நாவில் சரஸ்வதி நற்றுணையாக...
தொடர்கள்
Published:Updated:

கலைமகளின் அருள் பெறுவோம்!

கலைமகளின் அருள் பெறுவோம்!

கலைமகளின் அருள் பெறுவோம்!
கலைமகளின் அருள் பெறுவோம்!
##~##
ல்விக்கும் கலைகளுக்கும் தலைவியான ஸ்ரீசரஸ்வதிதேவி, சிவனருள் பெறும்பொருட்டு, பல்வேறு தலங்களில் வழிபட்டதாக விவரிக்கின்றன புராணங்கள். அந்தத் தலங்களைத் தரிசித்து வழிபட, கல்வியில் சிறக்கலாம் என்பது ஆன்றோர் அறிவுரை. கலைவாணி வழிபட்ட அந்தத் தலங்களை அறிவோமா?

சீர்காழி: தட்சன் நிகழ்த்திய யாகத்தில் கலந்துகொண்டதால், சிவ நிந்தை புரிந்த குற்றத்துக்கும் தண்டனைக்கும் ஆளானார்கள் பிரம்மனும், கலைவாணியும். இந்தத் தவறுக்குப் பரிகாரமாக இருவரும் சிவலிங்க வழிபாடு செய்து பேறு பெற்ற திருத்தலம் சீர்காழி. இதுகுறித்து  'நாவியலும் மங்கையடு நான்முகன் தான் வழிபட்ட நலங்கோயில்’ என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர்.

கலைமகளின் அருள் பெறுவோம்!

திருக்காளத்தி: முனிவர் ஒருவரின் சாபத்துக்கு ஆளான ஸ்ரீசரஸ்வதிதேவி, விமோசனம் வேண்டி வழிபட்ட தலம் திருக்காளத்தி. இங்கு ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, அதில் நீராடி, சிவ வழிபாடு செய்தாளாம் தேவி. பேச்சு வராத அன்பர்கள் பலரும் இங்கு வந்து வழிபட்டு, இந்தத் தீர்த்தத்தைப் பருகி, பேச்சு வல்லமை கைவரப் பெற்றார்களாம். இங்குள்ள தீர்த்தத்தை விதிப்படி அருந்தினால், நல்ல கல்வியறிவு உண்டாகும் என்பது நம்பிக்கை.

திருமறைக்காடு: சரஸ்வதிதேவி கலைகளின் வடிவமாக நின்று சிவபெருமானை வழிபட்ட தலம் இது. இங்கு வேத சரஸ்வதியாக வீற்றிருக்கும் கலைமகளை வழிபட, தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறலாம்.

கலைமகளின் அருள் பெறுவோம்!

திருவீழிமிழலை: ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீசாவித்திரி, ஸ்ரீசரஸ்வதி ஆகிய மூவராகவும் திகழும் வாக்தேவி, இந்த மூன்று வடிவங்களுடன் வழிபட்ட தலம் திருவீழிமிழலை. இங்குள்ள மூன்று லிங்கங்கள் காயத்ரீஸ்வரர், சாவித்திரீஸ்வரர், சரஸ்வதீஸ்வரர் என அழைக்கப்படுகின்றன. இந்த லிங்க மூர்த்தங்களைத் தரிசித்து, கலைவாணியை மனதாரப் பிரார்த்திக்க, கல்வி-கலைகளில் சிறக்கலாம்.

ராமேஸ்வரம்: இங்கும், சரஸ்வதி மூன்று வடிவங்களில் இருந்து வழிபட்டு அமைத்த தீர்த்தங்கள் உண்டு. அவை முறையே காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி தீர்த்தங்களாகத் திகழ்கின்றன. மாண வர்கள் நன்கு படிக்கவும், படித்ததை நினைவில் நிறுத்தவும், இந்தத் திருத் தலத்துக்கு வந்து இந்தத் தீர்த்தங்களில் நீராடுவதும் இறை வழிபாடு செய்வதும் சிறப்பு!

கலைமகளின் அருள் பெறுவோம்!

மேலும் திருநெய்த்தானம், திருக்குருகாவூர், பெருவேளூர் தலங்களும் கர்நாடக மாநிலத்தில் உடுப்பி, கோகர்ணம் ஆகிய தலங்களிலும் ஸ்ரீசரஸ்வதிதேவி சிவ வழிபாடு செய்து பேறு பெற்றதாகப் புராணங்கள் சிறப்பிக்கின்றன.

புலவர் ஒட்டக்கூத்தர் வழிபட்டு, அருள்பெற்ற சரஸ்வதி தேவியின் தலம் கூத்தனூர். இந்தத் தலத்துக்குச் சென்று மனதாரப் பிரார்த்திக்க, ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் நமக்கு அருளுவாள் கலைவாணி!

தொகுப்பு: செ.கார்த்திகேயன்