கால பைரவர் என்ற திருப்பெயருடன் கும்பகோணத்துக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள திருவிசநல்லூர் ஸ்ரீசிவயோகி நாத சுவாமி கோயிலில் தரிசிக்கலாம் என வாசகர்கள் சென்னை இராஜேஸ்வரி மதி, மதுரை பெ.மகேஸ்வரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவர்கள் இருவரும் அனுப்பி வைத்துள்ள ஸ்ரீபைரவர் குறித்த தகவல்கள் மற்றும் ஸ்லோகங்கள் வாசகர் எம்.வெங்கட்ராமனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

'திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு - வடமணப்பாக்கம் ஊரில் ஏழு கன்னிமார் ஆலயம் உள்ளது. ஆனால், ஏழு கன்னியரை வழிபட வேண்டிய முறைகள் என்ன? அவர்களுக்கு உரிய மலர்கள், நைவேத்தியங்கள், மந்திரங்கள் ஆகியன குறித்த விபரங்கள் அறிய, எங்கள் ஊர் மக்கள் ஆவலுடன் உள்ளனர். இதற்கான புத்தகங்கள் எங்கு கிடைக்கும்?’ என கடந்த 6.9.11 இதழில் புளியம்பேடு வாசகர் கே.மூர்த்தி கேட்டிருந்தார்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் திருக்கோயிலில் கூட ஏழு கன்னிமார் சந்நிதி உள்ளது. சர்க்கரைப் பொங்கல், கலந்த சாதங்கள், வெற்றிலைப் பாக்கு, பழங்கள், தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு நைவேத்தியம் செய்து நல்லெண்ணெய் விளக்கேற்றி ஏழு கன்னிமார்களை வழிபடுவது சிறப்பு என்று சென்னை வாசகி ஆர்.ஜெயலெட்சுமி தெரிவித்துள்ளார். ஏழு கன்னிமார்களுக்கும் உரிய காயத்ரி மந்திரங்களையும் அவர் எழுதி அனுப்பியுள்ளார். அந்தப் பிரதி வாசகர் கே.மூர்த்திக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

ஸ்ரீவருண பகவான் ஸ்லோகம், அஷ்டோத்திரம், வருண பகவானின் சிறப்புகள் கொண்ட புத்தகம் எங்கு கிடைக்கும் என திண்டுக்கல் வாசகர் டி.ஆர்.சங்கர் கடந்த 21.02.2012 இதழில் கேட்டிருந்தார்.

தேவர்களுள் ஒருவரான ஸ்ரீவருண பகவான் வேத காலத்தில் வேதங்களுக்கெல்லாம் தலைவனாக, நீதிக்கு அதிபதியாக விளங்கியவர். ஸ்ரீவருண காயத்ரி மந்திரத்தை மனமொன்றி பாராயணம் செய்து வர, கல்வி, செல்வம், வீடு, நல்வாழ்வு பெறுவதுடன் குடும்பத்தில் ஒற்றுமை பெருகும்; மனக்குறைகள், உடற்பிணிகள் நீங்கும்.

நீருக்கு உரியவராகச் சொல்லப்படும் ஸ்ரீவருண பகவானை வழிபட்டு, ஸ்ரீவருண காயத்ரி மந்திரத்தை நாள்தோறும் ஜபித்து வர... நீரினால் ஏற்படும் துன்பங்கள் விலகும் என்பது ஐதீகம் என சென்னை வாசகி இராஜேஸ்வரி மதி தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்ரீவருண பகவான் அஷ்டோத்திரம் மற்றும் ஸ்லோகங்கள் அடங்கிய புத்தகம், ஸ்ரீவன்னி விநாயகர் புத்தக நிலையம், 58-ஏ, ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயில், மதுரை-1 என்ற முகவரியில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று மதுரை வாசகி பெ.மகேஸ்வரி தனக்குத் தெரிந்த வருண காயத்ரி மற்றும் வருண ஸ்லோகத்தை எழுதி அனுப்பியுள்ளார். அந்தப் பிரதி வாசகர் டி.ஆர்.சங்கருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.