Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

Published:Updated:
உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

கவான் ஸ்ரீகிருஷ்ணரை,  ராதாகிருஷ்ணன் என்றும் அழைப்போம். ஸ்ரீகிருஷ்ணரின் எட்டு மனைவியர் பற்றிய விவரங்களை ஸ்ரீமத் பாகவதம் தெரிவிக்கிறது. ஆனால், ஸ்ரீராதை குறித்து, பாகவதத்தில் அதிகமாகக் குறிப்பிடவே இல்லை. ஸ்ரீராதையின் சரிதத்தை விரிவாகக் கூறும் புத்தகங்கள் ஏதும் உள்ளனவா? எங்கு கிடைக்கும்? படிக்க ஆவலாக உள்ளேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், நப்பின்னைப் பிராட்டியின் சரிதத்தைப் படிக்கவும்  ஆவலாக இருக்கிறேன். இந்த நூல் எங்கு கிடைக்கும்? அறிந்தவர்கள் தகவல் தந்து உதவுங்களேன்!

- அவினாசி முருகேசன், காரமடை.

'மணி மந்திர ஒளஷதம்’ எனும் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக விரும்புகிறேன். ஆனால் இந்தப் புத்தகத்தை பல கடைகளில் தேடியும் கிடைக்கவே இல்லை. இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்? விவரம் தெரிந்த அன்பர்கள், தகவல் தந்து உதவுங்கள்.  

- ஜே.மகேஷ்குமார், திருப்பூர்.

நாயன்மார்கள் பிறந்த தலங்களுக்குப் பயணம் செய்து, அந்த அனுபவத்தை 'சேக்கிழார் அடிச்சுவட்டில்’ என்கிற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார், பொன்.சிவபாத சுந்தரம் என்பவர். இந்த புத்தகத்தை திருச்சி மத்திய நூலகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு படித்ததாக நினைவு. அந்தப் புத்தகம் தற்போது எங்கு கிடைக்கும்? எந்தப் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்? விவரம் அறிந்தவர்கள் தகவல் தாருங்களேன்!

- எஸ்.குமரகுருபரன், திருச்சி.

##~##
பு
துக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு அருகில் நாகுடி எனும் ஊர் உள்ளது. இந்த ஊருக்கு அருகில், வேட்டனூர் எனும் கிராமம் உள்ளது. இங்கு கோயில் கொண்டுள்ள ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு வருகிற 8.7.12 அன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையட்டி, கோயில் ஸ்தல வரலாறு தெரிந்து, அதைப் புத்தகமாக வெளியிடலாம் என்று ஆசை எங்களுக்கு! இந்தக் கோயில் ஸ்தல வரலாறு தெரிந்த அன்பர்கள், தகவல் தந்து உதவினால் மிக்க நன்றி உடையவளாக இருப்பேன்.

- கே.எஸ்.மாலதி, சென்னை-34.

மிழகத்தில் இருந்து கேரளாவுக்குக் குடிபெயர்ந்த அந்தண வகுப்பைச் சேர்ந்தவர்கள் நாங்கள். பாலக்காடு எடத்தறா எனும் பகுதியில் ஸ்ரீமாரியம்மனை குலதெய்வமாக எங்களது மூதாதையர் வழிபட்டு வந்ததாக தெரிகிறது. அந்த தெய்வத்தை சாங்கியமாக வழிபடுகிற முறை எப்படி எனத் தெரியாததால், குடும்பத்தில் நிறைய பிரச்னைகள்!

ஸ்ரீமாரியம்மனை வழிபடும் முறைகள் என்னென்ன? பச்சை என்கிற வழிபாட்டை வீட்டில் வைத்து நடத்துவது சரியா? சரி எனில் பூஜைகளை எவ்விதம் செய்யவேண்டும்? தகவல் தாருங்களேன்!  

- ஸி.க.லக்ஷ்மண சர்மா, பாலக்காடு

ஸ்ரீகாளிதேவியை துதிக்கும் ஜகன்மங்கலம், சர்வமங்கலம் என்னும் கவசங்கள் தெரிந்த வாசகர்கள், அதுபற்றி தகவல் தெரிவித்தால் நலமாக இருக்கும். அல்லது, அந்த ஸ்துதி உள்ள புத்தகம் எங்கு கிடைக்கும் என்கிற விவரத்தை தெரிவித்தாலும் சந்தோஷப்படுவேன்.

-சிவ.கனகசபை, தஞ்சாவூர்.

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

'பல வருடங்களாக எங்களது குலதெய்வம் எது என்றே தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், எங்களது குலதெய்வ அம்மனுக்கு கேரள மாநிலம் சேகரிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கோயில் இருப்பதாக அறிகிறோம். அந்த கோயில் பற்றிய விவரம் தர முடியுமா?’ என்று, கடந்த 3.4.2012 இதழில் சென்னையைச் சேர்ந்த பார்வதி ஷர்மா கேட்டிருந்தார்.

பாலக்காடு டவுனில் இருந்து 3 கி.மீ. தொலைவில்தான் சேகரிபுரம் அமைந்துள்ளது. அங்கு கோயில் கொண்டுள்ள அம்மன், 'ஏமூர் பகவதி அம்மன்’ என்று அழைக்கப்படுகிறார், என்கிற தகவலை கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த வாசகர் ஏ.பி.கணேசன் தெரிவித்துள்ளார்.

'தமிழகத்தில் உள்ள புராண - புராதனக் கோயில்கள் மற்றும் அவற்றின் விவரங்கள் அடங்கிய புத்தகம் ஏதும் உள்ளதா? அந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்?’ என்று, 15.5.2012 இதழில் ரெட்டியார்பாளையம் வாசகர் சி.ஜெயராமன் கேட்டிருந்தார்.

1,188 கோயில்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தொகுத்து ஏழு புத்தகங்களாக வெளியிட்டுள்ளார், கே.சாய்குமார் எனும் அன்பர். திவ்விய தேசங்களும் திருத்தல யாத்திரையும், வந்தாரை வாழ வைக்கும் வைணவத் தலங்கள், பாடல் பெற்ற ஸ்தலங்கள், நால்வர் நயந்த வைப்புத் தலங்கள், சக்தி தலங்களின் வழிகாட்டி, ஆறுமுகனின் திருப்புகழ்த் தலங்கள் மற்றும் ஷடாரண்ய சேக்ஷத்திரங்கள் ஆகிய புத்தகங்கள், 16/28, 2-வது  மெயின் ரோடு, ஜெய் நகர், அரும்பாக்கம், சென்னை-106 எனும் முகவரியில் கிடைக்கும் என்று, திருச்சி வாசகர் ரா.ரகோத்தமன் தெரிவித்துள்ளார்.

'ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தை, அழகுத் தமிழில் கவியரசு கண்ணதாசன் மொழிபெயர்த்திருக்கிறார் என்று அறிகிறேன். இது சரிதானா? அந்த புத்தகத்தின் தலைப்பு என்ன? எங்கே கிடைக்கும்?’ என்று, 29.5.2012 இதழில் சீர்காழியைச் சேர்ந்த பி.கவிதா ஸ்ரீதர் கேட்டிருந்தார்.

ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தை ஆஷா என்ற புனைப்பெயர் கொண்ட கண்ணதாசனின் நண்பரான வழக்கறிஞர் அ.ச.நடராஜன் என்பவர் தமிழில் உரைநடையில் எழுத, கவியரசு கண்ணதாசன் கவிதையாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்துக்கு கண்ண தாசன் பொன்மழை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் சென்னை வானதி பதிப்பகத்தாரால் 9.12.1977 அன்று வெளியிடப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள கிரி டிரேடிங் கடையிலும் கிடைக்கும் என்று, சென்னை வேளச்சேரி வாசகர் டி.சூரியநாராயணன் தெரிவித்துள்ளார்.

மேலும், 30 பதிப்புகளைத் தாண்டிய இந்தப் புத்தகம், பிரசித்தி பெற்ற கோயில்களின் அருகில் உள்ள கடைகளிலும் கிடைக்கும் என்று குமரி மாவட்டம் கொட்டாரம் லட்சுமிபுரம் வாசகி எஸ்.வளர்மதி, சென்னை தி.நகரில் உள்ள கண்ணதாசன் பதிப்பகத்தில் கிடைக்கும் என்று கூத்தனூர் வாசகர் வி.சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கண்ணதாசன் தமிழில் மொழிபெயர்த்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரத்தை பாம்பே சகோதரிகள் பாட, அது சி.டி.யாகவும் வெளிவந்துள்ளது என்று பெங்களூரு வாசகர் என்.ஈஸ்வரன், விருதுநகர் வாசகர் கே.எஸ்.எஸ்.எஸ்.சண்முகம் திருவண்ணாமலை என்.சண்முகம், தேவகோட்டை மு.ஞானசம்பந்தம், நாச்சியார்கோவில் கோ.ஞானசேகரன், கும்பகோணம் வி.சந்தானகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கண்ணதாசனின் பொன்மழை புத்தகத்தை விருதுநகரைச் சேர்ந்த வாசகர் எஸ்.நேசமணி அனுப்பியுள்ளார். இந்தப் புத்தகம், வாசகி கவிதா ஸ்ரீதருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism