Published:Updated:

விழாக்கள்... விசேஷங்கள்!

விழாக்கள்... விசேஷங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
விழாக்கள்... விசேஷங்கள்!

மகா கும்பாபிஜேக திருக்கோயில்கள்

சிவ-விஷ்ணு ஆலயம்

##~##
திருவள்ளூர் அருகே உள்ளது காக்களூர். இங்கே பூங்கா நகர் பகுதியில் அமைந்துள்ளது சிவ- விஷ்ணு ஆலயம். 1991-ஆம் ஆண்டு காஞ்சிப் பெரியவர் ஆசியுடன் மகாகும்பாபிஷேகம் கண்ட இந்தத் திருக்கோயிலில் தற்போது புதிய திருப்பணிகள் நிறைவுற்று, மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

ஸ்ரீகன்னிமூல கணபதி, ஸ்ரீஹயக்கிரீவர் ஆகிய தெய்வ விக்கிரகங்களுடன், நேபாள தலைநகர் காட்மாண்டுவில் உள்ளது போன்று ஸ்ரீஜலநாராயணர் விக்கிரகமும் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக இங்குதான் ஸ்ரீஜலநாராயணர் எழுந்தருளப் போகிறார்.

இப்படி, தெய்வ மூர்த்திகள் பிரதிஷ்டையுடன், இந்தக் கோயிலின் மகா கும்பாபிஷேகம்... 8.6.12 வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குமேல் 7:30-மணிக்குள் நடைபெற இருக்கிறது. பக்தர்கள் யாவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

திருப்பட்டூர் அய்யனார் ஸ்வாமி ஆலயம்

• திருச்சி மாவட்டம், திருப்பட்டூரில் உள்ளது பூரணை- புஷ்கலா சமேத அரங்கேற்ற அய்யனார் ஸ்வாமி திருக்கோயில். ஞான உலா எனும் திருவுலாப்புறம் எழுதப்பட்ட ஓலைச்சுவடியை இடக் கையில் ஏந்தியிருப்பதால், இந்த ஸ்வாமியை ஸ்ரீஅரங்கேற்ற அய்யனார் என்றும் ஸ்ரீஞானஉலா சாஸ்தா என்றும் பக்தர்கள் போற்றுகிறார்கள். இங்கு வந்து அய்யனாரை வேண்டிக்கொள்ள களத்திர தோஷம் நீங்கும்; திருமண வரம் கைகூடும் என்பது நம்பிக்கை. இந்தத் திருக்கோயிலில் 31.5.12 வியாழக்கிழமை காலை 10:45 மணிக்குமேல் 11:45-மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பக்தர்கள் இந்தவைபவத் தில் கலந்து கொண்டு அய்யனாரின் அருள்பெற்று வரலாம்.

விழாக்கள்... விசேஷங்கள்!

பில்லூர் திருக்கோயில்கள்

• நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டத்தில் உள்ள ஊர் பில்லூர். இங்கே ஸ்ரீபிரஹன்நாயகி சமேத ஸ்ரீவீரட்டீஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீவீரநாராயண பெருமாள் திருக்கோயிலில் 31.5.12 வியாழன் அன்று காலை 7:40 மணிக்கு மேல் 8:40-மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

• இதே ஊரில் அருளும் ஸ்ரீபடைவெட்டியம்மன் கோயிலில் வேம்படி ஸ்ரீமுத்துசாமிக்கு புதிய உருவச்சிலை அமைக்கப்பட்டும், ஆலயத்தின் ராஜகோபுர திருமதில் முதலான திருப்பணிகளும் நிறைவேறியுள்ளன. இந்தக் கோயிலில் 31.5.12 வியாழன் அன்று காலை 9 மணிக்குமேல் 10 மணிக்குள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

களமாவூர் ஸ்ரீஅக்னீஸ்வரர் திருக்கோயில்

• புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, களமாவூர் கிராமத்தில் ஸ்ரீகற்பகாம்பிகை சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீஅக்னிஸ்வரர். இவரது ஆலயத்தில் புனரமைப்புத் திருப்பணிகள் நிறைவுற்று, 3.6.12 ஞாயிறு அன்று காலை 9 மணிக்குமேல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கிளாம்பாக்கம் ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம்...

• அகத்திய முனிவர் வழிபட்ட திருத்தலங்களில் ஒன்று கிளாம்பாக்கம். திருவள்ளூருக்கு வடகிழக்கில் (செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 3 கி.மீ. தூரத்தில்) உள்ள இந்தத் தலத்தில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மையுடன் அருள்கிறார் ஸ்ரீஅகத்தீஸ்வரர். அகத்திய முனிவர் இங்குள்ள இறைவனின் திருமேனியைப் பிரதிஷ்டை செய்ததுடன், பல காலம் இந்தத் தலத்தில் தங்கியிருந்து வழிபட்டதாக கோயிலின் தல புராணம் விவரிக்கிறது.

விழாக்கள்... விசேஷங்கள்!

பல்வேறு பெருமைகள் கொண்ட இந்தக் கோயில் சிதிலம் அடைந்ததைத் தொடர்ந்து, பக்தர்களின் பெருமுயற்சியால் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 29.6.12 வெள்ளிக்கிழமை காலை 7:30 மணிக்குமேல் 9:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அகத்தியர் பூசித்த ஆண்டவனை, கும்பாபிஷேக திருநாளில் நாமும் தரிசித்து அருள்பெற்று வருவோம்.

மகா பெரியவா ஷயந்தி மஹோத்ஸவம்

• காஞ்சி மகா பெரியவரின் 119-வது மகா அனுஷ ஜயந்தி மஹோத்ஸவம், சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீஅயோத்யா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 26.5.2012 அன்று துவங்கிய இந்த மஹோத்ஸவம் 9.6.2012 வரை தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

• மஹோத்ஸவ நாட்களில் மகா பெரியவரின் உத்ஸவ மூர்த்தி மற்று ஸ்ரீபாதுகைக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்குத் தேவையான மஞ்சள்பொடி, குங்குமம், விபூதி, தேன், பால், தயிர், பழங்கள், இளநீர், பன்னீர், சந்தனம், வெல்லம், அரிசி, பருப்பு மற்றும் ஹோமத்திற்குத் தேவையான நெய், புஷ்பம் ஆகியவற்றை பக்தர்கள் தந்து உதவலாம் என்று, ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி பக்த ஜன ட்ரஸ்ட் கேட்டுக் கொண்டுள்ளது.

விழாக்கள்... விசேஷங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு