Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

Published:Updated:
உதவலாம் வாருங்கள்!

ங்கள் குலதெய்வம் எது என்பது நீண்டகாலமாகவே எங்களுக்குத் தெரியவில்லை. அதனால், அந்தத் தெய்வத்துக்கு சரியான வழிபாடு செய்ய முடியாத நிலையில் உள்ளோம். அண்மையில் ஓலைச்சுவடியில் எங்களது குலதெய்வம் எது என்று பார்த்தபோது, திருவிடைமருதூரில் உள்ள சிவன் கோயில் என்று பதில் வந்தது. இது, எந்தவகையில் சரியானது என்பதை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை. எங்களது முன்னோர் பேரையூர் என்கிற ஊரில் வாழ்ந்தவர்கள் என்பதால், எங்களது குலதெய்வம் எது என்பது பற்றிய தகவல் அறிந்தோர் தெரிவித்து உதவுமாறு வேண்டுகிறேன்.

- எஸ்.சரஸ்வதி சுப்ரமணியம், புதுச்சேரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உதவலாம் வாருங்கள்!

னக்கு வில்வ மரக்கன்றுகள் தேவைப்படுகின்றன. அவற்றில் 7, 9, 11, 15, 21, 27 இதழ்கள் கொண்ட மரங்கள் இருப்பதாக அறிந்தேன். இந்த மரக்கன்றுகள் எங்கே கிடைக்கும் என்று, விவரம் தெரிந்த அன்பர்கள் தகவல் சொன்னால் மிகவும் மகிழ்வேன்.

- ஏ.சிகாமணி, காவேரிப்பாக்கம்

கௌரு திருப்பதி ரெட்டி எழுதிய வாஸ்து சாஸ்திரத்தின் தமிழாக்கம் படிக்க விரும்புகிறேன். இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்? மேலும், தெளிவான விளக்கவுரை கொண்ட ராமாயணம், மகாபாரதம் ஆகிய புத்தகங்களையும் வாங்கிப் படிக்க ஆசைப்படுகிறேன். இந்தப் புத்தகங்களை எங்கே வாங்கலாம், அவற்றின் விலை என்ன என்கிற விவரங்கள் உங்கள் மூலம் எனக்கு கிடைத்தால் சந்தோஷப்படுவேன்.

- கே.காளியப்பன், சென்னை-51

ராஜாஜி எழுதிய 'பக்தி வயல்’ என்கிற பாகவதச் சுருக்கம் அடங்கிய புத்தகம் எனக்கு தேவைப்படுகிறது. பல புத்தகக் கடைகளில் அதைத் தேடிப் பார்த்துவிட்டேன்.  கிடைக்கவில்லை. அந்த புத்தகம் எங்கே கிடைக்கும் என்கிற விவரம் தெரிந்த அன்பர்கள் எனக்கு அதுபற்றிய நல்ல தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.

- பிரேமா, திருச்சி

##~##
ஸ்ரீ
லலிதா சகஸ்ரநாமத்துக்கு சி.வெ.ராதாகிருஷ்ண சாஸ்திரி என்பவர் தமிழில் உரை எழுதி இருக்கிறார். அந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு நாமத்துக்கும் தனித்தனியாக அர்த்தமும் விளக்கப் பேருரையும் தந்துள்ளார். அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க விரும்புகிறேன். ஆனால், எனக்கு அந்தப் புத்தகம் கிடைக்கவில்லை. யாரேனும் அந்தப் புத்தகம் பற்றி அறிந்திருந்தால் எனக்கு தகவல் தெரிவித்து உதவவும். அந்தப் புத்தகத்தின் நகல் பிரதி எடுத்து அனுப்பினாலும் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

- டி.கே.ஜெயபாலன், மதுரை

சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களும் நடந்த திருத்தலங்கள் எவை, அவற்றின் இன்றைய பெயர் என்ன, அந்தத் திருத்தலங்களை தரிசிக்க எப்படிச் செல்ல வேண்டும்... என்கிற தகவல்கள் அடங்கிய புத்தகம் விற்பனையில் உள்ளதா? மேலும், 36-ஆவது திருவிளையாடல் நிகழ்ந்தது திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் என்றும், பன்றிக் குட்டிகளுக்கு பால் கொடுத்து லீலை புரிந்தது பன்றிமலை என்றும், பரியை நரியாக்கியது பொன்னமராவதி அருகே உள்ள ஒரு திருத்தலம் என்றும் அறிகிறேன். இவை உண்மைதானா? எந்தப் புத்தகத்தில் இதுபற்றிய விவரங்கள் கூறப்பட்டுள்ளன? இந்தத் தகவலையும் எனக்கு தெரிவித்து உதவ வேண்டுகிறேன்.

- எஸ்.குமரகுருபரன், திருச்சி

ஸ்ரீகுபேர பகவான் பற்றிய விரிவான தகவல்களை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அதோடு, அவரை எவ்வாறெல்லாம் வழிபாடு செய்தால் நம் இல்லத்தில் செல்வம் பெருகிக்கொண்டே இருக்கும் என்பதையும், விவரம் அறிந்தவர்கள் சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

- ஏ.ராஜேஸ்வரி, மதுரை

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

ஸ்ரீதேவி மகாத்மியத்தின் 700 மந்திரங்களின் சாரமாகக் கருதப்படுவது ஸ்ரீதுர்காசப்த ஸ்லோகி. இந்த மந்திரங்கள் அடங்கிய புத்தகம் எங்கே கிடைக்கும் என்று 24.7.2012 இதழில், சென்னை வாசகர் எஸ்.நாகராஜன் கேட்டிருந்தார்.

'ஸ்ரீதேவி மஹாத்மியத்தின் ஸ்ரீதுர்காசப்த ஸ்லோகி நூல் தமிழில் கிடைக்கிறது. வரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம் என்ற பெயரில் வெளிவந்துள்ள அந்த நூல், '16/7, ராஜாபாதர் தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-600 017’ என்கிற முகவரியில் இயங்கிவரும் நர்மதா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. அங்கே அதை விற்பனைக்கு வாங்கிக்கொள்ளலாம். தவிர, சென்னை எழும்பூரில் உள்ள 'கன்னிமாரா பொது நூலகத்திலும் இந்த நூலை படித்தறியலாம். அங்கே சென்று, நகலுக்கான கட்டணத்தை செலுத்தி, தேவையான பக்கங்களை நகலும் எடுத்துக்கொள்ளலாம்'' என்று, சென்னை சைதாப்பேட்டை வாசகி ராஜேஸ்வரிமதி தெரிவித்துள்ளார்.

இதே வாசகி...

''சீர்காழி கோவிந்தராஜன் பாடிய கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், அபிராமி அந்தாதி ஆகிய பாடல்கள் அடங்கிய சி.டி. எனக்குத் தேவைப்படுகிறது. அதேபோல், கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு சிவன் கோயில், ஹளபேடு சிவன் கோயில், உடுப்பி கிருஷ்ணர் கோயில், மைசூர் சாமுண்டீஸ்வரி, கொல்லூர் மூகாம்பிகை கோயில்களின் தலவரலாறு அடங்கிய நூல் எங்கே கிடைக்கும்?'' என்று, 24.7.2012 இதழில் கேட்டிருந்த திருப்பூர் வாசகி எஸ்.பி.இந்திராணியின் கடிதத்துக்கும் பதில் எழுதியிருக்கிறார்.

'சீர்காழி கோவிந்தராஜன் பாடியுள்ள அபிராமி அந்தாதி, கந்தர் அலங்காரம் சி.டி.யும், சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கந்தர் அலங்காரம் பாடல்கள் அடங்கிய சி.டி.யும் சென்னை மயிலாப்பூரிலுள்ள 'கிரி டிரேடிங் நிறுவனத்தில் விற்கப்படுகிறது. இதேபோல், சென்னை தி.நகரில் உஸ்மான் சாலையில் சரவணபவன் ஹோட்டலுக்கு எதிரில் உள்ள 'நியூ சாந்தி ஸ்டோர்ஸ் கடையிலும் கிடைக்கிறது. அதோடு, கோவையில் உள்ள கிரி டிரேடிங் கிளையிலும் அவை விற்பனைக்கு கிடைக்கும்.

மேலும், கர்நாடகாவில் உள்ள சில ஆலய விவரம் பற்றியும் வாசகி எஸ்.பி.இந்திராணி கேட்டிருந்தார். 'மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழகாட்டி’ என்ற விளக்கமான நூல் சேலம் பா.அன்பரசு என்பவரால் விவரமாக எழுதப்பட்டு, 'புதிய புத்தக உலகம், 52சி, வடக்கு உஸ்மான் சாலை (பனகல் பார்க்) அருகில், தி.நகர், சென்னை- 600 017’ என்ற முகவரியில் விற்பனைக்குக் கிடைக்கிறது' என்று தெரிவித்துள்ளார் வாசகி ராஜேஸ்வரி மதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism