Published:Updated:

2021 குருப்பெயர்ச்சியில் சிறந்த பலன்களைப் பெற என்ன செய்யலாம்? ஸ்ரீகும்ப குரு பெயர்ச்சி மஹாஹோமம்!

ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சி மஹாஹோமம்

ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சி மஹாஹோமம்

2021 குருப்பெயர்ச்சியில் சிறந்த பலன்களைப் பெற என்ன செய்யலாம்? ஸ்ரீகும்ப குரு பெயர்ச்சி மஹாஹோமம்!

ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சி மஹாஹோமம்

Published:Updated:
ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சி மஹாஹோமம்

நவகிரகங்களில் குருவானவர் பிருகஸ்பதி எனப்படுகிறார், இவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் வியாழனும் ஆவார். இவர் ஆங்கிரச முனிவரின் மகனாவார். இவருக்கு தாரை என்ற மனைவியும் இருக்கிறார். இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு விதமான கலைகளையும் அறிந்து, எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக உயர்த்தப்பட்டார். நவகிரகங்களில் இவரே ராஜகிரகம் என்று போற்றப்படுகிறார். பீதகன், பொன்னன், மறையோன், வேதன், வேந்தன், அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வ மந்திரி, நற்கோள், பிருகஸ்பதி என பதினெட்டு பெயர்கள் கொண்டவர் இவர். இவரே ஒளி படைத்த ஞானிகளையும், அறிவு கொண்ட மேதைகளையும் உருவாக்குபவர்.

குரு பகவான்
குரு பகவான்

ஒரு மனிதனின் முந்தைய கர்மவினைகளின் படியும் தற்போது செய்து வரும் பாவ புண்ணியங்களின் படியும் தான் அமர்ந்து நோக்கும் இடத்தின் படியும் செல்வ வளங்களையும் யோக நிலைகளையும் அருள்பவர் குரு பகவான். ஒருவர் ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள்-பாவங்கள் இருந்தாலும், குருவின் பார்வை சரியாக இருந்தால் தீமைகள் குறைந்து நன்மைகள் சேரும் என்பது ஜோதிட விதி. மனிதனின் அடிப்படைத் தேவையான பணத்தை அளிப்பதால் இவர் ‘தன காரகன்’ என்றும், பணம் சேர காரணமான தொழில்-வேலை-வியாபாரம் போன்ற பிழைப்புக்கும் குருவே ‘ஜீவன காரகன்’ என்றும் மகப்பேறுக்கும் இவரே காரணம் என்பதால் 'புத்திர காரகன்' என்றும் திருநாமம் கொண்டிருக்கிறார்.

நன்மைகள் யாவும் அளிப்பதால் மங்கல நாயகன் என்ற திருப்பெயரும் கொண்டவர் இவர். குரு என்றால், இருளை நீக்குபவர் என்பதால் நம்மிடம் இருந்து வரும் அறியாமையாகிய இருளை நீக்கும் குருவே ஞான வடிவாகவும் விளங்குகிறார். ஞானத்துக்கும் செல்வத்துக்கும் அதிபதியான குருபகவான் எல்லோருக்கும் நலமும் வளமும் வழங்க வேண்டும் என்று பிரார்தித்துக்கொள்வோம்.

நிறம் - மஞ்சள், குணம் - சாத்வீகம், மலர் - முல்லை, ரத்தினம் - புஷ்ப ராகம், சமித்து - அரசு, தேவதை - இந்திரன், பிரத்யதி தேவதை - பிரம்மன், திசை - வடக்கு, ஆசன வடிவம் - செவ்வகம், வாகனம் - யானை, தானியம் - கொண்டைக் கடலை, உலோகம் - பொன், சுவை - இனிப்பு, ராகம் - அடானா, நட்பு - சூரியன், சந்திரன், செவ்வாய், பகை - புதன், சுக்ரன், சமம் - சனி, ராகு, கேது, ஆட்சி - தனுசு, மீனம், மூலத்திரிகோணம் - தனுசு, உச்சம் - கடகம், நீச்சம் - மகரம், நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, தசா காலம் - 16 வருடங்கள், பார்வை - 5, 7, 9-ம் இடங்கள், பாலினம் - ஆண், கோச்சார காலம் - 1 வருடம், உருவம் - உயரம், உபகிரகம் - எமகண்டன் எனும் பண்புகளைக் கொண்ட குரு பகவான் நலம் அருளும் சுப கிரகம் எனப்படுகிறார்.

மங்கலமே அருளும் குரு பகவான் பிலவ ஆண்டு ஐப்பசி திங்கள் 27-ம் நாள் (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு இடம் பெயர உள்ளார். இதுவரை மகர ராசியில் அவிட்டம் 2-ம் பாதத்தில் இருந்து வந்த குரு பகவான் கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3-ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார். இதையொட்டி ஸ்ரீகும்ப குருப்பெயர்ச்சி மஹாஹோமம் ஒன்றை உங்கள் சக்தி விகடன் நடத்த உள்ளது. புதுச்சேரி ஶ்ரீவிஜய விஸ்வமாதா ராஜராஜேஸ்வரி பீடமும் சக்தி விகடனும் இணைந்து நடத்தும் இந்த மஹாஹோமம், பாண்டிச்சேரி - கடலூர் மார்க்கத்தில், இடையார் பாளையம், அருகில் ஞானமேடு கிராமத்தில் (சப்தகிரி நகர்) உள்ள அருள்மிகு சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. 13.11.2021 சனிக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த ஹோமத்தில் வாசகர்கள் பதிவு செய்து கொண்டு சங்கல்பம் செய்து பயன் அடையலாம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

இந்த ஆண்டு குரு பெயர்ச்சியின்படி குறைந்த அளவு பலன் பெற இருக்கும் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ராசியைச் சேர்ந்தவர்களுக்கு சிறிய அளவிலான அலைச்சல், உடல் நலக்குறைபாடு, வேலைச்சுமை, ஏமாற்றங்கள் இருக்கும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள். எனவே மேற்கண்ட 7 ராசிக்காரர்களும் குரு பகவானுக்காகச் செய்யப்படும் இந்த சிறப்பு குரு பெயர்ச்சி ஹோமங்களில் கலந்து கொள்வது கூடுதல் பலன் தரும் எனலாம். மற்ற 5 ராசிக்காரர்களும் கூட கூடுதல் நன்மைகள் பெறவும் இந்த ஹோமத்தில் கலந்து கொள்ளலாம். இந்த மஹா ஆராதனை பைரவ குருஜீ ஸ்ரீமுத்து குருக்கள் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே அனைவரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு குருவருளால் நீங்காத செல்வமும், நிறைவான ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும், புகழ் கொண்ட பேரின்ப வாழ்வும் பெறலாம் என்பது நிச்சயம்.

அன்பார்ந்த வாசகர்களுக்கு...

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் - 30.11.2021 தேதிக்குள்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவைப் பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில் வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் விரைவில் வீடியோ வடிவில் சக்தி விகடன் Youtube சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.