நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

கல்வி யோகம் தரும் பதஞ்சலி முனிவர்!

கல்வி யோகம் தரும் பதஞ்சலி முனிவர்!

கல்வி யோகம் தரும் பதஞ்சலி முனிவர்!
கல்வி யோகம் தரும் பதஞ்சலி முனிவர்!
##~##
துரை, பழங்காநத்தத்தில் உள்ளது ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயம். இங்கே சிவனாரும் பார்வதிதேவியும் பரிவார தெய்வங்களும் அருள்பாலிக்க, கூடவே யோக முனிவரான பதஞ்சலி முனிவரும் தனிச் சந்நிதியில் இருந்தபடி யோகமும் ஞானமும் தந்தருள்கிறார். இவரின் பேரருளைப் பெறுவதற்கு ஏராளமான மாணவர்கள் வந்து செல்கின்றனர்.

மதுரையம்பதியில் நடைபெறும், ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரரின் திருக் கல்யாணத்தைத் தரிசிக்க, பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவருமாகச் சேர்ந்து வந்திருந்தனர். அவர்களுக்கு நடராஜ பெருமானின் திருநடனத்தைக் காணவேண்டும் என ஆசை. இதனால் கல்யாணச் சாப்பாட்டைக்கூட அவர்கள் சாப்பிடவில்லை!  

இதையறிந்த ஸ்ரீமீனாட்சியம்மை, சிவனாரிடம் சொல்ல... ஈசன் நடராஜ கோலத்தில் திருநடனம் புரிந்தார். இதில் மகிழ்ந்த பதஞ்சலி முனிவர், மதுரையம்பதியில் வில்வ மரத்தைத் தேடிச் சென்று, அதன் கீழேயே சிலகாலம் தவமிருந்து, சிவனாரை வழிபட்டார். பிறகு, அந்த இடத்தில், ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோயில் எழுப்பப்பட்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

கல்வி யோகம் தரும் பதஞ்சலி முனிவர்!

இங்கே, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார், பதஞ்சலி முனிவர். அத்ரியின் புத்திரன், ஆதிசேஷனின் அவதாரம், ஸ்ரீலட்சுமணன், ஸ்ரீபல ராமன், ஸ்ரீராமானுஜர், திருமூலர் ஆகிய அனைவரும் இவரே எனத் தெரிவிக்கின்றன புராணங்கள்.

யோகசூத்திரம், வியாகரண பாஷ்யம், சரகம் ஆகிய மூன்று நூல்களைத் தந்த பதஞ்சலி முனிவரை வணங்கினால், கல்வியில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. பரீட்சை பயத்தில் இருப்பவர்கள், எத்தனை படித்தாலும் பாடங்கள் நினைவில் இருப்பதே இல்லை என்று வருந்துபவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என லட்சியம் கொண்டவர்கள், வியாழன் மற்றும் பௌர்ணமி நாட்களில் பதஞ்சலி முனிவருக்கு அபிஷேகம் செய்து வணங்க, கூடுதல் பலம் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

பதஞ்சலி முனிவர் அவதரித்த மூல நட்சத்திர நாளில் இங்கு வந்து, பதஞ்சலி முனிவருக்குப் பாலபிஷேகமும், இளநீர் அபிஷேகமும் செய்து வணங்கினால், கல்வி கேள்வியில் சிறந்து விளங்கலாம்; தீராத நோயும் தீரும் என்பது உறுதி.

மதுரை, பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயிலில், ஏழு சித்தர்களுடன் சிவதட்சிணாமூர்த்தியும் தரிசனம் தருகிறார். குருவும் முனிவரும் குடிகொண்டிருக்கும் தலத்தை வந்து  வணங்கினால், கல்வியும் ஞானமும் கைகூடும் என்பதில் ஐயமென்ன?

- பூ.ஜெயராமன்
படங்கள்: க.கார்த்திக்