Published:Updated:

அதிர்ஷ்டம் அள்ளித்தரும் அபூர்வ 18 வகை தூபங்கள்! - அதிகாலை சுபவேளை!

சாம்பிராணி
சாம்பிராணி

அதிர்ஷ்டம் அள்ளித்தரும் அபூர்வ 18 வகை தூபங்கள்! - அதிகாலை சுபவேளை!

இன்றைய பஞ்சாங்கம்

20. 4. 21 சித்திரை 7 செவ்வாய்க்கிழமை

திதி: அஷ்டமி இரவு 8.10 வரை பிறகு நவமி

நட்சத்திரம்: பூசம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பகல் 3 முதல் 4.30 வரை

எமகண்டம்: காலை 9 முதல் 10.30 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ மாலை 4.30 முதல் 5.15 வரை

சந்திராஷ்டமம்: மூலம்

பஞ்சாங்கம் - அதிகாலை சுபவேளை
பஞ்சாங்கம் - அதிகாலை சுபவேளை

தூப வழிபாடு ஏன் அவசியம்?

தினமும் நாம் செய்யும் வழிபாடுகளிலும் ஆலய வழிபாடுகளிலும் தூபத்துக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. இந்த தூப வழிபாடு குறித்து நம் முன்னோர்கள் நிறையசொல்லியிருக்கிறார்கள். இறைவனுக்கு செய்யப்படும் பஞ்சோபசாரத்தில் தூபம் முதன்மையானது.

குறிப்பாக வீட்டில் தொடர்ந்து நோய்கள் வந்த வண்ணம் இருந்தாலோ எப்போது பார்த்தாலும் வீட்டில் சண்டை சச்சரவு என்று இருந்தாலோ தூப வழிபாடு அவற்றை நீக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். காரணம், நேர்மறை எண்ணங்களை உருவாக்க வல்லது தூபம்.

அந்தக் காலத்தில் தூபமிடாத வீடுகளே இருக்காது. அதுவே வீட்டில் சிறுசிறு பூச்சிகள் வரமால் இருக்கவும், கிருமிகள் தாக்காமல் இருக்கவும் தூபம் பயன்படும். எனவே பல நோய்கள் நம் வீட்டுக்கு வராது. எதிர்மறை எண்ணங்களாகிய துர்சக்திகளை விரட்டும், லட்சுமி கடாட்சத்தை வீட்டுக்குள் கொண்டுவரும் என்றெல்லாம் தூபத்தின் அவசியம்த்தை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

தூபமிடுதல் மிக அவசியம்’ என்கிறது ஆயுர்வேதம். சாம்பிராணி வாசனையும் புகையும் சூழலுக்கு இதம் தரும்; மனதை நிதானப்படுத்தும்; ஏதோ தீய சக்தி நாம் இருக்கும் இடத்தில் இருந்து விலகியதைப் போன்ற ஓர் உணர்வைத் தரும். பல காலமாக பெண்கள் தலைக்குக் குளித்த பின்னர் தூபமிடுதல் என்ற பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இதை அன்றைய `ஹேர் டிரையர்’ என்றும் குறிப்பிடலாம். நாளடைவில் இந்தப் பழக்கம் மெல்ல மெல்ல மறைந்துவிட்டது. உண்மையில், கூந்தலுக்குத் தூபமிடுவதால், ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. உடல் மட்டுமல்ல, மனமும் ஆரோக்கியம் பெறும்.

தூப வழிபாட்டின் சிறப்பையும் அதிர்ஷ்டம் தரும் 18 வகையான அபூர்வ தூபங்கள் குறித்தும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய சுருக்கமான ராசிபலன்

விரிவான இன்றைய ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

20.4.21

மேஷம் - செலவு: செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு அக்கறை தேவை. பிற்பகலுக்குமேல் எதிர்பார்த்த பணவரவு உண்டாவதால் பிரச்னை இல்லை. - செலவே சமாளி!

ரிஷபம் - அனுகூலம் : செயல்கள் அனைத்தும் அனுகூலமாகும். குடும்பத்தினர் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள். அரசுவழியில் அனுகூலம் உண்டு. - ஆல் இஸ் வெல்!

மிதுனம் - நிதானம் : வரவும் செலவும் சமமாக இருக்கும் நாள். வார்த்தைகளில் நிதானம் தேவை. குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டிய நாள். - விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை!

கடகம் - மகிழ்ச்சி : எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளைத் துணிந்து மேற்கொள்ளலாம். நண்பர்களிடம் எதிர்பார்த்த நல்ல தகவல் வந்துசேரும். - ஆல் தி பெஸ்ட்!

சிம்மம் - பிரச்னை : உறவுகளால் பிரச்னை ஏற்படக்கூடும். பெரிது படுத்த வேண்டாம். செலவுகள் அதிகரித்த வண்ணமே இருக்கும். சிக்கன நடவடிக்கை தேவை. - டேக் கேர் ப்ளீஸ்!

கன்னி - சாதகம் : செயல்கள் சாதகமாகும். முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். சகோதர உறவுகளால் சிறுன்பிரச்னை ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. - சாதகமான ஜாதகம் இன்று!

துலாம் - பணவரவு : எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். முயற்சிகளுக்கு உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். என்றாலும் எதிரிகள் வகையில் எச்சரிக்கை தேவை. - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

விருச்சிகம் - தெளிவு : குழப்பங்கள் விலகும் என்றாலும் செயல்களில் சிறு தடைகள் இருந்த வண்ணம் இருக்கும். இறைவழிபாடு அவற்றை நீக்கி அருளும். - தடை அதை உடை!

தனுசு : விவாதம் : தேவையற்ற விவாதங்களில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் கவனம் தேவை. இறைவழிபாடு நன்மை தரும். - நோ ஆர்கியுமென்ட்ஸ் ப்ளீஸ்!

மகரம் - குழப்பம் : தேவையற்ற குழப்பங்கள் அதிகரித்தவண்ணம் இருக்கும். செலவுகளும் சமாளிக்க முடியாமல் திண்டாடுவீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

கும்பம் - ஆதாயம் : காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த பண உதவிகளும் வந்து சேரும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படலாம். எதிரிகளை வெற்றிகொள்வீர்கள். - ஜாலி டே!

மீனம் - ஆரோக்கியம் : பணவரவுக்குக் குறைவில்லை. என்றாலும் ஆரோக்கியத்தில் உரிய அக்கறை செலுத்த வேண்டும். உறவினர்களிடையே பேசும்போது கவனம் தேவை. - ஹெல்த் இஸ் வெல்த்!

அடுத்த கட்டுரைக்கு