Published:Updated:

விழாக்கள்... விசேஷங்கள்!

விழாக்கள்... விசேஷங்கள்!

விழாக்கள்... விசேஷங்கள்!

விழாக்கள்... விசேஷங்கள்!

Published:Updated:
விழாக்கள்... விசேஷங்கள்!
விழாக்கள்... விசேஷங்கள்!

ங்களின் குலதெய்வம் ஸ்ரீஉலகாண்டவர். அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில், வஞ்சினாபுரம் எனும் கிராமத்தில் ஸ்ரீஉலகாண்டவருக்குக் கோயில் உள்ளது. இந்தக் கோயிலைப் புதுப்பித்து, ஸ்தல வரலாறு புத்தகத்தையும் வெளியிட்டு, கும்பாபிஷேகம் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளோம். ஸ்ரீஉலகாண்டவரைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள், ஏதேனும் தகவல் தெரிவித்து உதவினால், மிக்க நன்றி உடையவர்களாக இருப்போம்.

- பஞ்சநாதன், திருச்சி

ஸ்ரீதத்தாத்ரேயர், ஸ்ரீபரசுராமருக்கு உபதேசித்த 'திரிபுரா ரகஸ்யம்’ எனும் ஞான நூல் குறித்து, கடந்த 6.3.12 இதழில், தசாவதாரத் திருத்தலங்கள் தொடரில் படித்தேன். இந்த 'திரிபுரா ரகஸ்யம்’ எனும் இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்? விவரம் அறிந்த அன்பர்கள், தகவல் தாருங்களேன்!

- எம்.தர்மேந்திரன், திருவெண்ணெய்நல்லூர்

கண்ணெடுத்தாகிலும் காணீரோ - என்
காவிய மாலையைப் பூணீரோ...

என்றொரு பாடல். அதில்,

பட்டம் பதவி பெறப் பாடவில்லை - தங்கப்
பதக்கங்களைப் பெறப் பாடவில்லை.
எட்டெட்டுத் திக்கிலும் ஓடவில்லை - என்
இதய மலரினைச் சூடவில்லை ஐயா...

எனும் பாடலின் அனுபல்லவி வரிகள் மறந்துவிட்டன. இந்தப் பாடலை முழுமையாகத் தெரிந்தவர்கள், எழுதி அனுப்பி வைத்து உதவுங்களேன். அல்லது எந்தப் புத்தகத் தில் இந்தப் பாடல் உள்ளது என்பதைத் தெரிவியுங்கள்.

- ஞானம் சுப்ரமணியன், திருவானைக்காவல்

##~##
ன்னுடைய தந்தை, வேலூர் - ராணிப்பேட்டையில் வாழ்ந்தவர். எங்களின் குலதெய்வம் எது என்று தெரியவில்லை. ஆனால், ஒருமூறை குலதெய்வம் குடிகொண்டிருப்பது செம்பேடு எனும் ஊரில்... என்று அவர் சொன்னதாக ஞாபகம். இதுவரை குலதெய்வத்தை வழிபட முடியாமல், தவித்து வருகிறோம். எவருக்கேனும் எங்கள் குலதெய்வம் தெரிந்தால், தெரியப்படுத்துங்களேன்!

- வி.ஜி.சத்தியநாராயணன், சென்னை-61

ஸ்ரீஅகோபில மடம் ஜீயர் சுவாமிகள், விஜய யாத்திரை யாக இந்தியா முழுவதும் வலம் வருகின்றனர். அவர்களில், 21-வது பீடாதிபதி மற்றும் 22-வது பீடாதிபதி யாத்திரை வரும் போது, பாலமேடு எனும் இடத்தில் (1757 மற்றும் 1758-ஆம் வருடங்கள்) ஜீவசமாதி அடைந்தனர் என்பதாக அறிகிறேன். அந்தப் பாலமேடு தலம் குறித்து அறிந்தவர்கள் தகவல் தாருங்களேன்.

- எஸ்.வெங்கட்ராமன், மதுரை-3

தென்காசி அருகேயுள்ள ஆய்க்குடி மேலகிராமம்தான் பூர்வீகம் எங்களுக்கு! நாங்கள் பரத்வாஜ கோத்திரக்காரர்கள். அனுமன் நதிக்கரையில் உள்ள ஸ்ரீபாலசுப்ரமணிய ஸ்வாமிதான் எங்களின் குலதெய்வம் என்று சிலரும் 'உங்களுடைய குலதெய்வம் முருகக் கடவுள் இல்லை’ என்று வேறு சிலரும் சொல்கின்றனர். வீட்டுப் பெரியவர்கள் பலரும் இறந்து விட்ட நிலையில், எங்களின் குலதெய்வத்தை அறிந்து, வணங்க முடியாத நிலையில் இருக்கிறோம். விவரம் தெரிந்தவர்கள் தகவல் தாருங்களேன்!

- ஆர்.பாஸ்கரன், பெங்களூரு

விழாக்கள்... விசேஷங்கள்!

ளிய தமிழில், அழகிய விளக்கங்களுடன் கம்ப ராமாயணம் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கடந்த 3.4.12 இதழில் மதுரை வாசகர் அழகர்சாமி கேட்டிருந்தார்.

வர்த்தமானன் பதிப்பகம், 40, சரோஜினி தெரு, தியாகராயநகர், சென்னை-17 எனும் முகவரியில் கிடைக்கும் என்று மதுரை வாசகி மீனாட்சி பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.

பாம்பே சகோதரிகள் பாடிய ஸ்ரீவிஷ்ணு மற்றும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் ஆடியோ சி.டி. எங்கு கிடைக்கும் என்று தென்காசி வாசகர் கே.எஸ்.முத்து கேட்டிருந்தார்.

ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம் ஆகிய சி.டி.க்கள், சென்னை மயிலாப்பூர் கிரி டிரேடிங் கம்பெனியில் கிடைக்கிறது என்று சென்னை வாசகி பத்மினி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தென்காசி வாசகர் முத்து, 'நவாவரண பூஜை’ குறித்த விவரம் அடங்கிய புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கேட்டிருந்தார்.

சென்னை பிரதீபா பிரசுரம், 39, ஆடம் தெரு, மயிலாப்பூர், சென்னை-4 எனும் முகவரியில் 'நஜன்' என்கிற நடராஜன் எழுதிய 'ஸ்ரீவித்யா நவாவரண பூஜை’ புத்தகம் கிடைக்கும் என்று சென்னை வாசகர் என்.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், 'அதற்கு ஸ்ரீசக்ர மேரு நவாவரண பூஜை என்று பெயர். அம்பிகையைப் பூஜிப்பதற்கு ஒன்பது ஆவரணங்கள் இருப்பதால், இந்தத் திருநாமம் உண்டானது’ என்று விளக்கம் தந்து எழுதியுள்ளார். அந்தக் குறிப்பு, வாசகர் முத்துவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

விழாக்கள்... விசேஷங்கள்!

ஸ்ரீசனி பகவான் ஸ்லோகம் அடங்கிய புத்தகம் எங்கு கிடைக்கும் என்று திருச்சி வாசகி எஸ்.லலிதா, கடந்த 21.2.12 இதழில் கேட்டிருந்தார்.

'ஆதி வேதாந்த முதலறியஞான மைந்தெழுத்திலும் பொருளையன் மாலோடு...’ என்று துவங்கும் அந்தப் பாடலை சனிக் கிழமைகளில் பாடிப் பாராயணம் செய்து வழிபட்டால், ஸ்ரீசனி பகவானின் கருணையும் கடாட்சமும் கிடைக்கப் பெறலாம் என்று நவிமும்பை வாசகி ஜெயஸ்ரீ எழுதி அனுப்பியுள்ளார்.

பரோடா வாசகி ஆர்.ஜெயலட்சுமி ராம நாராயணன் ஸ்ரீசனி பகவான் ஸ்லோகத் தின் பிரதியை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த ஸ்லோகம், வாசகி லலிதாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஸ்ரீபாம்பன் சுவாமிகள் இயற்றிய 'ஸ்ரீசண்முகக் கவசம்’ எனும் நூல் எங்கு கிடைக்கும் என்று மயிலாடுதுறை வாசகர் ஜி.டி.சுப்ரமணியன் கேட்டிருந்தார்.

சென்னை வாசகர் வி.பி.ஸ்ரீநிவாசன், சண்முகக் கவசம் பிரதியை எடுத்து அனுப்பி வைத்துள்ளார்.

இது, மயிலாடுதுறை வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஸ்ரீபெரியாச்சி அம்மன் திருக்கோயில் எங்கு இருக்கிறது, அம்மனை வழிபட வேண்டும் என்று நீண்டகாலமாக ஆவலாக உள்ளேன் என்று சிதம்பரம் வாசகர் எஸ்.தமிழ்செல்வன் கேட்டிருந்தார்.

திருவாரூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில், தண்டலை வட்டம் பகுதியில் தியானபுரம் எனும் ஊரில் ஸ்ரீபெரியாச்சி அம்மனுக்கு திருக்கோயில் அமைந்துள்ளது எனப் பெயர் குறிப்பிட மறந்த வாசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.