ஆதிகுபேர ஜலகண்டேஸ்வரருக்கு கும்பாபிஷேகம்!

சென்னை புறநகர் பகுதியான போரூர்- காரம்பாக்கம் ரெட்டை ஏரிக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஆதிகுபேர ஜலகண்டேஸ்வரர் கோயில். பழைமைவாய்ந்த இந்தக் கோயிலில் உள்ள சிவசக்தி சொரூப நவக்கிரக சந்நிதி சிறப்புமிக்கது. இங்கே எழுந்தருளியுள்ள நவக்கிரக நாயகர்கள், தங்களது நாயகிகளுடன் ஒரே கல்லில் வடிக்கப்பட்டு இருப்பது சிறப்பு. இவர்களை வலம் வந்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும், தம்பதியர் ஒற்றுமை பலப்படும், குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு அந்தப் பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

அண்மையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் 8.7.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குமேல் 8.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

ஸ்ரீலட்சுமி குபேரர் திருக்கல்யாணம்!

சென்னை, வண்டலூரை அடுத்த ரத்னமங்கலத்தில் புகழ்பெற்ற ஸ்ரீலட்சுமி குபேரர் கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீகுபேர பகவானுக்கென தனியாக அமைந்த கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் ஸ்ரீலட்சுமி மற்றும் குபேரர் திருக்கல்யாண வைபவம் சிறப்புமிக்கது. இந்த ஆண்டுக்கான அந்த வைபவம் ஜூலை 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடைபெறுகிறது. திருக்கல்யாணத்துக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து மாலை மற்றும் மலர்க் கிளி வரவழைக்கப்படுவது விழாவின் தனிச்சிறப்பு.

திருக்கல்யாணம் முடிந்தபிறகு, பக்தர்கள் அழைப்பின்பேரில் அவர்களது இல்லத்துக்கு ஸ்ரீலட்சுமி குபேர உற்சவ மூர்த்தி எழுந்தருளுவார். ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை அவ்வாறு எழுந்தருளும் ஸ்ரீலட்சுமி குபேரரை, பக்தர்கள் தங்கள் இல்லத்துக்கு விருந்துக்கு அழைக்கலாம்... அதாவது, புதிதாய் திருமணம் ஆனவர்களை நாம் விருந்துக்கு அழைப்பது போன்று, இந்த தெய்வங்களையும் விருந்துக்கு அழைத்து பூஜித்து வழிபடலாம் என்று அந்தக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஸ்ரீவித்யாபதீஸ்வரருக்கு கும்பாபிஷேகம்!

. தி.ருவண்ணாமலை மாவட்டம்- ஆரணி வட்டத்தில், ஆற்காடு- ஆரணி வழியில், தாமரைப்பாக்கம் என்ற இடத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது புத்தூர் என்கிற '12 புத்தூர்’ கிராமம். இங்கே உள்ள ஸ்ரீஅட்சரவல்லி சமேத ஸ்ரீவித்யாபதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் 8.7.12 ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 மணிக்கு நடைபெற உள்ளது. அன்று மாலை 3 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது..
இந்தக் கோயில் இறைவனைத் தேடி வந்து வழிபட்டால் கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்கிறார்கள். அதோடு பேச்சு வராத தன்மை, திக்குவாய் போன்ற குறைபாடு உள்ள குழந்தைகளை இங்கு அழைத்து வந்து வழிபட்டால், அவர்களது பிரச்னைகள் நீங்குவதாகவும் நம்பிக்கை.