நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!
ன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாகத் தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.
உதவலாம் வாருங்கள்!
##~##
ஸ்ரீ
சோமசுந்தர நாயக்கர் அருளிய சிவாதிக்ய ரத்னாவளி, சைவ சூடாமணி, பரதத்துவ பிரகாசிகை, பரம தத்துவ நிரூபணம், அர்ச்சாதீபம், ஆதிசைவ பிரபாவம், சித்தாந்த ரத்னாகரம் போன்ற எண்ணற்ற நூல்களைத் தந்தவரின் வாழ்க்கைச் சரிதம் மற்றும் அவர் இயற்றிய நூல்கள் எங்கு கிடைக்கும்? அறிந்த அன்பர்கள், தகவல் தாருங்களேன்!

- பா.ஸ்ரீராமகிருஷ்ணன், கரிவலம்வந்தநல்லூர்

துளசிதாசர் அருளிய 'ஸ்ரீராம சரித மானஸா’ எனும் நூலைப்  பல கடைகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அறிந்த வாசகர்கள், தகவல் தந்தால் மகிழ்வேன்.

- பி.வி.வேங்கடரமணன், ஈரோடு

த்துக் கம்பர் எனப் புகழப்படுபவரும், ஒரு லட்சம் பாடல்கள் எழுதியவரும், தமிழ்த்தாத்தா உ.வே.சா-வின் குருநாதருமான மகா வித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் ஏராளமான தலங்களின் புராணத் தகவல்களைத் தொகுத்து எழுதியுள்ளார். அவை எங்கே கிடைக்கும்? உதாரணமாக, அவர் எழுதிய 'திருநாகைக்காரோண புராணம்’ எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அறிந்த அன்பர்கள், தகவல் தந்து உதவுங்களேன்!

- அவினாசி முருகேசன், காரமடை

திருஞானசம்பந்தர் அருளிய 'கோளறு பதிகம்’ அனைவரும் அறிவோம். மற்றொரு பதிகமான திருவேதிக்குடி பதிகத்தில், ஏழாவது பாடலான, 'நீறுவரியாட...’ எனத் துவங்கும் பாடலைப் பாடினால், உடலும் உள்ளமும் தூய்மையாகும்; திருமணத் தடை முதலான அனைத்துத் தடைகளும் நீங்கி, நலமுடன் வாழலாம் என்கின்றனர். இந்தப் பதிகத்தைப் பிரதி எடுத்து எவரேனும் அனுப்பினால், நன்றி உள்ளவளாக இருப்பேன்.

- மீ.சொர்ணம், உடுமலைப்பேட்டை

'தந்தையடு கல்வி போம்...’ எனும் தமிழ்ப் பாடலை முழுதாகத் தெரிந்த அன்பர்கள், அதன் பிரதியைத் தந்து உதவுங்களேன்!

- ஆர்.மாதவராவ், சென்னை-64

ன் குடும்பத்தில் ஏராளமான பிரச்னைகள்! இவற்றில் இருந்து விடுபடுவதற்கு ஏதேனும் ஸ்லோகங்கள் உண்டா? ஸ்ரீஅனுமன் ஸ்லோகங்கள் நிறையவே உள்ளன என்கின்றனர் பலரும். பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கு உரிய ஸ்லோகங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றித் தெரிந்த அன்பர்கள் எனக்கு அனுப்பி உதவுங்கள்!

- மணிபரமேஸ்வரன், பெங்களூரு-42

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

'மகாளய மற்றும் தை அமாவாசை தினங்களில், முன்னோர்களுக்குத் திதி கொடுக்கிற, காசிக்கு நிகரான தலங்கள் எங்கு உள்ளன?’ எனச் சென்னை வாசகர் டி.ராதாகிருஷ்ணன் கேட்டிருந்தார்.

காசிக்கு இணையான தலங்கள் என, காவிரிக்கரையில் உள்ள ஏழு தலங்களைக் குறிப்பிடுவார்கள். அவை: ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திருவையாறு, வேதாரண்யம், மயிலாடுதுறை மற்றும் திருவிடைமருதூர். இவற்றில், கும்பகோணம்- நன்னிலம் வழியில், அச்சுதமங்கலத்தில் இறங்கி சுமார் 1 கி.மீ. தொலைவு பயணித்தால், ஸ்ரீவாஞ்சியம் தலத்தை அடையலாம். இங்கு, ஸ்ரீயோக பைரவர் சந்நிதி கொண்டிருக்கிறார். எனவே, இந்தத் தலத்துக்கு வந்து வணங்குவோருக்கு, எம வேதனை கிடையாது என்பர். இங்கே, எமனுக்கும் சந்நிதி உண்டு என பெங்களூரு வாசகி டாக்டர் வித்யா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு தலம், காசிக்கு நிகரானது. இங்கு மகாளய மற்றும் தை அமாவாசைகளில் திதி கொடுப்பது சிறப்பு என, சென்னை வாசகர் எம்.எஸ்.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

கூத்தனூர் ஸ்ரீசரஸ்வதி கோயிலுக்கு அருகில் உள்ளது திலதர்ப்பணபுரி. இங்கேயுள்ள ஸ்ரீஆதி விநாயகர் ஆலயத்தில், தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்தால், சந்ததி செழிக்கும் என தஞ்சாவூர் வாசகி வி.காந்திமதி தெரிவித்துள்ளார்.

திருநாங்கூரில் நடைபெறும் 11 கருடசேவை குறித்து, ஒரத்தநாடு வாசகர் கோட்டை கோவிந்தராஜ் கேட்டிருந்தார்.

சீர்காழிக்கு அருகில் உள்ளது திருநாங்கூர். சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். இந்தத் தலத்தைச் சுற்றி, திருவாலி, திருநகரி, திருப்பார்த்தன்பள்ளி, திருவெள்ளக்குளம் என 11 திவ்விய தேசங்கள் உள்ளன. தை அமாவாசைக்கு மறுநாள் இரவு, இங்கே 11 பெருமாள்களும் கருட சேவையில் தரிசனம் தருவது வெகு பிரசித்தம் என்று திருச்சி வாசகர் மீ.ஞானசம்பந்தன், சென்னை வாசகர்கள் டி.கே.தேவநாதன், எம்.ஏ.ராஜசேகரன், சிதம்பரம் வாசகர் என்.காளிதாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மாதவிடாய் பிரச்னையைத் தீர்க்கும் தலம் குறித்து சென்னை வாசகி ஒருவர் கேட்டிருந்தார்.

'என்னுடைய மகளுக்கும் மாதவிடாய் பிரச்னை இருந்தது. திருச்சியில் இருந்து கரூர் செல்லும் வழியில் உள்ளது பேட்டைவாய்த்தலை, இங்கேயுள்ள ஸ்ரீபாலாம்பிகை சமேத ஸ்ரீமத்யார்ஜுனேஸ்வரர் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து, ஸ்வாமியை வழிபட்டு வந்தோம். பிறகு தொடர்ந்து 11 வாரங்கள், பசும்பாலைக் காய்ச்சி, சர்க்கரை கலந்து, வெற்றிலை, பாக்கு மற்றும் பழங்கள் வைத்து வீட்டிலேயே பூஜித்து வணங்கி வர... விரைவில் மகளின் மாதவிடாய் பிரச்னை தீர்ந்தது’ என ஈரோடு வாசகி ஆர்.கோமதி தெரிவித்துள்ளார்.

இதே தலம் மற்றும் வழிபடும் முறையை, திருச்சி வாசகி ராதிகா கணேஷ் அவர்களும் தெரிவித்துள்ளார்.

கீழ்வானம் வெள்ளென் றெருமைச் சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப்பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா வென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்

- எனும் திருப்பாவையின் 8-ஆம் பாசுரத்தையும்,

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

- எனும் 18-வது பாசுரத்தையும் தினமும் ஜபித்து அல்லது பாடி வந்தால், மாதவிடாய்ப் பிரச்னை மட்டுமின்றி, சகல பிரச்னைகளும் தீரும் என, மதுரை வாசகி மீனாட்சி பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.