Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

Published:Updated:
உதவலாம் வாருங்கள்!

ன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

பெருமாண்டூர் பெருமாள் கோயில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உதவலாம் வாருங்கள்!

ங்கள் மூதாதையர், பெருமாநல்லூர் என்கிற பெருமாண்டூர் எனும் கிராமத்தில் வாழ்ந்ததாக அறிகிறோம். இங்கே, ஸ்வர்ணமுகி எனும் ஆறு கிளை பிரிந்து ஓடுவதாகவும், அங்கே பெருமாள் கோயில் ஒன்று உள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் இந்தக் கிராமம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. விசாரித்ததில் ஒரு சிலர் ஊத்துக்கோட்டை, நகரி ஆகிய ஊர்களுக்கு அருகில் பெருமாண்டூர் கிராமம் இருப்பதாகச் சொல்கின்றனர். விவரம் தெரிந்த அன்பர்கள் தகவல் தெரிவித்தால், அந்த ஊருக்குச் சென்று பெருமாள் கோயிலை ஸேவிக்க உதவியாக இருக்கும்!

- என்.சம்பத், சென்னை-92

பிரபல ஆலயங்கள்... விவரங்கள்!

மிழகத்தில் உள்ள புராண- புராதனப் பெருமைகள் கொண்ட, முக்கிய ஆலயங்களைத் தரிசனம் செய்வதற்கு ஆவலாக உள்ளேன். அந்தக் கோயில்களின் ஸ்தல புராணம் மற்றும் ஸ்தல வரலாறு, கோயில்களுக்குச் செல்லும் வழி, தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி எண்கள், அங்கே தங்குவதற்கான இடவசதிகள், கோயிலில் தரிசன நேரம் ஆகிய விவரங்களைக் கொண்ட புத்தகம் ஏதும் உள்ளதா? எங்கு கிடைக்கும்?

- சி.ஜெயராமன், ரெட்டியார்பாளையம்  

##~##
நோய் தீர்க்கும் ஸ்லோகம்!

நீண்டகாலமாக, காசநோயாலும் சர்க்கரை நோயாலும் பெரிதும் அவதிப்பட்டு வருகிறேன். இந்த நோயில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு ஸ்லோகங்கள் ஏதும் உள்ளனவா? எந்தக் கோயிலுக்குச் சென்று பரிகாரங்கள் செய்யவேண்டும்? விவரம் அறிந்த அன்பர்கள் தகவல் தந்து உதவினால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்!  

- ஜே.பாலாஜி, சுண்டக்குடி

ஸ்ரீமாரியம்மன் ஸ்தோத்திரம்!

திருச்சி சமயபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீமாரியம்மனின் தீவிர பக்தன் நான். மாரியம்மனுக்கு உரிய மலர்கள், நைவேத்தியங்கள், உரிய மந்திரங்கள் குறித்த விவரங்களை அறிந்து அம்மனை வழிபட ஆவலாக இருக்கிறேன். இதற்கான புத்தகம் ஏதும் உள்ளதா? எங்கு கிடைக்கும்? அறிந்தவர்கள் உதவுங்களேன்!

- ஆர்.மாரிமுத்து, விஜயாபுரம், திருப்பூர்

ஸ்ரீசோலை நாச்சியம்மன் கோயில்!  

நீண்டகாலமாக, எங்களின் குலதெய்வம் எது என்றே தெரியாமல் இருந்தோம். சோழிய வேளாளர் இனத்தைச் சேர்ந்த எங்களுக்கு, 'அம்மனே குலதெய்வம்; அவள் பெயர் சோலை நாச்சியம்மன்' என்றும் சமீபத்தில் தெரியவந்தது. எங்களின் குலதெய்வத்துக்கு வழிபாடு செய்ய ஆசைப்படுகிறோம். சோலை நாச்சியம்மன் கோயில் எங்கு இருக்கிறது எனும் தகவலைத் தந்து உதவுங்கள்.

- சண்முகவேல், திண்டுக்கல்

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

''வேம்படி கருப்பசாமி கோயில் எங்கு உள்ளது? நாடார் சமூகத்தவர்கள் பலரும் குலதெய்வமாக வணங்கி வழிபடும் கோயிலாம் அது! என் நண்பர் குடும்பம், குலதெய்வ வழிபாடு செய்யாமல், நீண்டகாலமாக தவித்து வருகிறது. மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேம்படிக் கருப்பசாமி கோயில் இருந்தால், அதற்கான வழியைச் சொல்லுங்கள்’ என்று கல்யாணி ஹரி என்பவர் கடந்த 3.4.12 இதழில் கேட்டிருந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீவேம்படி கருப்பசாமி கோயில் உள்ளது. வருடந்தோறும் இந்தக் கோயிலில், முக்கிய விழாக்களும் நேர்த்திக்கடன்களும் வெகு விமரிசையாக நடைபெறும். சக்தி வாய்ந்த தெய்வமாக ஸ்ரீவேம்படி கருப்பசாமி அருள்புரிகிறார் என்று ஒட்டன்சத்திரம் வாசகர் எஸ்.சித்தரஞ்சன் தெரிவித்துள்ளார்.

''ஸ்ரீதிரிபுரா ரகஸ்யம் எனும் நூல் எங்கு கிடைக்கும்? இந்தப் புத்தகத்தைப் படிக்க நீண்டகாலமாக ஆவலாக உள்ளேன்'' என்று வாசகர் எம்.தர்மேந்திரன் கடந்த 17.4.12 இதழில் கேட்டிருந்தார்.

ஸ்ரீதிரிபுரா ரகஸ்யம் எனும் நூல், ஸ்ரீரமணாஸ்ரமம், திருவண்ணாமலை - 606 603 எனும் முகவரியில் கிடைக்கும் என்று சென்னை வாசகர் எஸ்.காமாட்சி தெரிவித்துள்ளார். இந்த நூல், ஆங்கிலம் மற்றும் சம்ஸ்கிருத மொழிபெயர்ப்பிலும் வெளியாகி உள்ளது. பெங்களூருவில் உள்ள ரமண மகரிஷி சென்டர் ஃபார் லேர்னிங், போஸ்ட் ஆபீஸ் ரோடு, சஞ்சய் நகர், பெங்களூரு - 3 எனும் முகவரியில் கிடைக்கும் என்று பெங்களூரு வாசகர் ஆர்.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மதுரையில் உள்ள ஸ்ரீரமண மந்திரம் (ஸ்ரீரமணர் ஞானோதயம் பெற்ற இல்லம்) என்கிற இடத்திலும் விற்பனைக்குக் கிடைக்கும் என்று மதுரை வாசகர் பா.சௌந்திர பாண்டி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீஆதிசங்கரர் அருளிய திரிபுரசுந்தரி மானஸ பூஜா ஸ்தோத்திரம், ம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்திரம், தேவி சதுஷ் ஷட்யுபசார ஸ்தோத்திரம் ஆகிய நூல்களை தமிழில் அர்த்தத்துடன் படிக்க விரும்புகிறேன்; எங்கு கிடைக்கும் என்று கடந்த 3.4.12 இதழில் வாசகி ஜெயலட்சுமி சர்மா கேட்டிருந்தார்.

திரிபுரசுந்தரி மானஸ பூஜை ஸ்தோத்திரம், ம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜை ஸ்தோத்திரம், தேவி சதுஷ் ஷட்யுபசார ஸ்தோத்திரம் ஆகியவற்றின் பிரதியை எடுத்து, தென்காசி மேலகரம் வாசகர் கே.எஸ்.முத்து அனுப்பியுள்ளார்.

இந்தப் பிரதி, வாசகி ஜெயலட்சுமி சர்மாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

'கண்ணெடுத்தாகிலும் காணீரோ - என் காவிய மாலையைப் பூணீரோ...’ என்றொரு பாடல், தற்போது மறந்துவிட்டது; அந்தப் பாடலை முழுமையாகத் தெரிந்த அன்பர்கள் அனுப்பி வைத்து உதவுங்களேன் என்று திருவானைக்காவல் வாசகி ஞானம் சுப்ரமணியன் கடந்த 17.4.12 இதழில் கேட்டிருந்தார்.

அந்தப் பாடலை சென்னை குளத்தூர் வாசகி எம்.லக்ஷ்மி மங்களரமணன், சென்னை வாசகி சுலோசனா ரங்கநாதன் ஆகியோர் அனுப்பியுள்ளனர்.  அந்தப் பாடல் இதோ..!

கண்ணெடுத்தாகிலும் காணீரோ - என்
காவியமாலையைப் பூணீரோ
பண்ணும் பனுவலும் பரதமும் விரதமும்
பக்தியும் கொண்டிங்கு நித்தியம் தொழும் என்னை (கண்)
பட்டம் பதவி பெற பாடவில்லை - தங்க
பதக்கங்களை எண்ணி நாடவில்லை
எட்டெட்டு திக்கிலும் ஓடவில்லை - என்
இதய மலர்களை சூடவில்லை ஐயா (கண்)
பேருக்கும் புகழுக்கும் பேராசைப்படவில்லை
பெரிய மனிதர் காலைப் பிடித்துக் கும்பிடவில்லை
ஆருயிர்க்குயிராக அறிந்தும்மை நேசித்தேன்
ஆர்வ மலர்களை அள்ளி அள்ளி பூசித்தேன் (கண்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism