நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

பரீட்சைக்காக பிரார்த்தனைச் சீட்டு... ஜெயிப்பது நிஜம்!

பரீட்சைக்காக பிரார்த்தனைச் சீட்டு... ஜெயிப்பது நிஜம்!

பரீட்சைக்காக பிரார்த்தனைச் சீட்டு... ஜெயிப்பது நிஜம்!
பரீட்சைக்காக பிரார்த்தனைச் சீட்டு... ஜெயிப்பது நிஜம்!
##~##
ய கலைகள் அறுபத்துநான்கையும் அருளக்கூடியவள்; சப்தமாதர்களில் தனித்துவத்துடன் திகழ்பவள், ஸ்ரீசாமுண்டீஸ்வரி. கர்நாடக மாநிலம், மைசூர் - சாமுண்டி மலையில் தனிக்கோயிலில் அருளாட்சி செய்யும் ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்பிகையைத் தரிசித்திருப்போம். தமிழகத்தில், ஸ்ரீசாமுண்டீஸ்வரி கோயில் கொண்டிருக்கும் திருத்தலம் எங்கே இருக்கிறது தெரியுமா, உங்களுக்கு?

தஞ்சாவூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது நீடாமங்கலம். இங்கிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப் பூவனூர். இங்கே, அமைந்துள்ள ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் திருக்கோயிலில், ஸ்ரீகற்பகவல்லி மற்றும் ஸ்ரீராஜராஜேஸ்வரி என இரண்டு தேவியர் அருட்காட்சி தருகின்றனர். கூடவே, அழகும் கருணையும் பொங்க, கல்வி தரும் தேவியாய் அருள்பாலிக்கிறாள் ஸ்ரீசாமுண்டீஸ்வரி.

செல்வத்தில் இணையற்றதாகப் போற்றப்படுவது கல்விச் செல்வம். இந்தத் தலத்துக்கு வந்து, அம்பிகையை மனதாரப் பிரார்த்திக்கும் மாணவக் கண்மணிகளுக்குக் கல்வி வரம் அருளி, அவர்களை கல்வியிற் சிறந்தவர்களாக்குகிறாள் தேவி எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

பரீட்சைக்காக பிரார்த்தனைச் சீட்டு... ஜெயிப்பது நிஜம்!

ஜனவரி மாதம் முடியப்போகும் தறுவாயில்,  சாமுண்டீஸ்வரியைத் தரிசிக்க, தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் திரண்டு இந்தத் தலத்துக்கு வந்துவிடுகின்றனர், மாணவர்கள். தேர்வுக்கு முன்னதாக ஸ்ரீசாமுண்டீஸ்வரியின் திருச்சந்நிதிக்கு வந்து, அம்பிகைக்கு எலுமிச்சை தீபமேற்றி, பேனா மற்றும் பென்சில் என பரீட்சை எழுதுவதற்குப் பயன்படுத்தும் பொருட்களை அம்மனின் திருப்பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால், அந்த முறை தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவது உறுதி என மலர்ந்த முகத்துடன் தெரிவிக்கின்றனர், மாணவர்கள்.

அதேபோல், ஸ்ரீசாமுண்டீஸ்வரியின் சந்நிதிக்கு எதிரில் சூலம் ஒன்று உள்ளது. 'எனக்குக் கணக்குப் பாடம்தான் தகராறு’, 'இங்கிலீஷ்னாலே எட்டிக்காயா இருக்குது; கெமிஸ்ட்ரின்னாலே வேப்பங்காயா

பரீட்சைக்காக பிரார்த்தனைச் சீட்டு... ஜெயிப்பது நிஜம்!

கசக்குது’ எனத் தங்க ளுக்கு எந்தப் பாடத்தில் குழப்பமும் பயமும் இருக்கிறதோ அந்தப் பாடத்தைக் குறிப்பிட்டு, ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மனை மனதாரப் பிரார்த்தித்து, தங்கள் பிரார்த்தனையை ஒரு சீட்டில் எழுதி சூலத்தில் கட்டிவிட்டு வந்து படித்தால், பாடங்கள் மனதில் பதியும்; தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை!

கலைத்துறையினரும் இந்த அன்னையை வணங்கி அருள்பெற்றுச் செல்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், அம்பிகைக்குப் புடவை சார்த்தி, ஒன்பது முறை வணங்கி, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

சித்திரை மாதத்தில், சாமுண்டீஸ்வரிதேவிக்கு பத்து நாள் உத்ஸவம் களைகட்டும். தை மாதம் கணுப்பொங்கல் நன்னாளில், அம்பிகைக்குச் சிறப்பு பூஜைகளும் அபிஷேக- அலங்காரங்களும் நடைபெறும்.

குறுமுனிவர் அகத்தியரும் இங்கு அருள்பாலிக்கிறார். நம் தாய் மொழிக்கு இலக்கணம் தந்த அகத்தியரையும் வணங்கி வழிபடுவதால், குருவருள் ஸித்திக்கும்; தேர்வை நல்லமுறையில் எதிர்கொள்ள நம்பிக்கை பிறக்கும்.

- இரா.மங்கையர்க்கரசி
படங்கள்: ந.வசந்தகுமார்

ஸ்ரீவித்யா சரஸ்வதி ஹோமம்!

பரீட்சைக்காக பிரார்த்தனைச் சீட்டு... ஜெயிப்பது நிஜம்!

ஸ்ரீசரஸ்வதிதேவியின் அம்சமாக ஸ்ரீசாமுண்டீஸ்வரி குடிகொண்டிருக்கும் திருப்பூவனூர் திருத்தலத்தில், வருகிற பிப்ரவரி 13-ஆம் தேதி காலை 7 முதல் 11 மணி வரை, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக, ஸ்ரீவித்யா சாமுண்டீஸ்வரி ஹோமம் நடைபெறுகிறது.

இந்த நாளில், ஹோம பூஜையில் கலந்துகொண்டு, அம்பிகையைத் தரிசித்து, அவளின் திருப்பாதத்தில் பேனா- பென்சில் மற்றும் நோட்டுப் புத்தகம் என ஏதேனும் ஒன்றை வைத்துப் பிரார்த்திக்க... தேர்வில் வெற்றியும் அதிக மதிப்பெண்களும் பெறுவது உறுதி என்கின்றனர், பக்தர்கள்.