நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

கல்வி - ஞானம் அருளும் ஞானசரஸ்வதி!

கல்வி - ஞானம் அருளும் ஞானசரஸ்வதி!

கல்வி - ஞானம் அருளும் ஞானசரஸ்வதி!
கல்வி - ஞானம் அருளும் ஞானசரஸ்வதி!
##~##
கேந்திர பல்லவனால் குடைவரைக் கோயிலாகக் கட்டப்பட்டது; ஸ்ரீகோகர்ணேஸ்வரர் எனும் திருநாமத்துடன் சிவனாரும், ஸ்ரீபிரகதாம்பாள் எனும் திருநாமத்துடன் உமையவளும் அருளும் திருத்தலம் எனும் பெருமைகள் கொண்ட க்ஷேத்திரம், புதுக்கோட்டை ஸ்ரீகோகர்ணேஸ்வரர் திருக்கோயில்.

அரைக்காசு அம்மன் கோயில் என்றால், பக்தர்கள் அனைவருக்கும் பளிச்சென்று தெரியும். இந்த அற்புதமான கோயிலில், குடைவரை கடந்து படியேறிச் சென்றால், ஸ்ரீசரஸ்வதிதேவியின் அருமையான திருமேனியைத் தரிசிக்கலாம்.

கல்வி - ஞானம் அருளும் ஞானசரஸ்வதி!

வாழ்க்கையில் உயர வேண்டுமெனில், பணம்- காசு, வீடு-வாசல் என முன்னேற வேண்டுமெனில் கல்விச் செல்வம் மிகவும் அவசியம். அப்படிப்பட்ட செல்வத்தை வாரி வழங்கும் வள்ளலெனத் திகழும் ஸ்ரீசரஸ்வதிதேவி, கோயிலின் மேல்தளத்தில் குடிகொண்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே!

இங்கே, இன்னொரு விஷயம்... இந்தத் தலத்தில் வீணையின்றிக் காட்சி தருகிறாள், ஸ்ரீசரஸ்வதிதேவி.

ஸ்ரீபிரம்மாவின் சக்தியாக விளங்குபவள் வாணிசரஸ்வதி. ஸ்ரீபராசக்தியின் அம்சமாகத் திகழ்பவள், ஞானசரஸ்வதி. இவள், கரங்களில் வீணை வைத்திருப்பதில்லை! ஞானசரஸ்வதி எனப் புராணங்கள் போற்றும் திருக்கோகர்ணம் சரஸ்வதிதேவியை வணங்கி வழிபட்டால், கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்கலாம்; ஒருமுறை படித்தாலே புத்தியில் உள்வாங்கிக் கொள்ளும் ஞானம் வாய்க்கப் பெறுவார்கள் மாணவர்கள் எனப் போற்றுகின்றனர், புதுக்கோட்டை அன்பர்கள்.

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், ஸ்ரீசரஸ்வதிதேவியை வணங்குவதற்கு உரிய நாட்களாம்! குறிப்பாக, நவமி நாளில் கல்விக் கடவுளை வணங்குவது கூடுதல் பலன் தரும் என்பது ஐதீகம்! இந்த நாட்களில், சுத்த அன்னம் அல்லது பயறு பாயசம் மற்றும் உளுந்து வடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்து, ஞானசரஸ்வதியை வழிபட்டால், ஞாபக மறதியால் அவதிப்படுபவர்கள், புத்திக்கூர்மையுடன் தெளிவுறச் செயல்படுவார்கள்; தேர்வில் மிக எளிதாக அதிக மதிப்பெண்களை எடுப்பார்கள் என்கின்றனர், பக்தர்கள்.

- இ.லோகேஸ்வரி
படங்கள்: பா.காளிமுத்து