Published:Updated:

வியதீபாத யோகம் - யோகநாளில் பிறக்கும் புத்தாண்டு..!

புத்தாண்டு
பிரீமியம் ஸ்டோரி
புத்தாண்டு

கே.ராஜலட்சுமி

வியதீபாத யோகம் - யோகநாளில் பிறக்கும் புத்தாண்டு..!

கே.ராஜலட்சுமி

Published:Updated:
புத்தாண்டு
பிரீமியம் ஸ்டோரி
புத்தாண்டு

`உலகில் பல சௌபாக்கியங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், அவற்றை எடுத்துப் பயன்படுத்துவதற்கு மனிதர்களால் இயலவில்லை' என்றார் ஞானி ஒருவர்.

அமெரிக்க கோடீஸ்வரர்களில் ஒருவரான கசோகி யிடம், ‘`இத்தனை செல்வங்களும் உங்களிடம் எப்படிச் சேர்ந்தன... அதன் ரகசியத்தைச் சொல்லுங்கள்’’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள்.

புத்தாண்டு
புத்தாண்டு

அதற்கு ஒரே வரியில் பதில் சொன்னார் கசோகி. “சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பேன். நேரத்தை விரயம் செய்ய மாட்டேன். இதுவே என் வெற்றியின் ரகசியம்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதே வழியில் அலெக்சாண்டர் ஓனாசிஸ் என்பவர், “எப்போதும் விழிப்புடன் இருங்கள். ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருங்கள்” என்றார். அவர்கள் இருவருமே குறிப்பிட்டிருப்பது யோகத்துடன் வருகிற நேரத்தைத்தான் என்றால் மிகையில்லை.

இப்படியாக பலர் யோகம் உள்ள நேரத்தைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் அடைகிறார்கள். பலர் யோகத்தில் நம்பிக்கையில்லாமல், `வாழ்க்கை ஒரே சோதனையும் வேதனை யும் நிறைந்தது’ என்று புலம்புவார்கள்.

புத்தாண்டு
புத்தாண்டு

2020-ம் ஆண்டை உற்சாகமாகக் கொண்டாட அனைவரும் தயாராகிக் கொண்டிருப் போம். அதே வேளையில் அன்று இந்திய வானியல் சாஸ்திரப் படி ஐந்து அங்கங்களில் ஒன்றான ‘வியதீபாத யோகம்’ என்கிற சக்தி வாய்ந்த யோகம் சேர்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பஞ்சாங்கம் என்னும் ஐந்து வகையான அங்கங்களில் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றில் யோகம்தான் அன்றைய அதிர்ஷ்டம், பண வருவாய், எதிர்பார்க்கும் நண்பர்கள் கொடுக்கும் நற்செய்தி ஆகிய தனங்கள் பற்றித் தீர்மானிக்கிறது. எனவே யோகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொருவரும் அதன் அதிதேவதையைக் கண்டறிந்து வணங்க வேண்டும்.

புத்தாண்டு, ஜனவரி 1-ம் தேதி (மார்கழி 16-ம் நாள்) சஷ்டி திதி, பூரட்டாதி நட்சத்திரம், வியதீபாத யோகம் சேரும் நாளில் பிறக்கிறது. இந்த யோகத்துடன் கூடிய நாளைப் பற்றி புராணங்களில் சிறப்புடன் சொல்லப்பட்டுள்ளன.

புத்தாண்டு
புத்தாண்டு

எனவே, புதிய ஆண்டின் தொடக்கத்தில், தெய்வ தரிசனம் செய்வது ஆண்டு முழுவதும் நல்ல முன்னேற்றங்களைத் தரும்.

பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 27 யோகங்களில் 17-ம் இடத்திலிருப்பது வியதீபாதம். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் மிகப்பெரிய அந்தஸ்துடன் அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள். 27 நாள்களுக்கு ஒருமுறை இந்த யோகம் வந்து செல்கிறது.

நிதி பெற்ற தெய்வங்கள்

சித்திரை மாதத்தில் அட்சய திருதியையின் போது மக்கள் பொன் நகைகளை வாங்கிக் குவிப்பார்கள். இந்த சுப நாளுக்குச் சமமான சக்தி உடைய நாள்தான் வியதீபாத யோகம் சுபதினம்.

இந்த சுபயோக நாளில் குபேரனும் லட்சுமி தேவியும் சிவபெருமானை வழிபட்டனர். இவர்களது பக்தியைக் கண்டு மகிழ்ந்த ஈசன் அங்கே ஐஸ்வர்ய சிவனாக விஸ்வரூபம் எடுத்துக் காட்சிகொடுத்தார். சகல செல்வங்களையும் அவர்களுக்கு வழங்கி, உலகத்தில் யார் தர்மங்களைக் கடைப்பிடித்து இறைவனை வழிபடு கிறார்களோ அவர்களுக்கு செல்வத்தை வாரி வழங்கும்படி திருவாய் மலர்ந்தார்.

வியதீபாத யோக காலத்தில் தோன்றிய ஐஸ்வர்ய சிவனை அன்றைய நாளில் வழிபட சகல செல்வங்களும் நம்மை வந்து சேரும் என்பது நம்பிக்கை.

வியதீபாத யோகத்தில் என்னென்ன செய்யலாம்?

மார்கழியில் வருகின்ற சக்தி வாய்ந்த யோகமான இந்த மகா யோக காலத்தில் பொன் நகைகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யலாம். குருநாதரைச் சந்தித்து புதிய மந்திரங்களை உபதேசமாகப் பெறலாம்.

விட்டுப்போன உறவுகளைச் சந்தித்து உறவைப் புதுப்பித்துக்கொள்ளலாம். உறவுகளோடு குலதெய்வக் கோயில்களுக்குச் சென்று பூஜைகள் நடத்தி புதிய ஒப்பந்தம், மகன், மகள் திருமணம் தொடர்பான ஜாதகப் பரிமாற்றங்களைச் செய்யலாம். புதிய தொழில் தொடர்பான ஒப்பந்தங்களை மேற் கொள்ளலாம்.

ஐஸ்வர்ய சிவ பூஜை

குபேரனுக்கும் திருமகளுக்கும் நிதிப்பொறுப்பைக் கொடுத்த ஐஸ்வர்ய சிவனை வழிபட தியான மந்திரம் இருக்கிறது. தேவர்கள், மகரிஷிகள், தபஸ்விகள் பூமாரிப் பொழிந்து பல்வகை சக்திவாய்ந்த இந்தத் துதியைப் பாடினர். அப்போது மனமகிழ்ந்து ஈசன் முக்கண்களிலும் கருணை பொழிய கழுத்தில் ருத்ராட்ச மணி அணிந்தவரா கக் காட்சி தந்து அருள்பாலித்தார்.

சிறப்பிற்குரிய இந்த ஐஸ்வர்ய சிவமூர்த்தியை வழிபட்டால் நமக்கு குபேர சம்பத்து தானாகவே வந்து சேரும். ஈசனின் பூஜா கல்ப விதிப்படி ஜனவரி 1-ம் தேதி அன்று (வியதீபாத யோக நாளில்) தொடங்கி அடுத்து வரும் திங்கள் கிழமை வரை தினமும் வழிபடலாம்.

வழிபாட்டின்போது, வில்வதளங்களால் சிவனாரை அர்ச்சனை செய்து இந்த தியான வரிகளைச் சொல்லி வழிபட வேண்டும்.

சாந்த ரூபம் லக்ஷ்மீ குபேர சகிதம்

சசிதர மகுடம் பஞ்ச வக்த்ரம் த்ரினேத்ரம் கட்கம்

டமருகஞ்ச தததம் தட்ச பாகம் வஹந்தம்,

பாசம் நாகஞ்ச கண்டம் ஹஸ்தே

ஸ்வர்ணஞ்ச வர்ஷஞ்ச ரூபம்

சிரஸே சூர்ய சந்த்ரஞ்ச மத்யம்

தேகாலங்கார யுக்தம் ஸ்வர்ணமணி நிபம்

ஐஸ்வர்ய ரூபம் நமாமி!

ஐஸ்வர்ய சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்த மூலமந்திரமும் உண்டு. அப்படியான மந்திரங்கள் கூறி வழிபட இயலாதவர்கள், தேவாரப் பாடல்கள், சிவ துதிப் பாடல்கள் பாடியும் வழிபடலாம்.

உயிர் காக்கின்ற அமிர்த சஞ்ஜீவினி மந்திரத்தைப் போல ஐஸ்வர்ய சிவ மந்திரமும் நமக்குப் பொருளா தார வளத்தைத் தருகின்ற ஆற்றல் உடைய மந்திரமாகக் காணக் கிடைக்கிறது. இவற்றைச் சொல்லி ஐஸ்வர்ய சிவனை வழிபடுங்கள்; விசேஷ யோகத்துடன் இணைந்து பிறக்கும் இந்தப் புத்தாண்டில் உங்களுக்குச் சகல வளங்களும் சேரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism