Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

Published:Updated:
உதவலாம் வாருங்கள்!
##~##
'சா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ந்தி கல்பம்- சாந்தி சுகுமாரம்’ எனும் புத்தகத்தில், மனிதன் பிறந்தது முதல் 100 வயதுவரை செய்ய வேண் டிய சாந்தி, அபிஷேகங்கள்  ஆகியவை குறித்து விரிவாக கூறப்பட்டு உள்ளதாக அறிகிறேன். ஆனால், அந்தப் புத்தகம் சம்ஸ்கிருதத்தில் உள்ளது. அந்த புத்தகம், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா? எங்கு கிடைக்கும்? விவரம் தெரிந்த அன்பர்கள், தகவல் தாருங்களேன்!

- எஸ்.ராகவன், சென்னை-28

நாங்கள் தெலுங்கு நியோகி (பிராமணர் - சாண்டில்ய கோத்திரம்) வகுப்பைச் சேர்ந்தவர்கள். சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள மரத்தோணி எனும் கிராமம்தான் எங்களுக்குப் பூர்வீகம். ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன்தான் எங்களின் குலதெய்வம் என்பர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டதால், குலதெய்வக் கோயில் எங்கு உள்ளது என்கிற விவரம் ஏதும் தெரியவில்லை. ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மனுக்கு எங்கெல்லாம் கோயில் கள் உள்ளன என்பதைத் தெரிவித்தால், அதில் எங்கள் குலதெய்வக் கோயிலை எப்படியேனும் அறிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

- ஆர்.குருநாதன், பொன்.புதுப்பட்டி

உதவலாம் வாருங்கள்!

ரு எட்டில் வளராப்பிள்ளை, இரு எட்டில் கற்கா கல்வி, மூன்றெட்டில் செய்யா மணம், நான்கெட்டில் பெறாப் பிள்ளை, ஐந்தெட்டில் தேடா செல்வம்... இந்தத் தத்துவ வாசகத்தைச் சொன்னவர் யார்? இதையடுத்து இன்னும் பல அறிவுரைகள் சொல்லப்பட்டுள்ளதா? அவை எந்தப் புத்தகத்தில் உள்ளது? எங்கு கிடைக்கும்?

- கே.ராமசாமி, கோவை-16

ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த கூர்ம அவதாரம் தொடர்பான நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால், என்னிடம் அது தொடர்பான விளக்கப் புத்தகங்கள் இல்லை. அத்துடன், கூர்ம அவதாரம் குறித்து, ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களும் எனக்கு தேவைப்படுகின்றன. அவை எங்கு கிடைக்கும்? அறிந்தவர்கள், தகவல் தந்தால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்!

- எஸ்.கே.அன்பு, தஞ்சாவூர்.

துளசி ராமாயணத்தை படிக்க ஆவலாக உள்ளேன். ஆனால், பல கடைகளில் தேடியும் அந்தப் புத்தகம் கிடைக்கவில்லை. துளசி ராமாயணத்தின் உரைநடை இடம்பெற்ற புத்தகம் எங்கு கிடைக்கும் என்கிற விவரம் தெரிந்தால் சொல்லுங்களேன்!

- வி.சக்திவேல், தென்புத்தூர்.

சிவலிங்க மூர்த்தத்துக்கு, 'திருவாசி’ எனும் அலங்கார வளைவு செய்து கொடுக்க விரும்புகிறேன். திருவாசியை ஆகம விதிகளின்படிதான் செய்ய வேண்டும் என்கின்றனர் சிலர். அதன்படி, எவரிடம் செய்யவேண்டும்? திருவாசி செய்பவர்கள் எங்கு உள்ளனர்?

- இரா.மாரியப்பன், மயிலாடுதுறை.

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

'நீண்ட காலமாக காசநோயாலும் சர்க்கரை நோயாலும் பெரிதும் அவதிப்பட்டு வருகிறேன். இந்த நோயில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு ஸ்லோகங்கள் ஏதும் உள்ளனவா?’ என்று 15.5.2012 இதழில் சுண்டக்குடி வாசகர் ஜே.பாலாஜி கேட்டிருந்தார்.

காசநோய் மற்றும் சர்க்கரை நோய் தீர்க்கும் ஸ்லோகங்களை சௌந்தர்ய லஹரியில் இருந்து எடுத்து எழுதி அனுப்பியுள்ளார் சென்னை வாசகி பத்மினி பாஸ்கர். அந்தப் பாடல் வரிகள்...

சௌந்தர்ய லஹரியின் 44-வது ஸ்லோகம்...

தனோது க்ஷேமம் நஸ்தவ வதன சௌந்தர்யலஹரி
பரீவாஹஸ்ரோத: ஸாணிரிவ ஸீமந்த ஸரணி:
வஹந்தீ ஸீந்தூரம் ப்ரபலகபரீ பாரதிமிர-
த்விஷாம் ப்ருந்தைர் பந்தீக்ருதமிவ நவீ நார்க கிரணம்II

தொடர்ந்து 12 நாட்களுக்கு தினமும் ஆயிரம் முறை இதை ஜபம் செய்வதுடன், அம்பிகைக்கு தேன் நைவேத்தியம் செய்து வணங்கினால், சர்வ ரோகமும் அகலும்.

சௌந்தர்ய லஹரியின் 89-வது ஸ்லோகம்...

நகைர் நாகஸ்த்ரீணாம் காகமல ஸங்கோசஸஸிபி-
ஸ்தரூணாம் திவ்யானாம் ஹஸத இவதே சண்டிசரணௌ
பலானி ஸ்வஸ்தேப்ய: கிஸலயகராக்ரேண தததாம்
தரித் ரேப்யோ பத்ராம் ஸரிய மநிஸமஹ்னாய தததௌII

- இந்த ஸ்லோகத்தை தினமும் ஆயிரம் தடவை ஜபம் செய்ய வேண்டும். அதோடு தேன், வெல்லம், பாயசம் நிவேதனம் செய்துவர, ஸர்வரோக நிவர்த்தி உண்டாகும்.

35-வது ஸ்லோகம்...

மனஸ்த்வம் வ்யோமத்வம் மருதஸி மருத்ஸா ரதிரஸி
த்வமா பஸ்த்வம் பூமி ஸ்த்வயி பரிண தாயம் நஹிபரம்
த்வமேவ ஸ்லாத்மானம் பரிணமயிதும் விஸ்வ வுடிஷா
சிதானந்தாகாரம் ஸிவயுவதி பாவேன பிப்ருஷேII

- இந்த ஸ்லோகத்தை, தொடர்ந்து 45 நாட்களுக்கு ஆயிரம் தடவை வீதம் ஜபிக்க வேண்டும். சர்க்கரை, தேன், பாயசம் ஆகியவற்றில் ஏதேனும் நைவேத்தியம் செய்து வந்தால், க்ஷயரோக நிவர்த்தி உண்டாகும்!

இந்த மூன்று ஸ்லோகங்களையும் சிரத்தையுடன் சொல்லி வந்தால், நிச்சயம் பலன் உண்டு என்கிறார் வாசகி பத்மினி பாஸ்கர்.

'கண்ணெடுத்தாகிலும் காணீரோ...’ என்று துவங்கும் பாடல் வரிகள் மறந்துவிட்டன. முழுதும் தெரிந்தவர்கள், எழுதி அனுப்புங்களேன் என்று 17.4.2012 இதழில் திருவானைக்காவல் வாசகி ஞானம் சுப்ரமணியன் கேட்டிருந்தார்.

'இந்த பாடலை இயற்றியவர் கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார். 'சுத்தானந்த கீர்த்தனாஞ்சலி’ எனும் நூலில் இந்தப் பாடல் உள்ளது என்று தெரிவித்ததுடன், பெங்களுரு வாசகர் பி.சுத்தானந்த மணி, பாடலையும் எழுதி அனுப்பியுள்ளார்.

கண்ணெடுத்தாகிலும் காணீரோ என்
காவிய மாலையைப் பூணிரோ ... (கண்)
பண்ணும் பனுவலும் பரதமும் விரதமும்
பக்தியும் கொண்டிங்கே
நித்தியம் தொழும் என்னை ... (கண்)
பட்டம் பதவி பெற பாடவில்லை ஐயா
பதக்கங்களை என்றும் நாடவில்லை
எட்டெட்டு திக்கிலும் ஓடவில்லை - உம்மை
இதய மோனத்தில் அன்றி தேடவில்லை ஐயா
பேருக்கும் புகழுக்கும் பேராசை படவில்லை
பெரியபேர் வாலையும் பிடித்துக் கும்பிடவில்லை
ஆருயிர்க்குயிராக அறிந்தும்மை நேசித்தேன்
ஆர்வ மலர்களை அள்ளிஅள்ளி பூஜித்தேன்   ... (கண்)