Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

Published:Updated:
உதவலாம் வாருங்கள்!
##~##
கோ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் வாழ்ந்த சித்தர்கள், முனிவர்கள், தவயோகிகள், மகான்கள் பற்றியும், அவர்களை வழிபடும் முறைகள் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தகவல் தெரிந்தவர்கள் எனக்கு உதவ வேண்டுகிறேன்.

- த.பதாகை, வீராச்சிமங்கலம்

ங்களது குலதெய்வம் திருச்சி, மணப்பாறையில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீமான்பூண்டி நல்லாண்டவர். இவரைப் பற்றிய வரலாற்றைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். மேலும், அந்த ஸ்வாமி குறித்து வெளியான போற்றிப் பாடல்கள், ஸ்தோத்திரம் ஆகியவையும் எனக்குத் தேவைப்படுகிறது. எந்தக் கிழமையில் ஸ்ரீமான்பூண்டி நல்லாண்டவருக்கு விரதம் இருந்து வழிபட்டால் நல்லது நடக்கும்? உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் அதைத் தெரியப்படுத்தி உதவலாமே..!

- பா.வைஷ்ணவி பாலகிருஷ்ணன், சின்னமனூர்

சித்தர்கள் பற்றிப் படிப்பதில் ஆர்வம் உள்ளவள் நான். சித்தர்களில் பெண்கள் யாரேனும் இருக்கிறார்களா? இருக்கிறார்கள் என்றால், அவர்களைப் பற்றிய வரலாறு மற்றும் விவரங்கள் எங்கே நூலாக கிடைக்கும் என்று எனக்கு தெரியப்படுத்தினால் மிகவும் மகிழ்வேன். அத்துடன்,

'சிவம் எங்கே எங்கே எங்கே...
சிவசக்தி எங்கே எங்கே...
சிந்தனை செய் மனமே...’

என்கிற பல்லவியுடன் துவங்குகிற பாடலின் அடுத்தடுத்த வரிகள் என்னவென்று அறியவும் ஆவலாக இருக்கிறேன். அந்தப் பாடல் உள்ள சி.டி., எங்கு கிடைக்கும் என்று சொன்னாலும் பயனுள்ளதாக இருக்கும்.

- மீனாரவிகுமார், சென்னை-116

நாங்கள் கார்காத்த இனத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் குலதெய்வக் கோயில் எங்குள்ளது என்று தெரியவில்லை. ஜோதிடம் பார்த்ததில், மதுரைக்குத் தென்கிழக்கே (சிவகங்கை மாவட்டம்) ஆற்றங்கரையில் இருந்து சற்றுத் தள்ளியிருக்கும் மலைமீது ஒரு சிவன் கோயில் இருப்பதாகவும், அந்த மலைக்குக் கீழே குகையில் இருக்கும் அம்மனே எங்களது குலதெய்வம் என்றும் தெரியவந்தது. குலதெய்வ அம்மனின் பெயர் காளி, சூலி என்று 'ளி’ அல்லது 'லி’யில் முடிவதாகவும், ஆண் தெய்வம் குமரகுரு என்றும் சொன்ன ஜோதிடர், எங்களது அந்தக் குலதெய்வ கோயிலுக்கு அருகில் பெருமாளும் கோயில் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். ஜோதிடர் அடையாளம் சொன்ன இந்தக் கோயிலை எங்களால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களுக்கு அதுபற்றித் தெரிந்திருந்தால் எனக்குத் தெரிவியுங்களேன்.

- விக்னேஷ், கோவை-21

ங்கள் மூதாதையர்கள் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விவசாயம் செய்து பிழைப்பதற்காக இன்றைய வாணியம்பாடியில் குடியேறினார்கள். நாங்கள் வட இந்திய பிராமணர்கள். இப்போது பிரச்னை என்னவென்றால், என் பிள்ளைகளுக்குத் திருமண வயது கடந்தும் திருமணம் இன்னும் நடைபெறவில்லை. குலதெய்வ வழிபாடு செய்தால் வீட்டில் நல்லது நடக்கும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். ஆனால், எங்கள் குலதெய்வம் எது என்பது தெரியவில்லை. இதுபற்றி யாரேனும் அறிந்திருந்தால், எங்களுக்குத் தெரியப்படுத்தி உதவ வேண்டுகிறேன்.

- பி.ஆர்.ரவிசங்கர் அக்னிஹோத்ரி, சென்னை-23

ழநி மலைக்கோயில் பிராகாரத்தில் கவிகுஞ்சர பாரதி இயற்றியதாக, 'தரணிதனில் அறுபத்தறு கோடி தீர்த்தமும் உன் சரவணத்துள் அடக்கம்...’ மற்றும் 'பங்கயம் திகழ் சரவணபொய்கை மூழ்கிடில் பவத்திருளை நீக்கிவைக்கும்...’ என இரண்டு பாடல்கள் எழுதப்பட்டுள்ளதைப் பார்த்தேன். மேற்படி பாடல்களை இயற்றிய கவிகுஞ்சர பாரதியின் இதர பக்திப் பாடல்களை யாரேனும் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்களா? வெளியிட்டு இருக்கிறார்கள் என்றால், எந்தப் பதிப்பகம் அவற்றை வெளியிட்டுள்ளது, அந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் ஆகிய விவரங்களை எனக்குத் தெரிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும். மேற்கண்ட பாடல் இடம்பெற்றுள்ள பகுதிகளை நகல் எடுத்து அனுப்பினாலும் மகிழ்வேன்.

- ஆ.முருகேசன், மணச்சநல்லூர்

ஜூரஹரேஸ்வரர் ஸ்வாமியின் வரலாறு மற்றும் அவருக்கு செய்யக்கூடிய வழிபாட்டு முறைகள் என்னென்ன என்பதை அறிய ஆசைப்படுகிறேன். இந்த ஸ்வாமிக்கு பன்னீர், சந்தனம் போன்றவை மட்டுமே அபிஷேகம் செய்து தயிர் சாதம், மிளகு ரசம் நிவேதனம் செய்து வழிபட்டால் ஜுரம் குணமாகும் என்கிறார்கள். இது போன்ற தகவல்களும், அந்த ஸ்வாமியின் வரலாறும் அடங்கிய புத்தகம் எங்கு கிடைக்கும்?

- ஆர்.வேங்கட பாலசுப்ரமணியம், கொசப்பாளையம்

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

'சிறுவாச்சூர் மதுர காளியம்மனின் புகழ்பாடும் சிறுவாச்சூர் மதுரகாளி அந்தாதி பாடலை ஆர்.கோபாலசாமி என்பவர் எழுதியுள்ளார். அந்தப் பாடலை முழுமையாகத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். அந்தப் பாடலின் பிரதியை அனுப்பிவைத்தால் மகிழ்வேன்’ என்று, 24.7.12 இதழில் சென்னையைச் சேர்ந்த வாசகி எஸ்.ராஜலட்சுமி கேட்டிருந்தார்.

வாசகி எஸ்.ராஜலட்சுமி கேட்ட சிறுவாச்சூர் மதுரகாளி அந்தாதி பாடலின் பிரதியை சென்னை தி.நகரைச் சேர்ந்த வாசகி கீதா கங்காதரன் நகல் எடுத்து அனுப்பியுள்ளார். அந்த நகல் பிரதி, வாசகி எஸ்.ராஜலட்சுமிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

'ஸ்ரீதுர்கா ஸப்த ஸ்லோகம் படிக்க ஆவலாக இருக்கிறேன். அந்த மந்திரங்கள் அடங்கிய புத்தகம் எங்கே கிடைக்கும்?’ என்று, 24.7.12 இதழில் சென்னை வாசகர் எஸ்.நாகராஜன் கேட்டிருந்தார்.

'ஸ்ரீதுர்காதேவி ஸ்தோத்ரமாலா என்கிற புத்தகம், சென்னை மயிலாப்பூரில் உள்ள கிரி டிரேடிங் நிறுவன வெளியீடாக வந்துள்ளது. அந்தப் புத்தகத்தில் வாசகர் எஸ்.நாகராஜன் கேட்ட தகவல்கள் கிடைக்கும்'' என்று தெரிவித்துள்ள திருப்பூர் வாசகர் டி.சுவாமிநாதன், அந்தப் புத்தகத்தில் இருந்து ஸ்ரீதுர்கா ஸ்ப்த ஸ்லோகம் இடம்பெற்றுள்ள இரண்டு பக்க நகல் பிரதியை அனுப்பியுள்ளார்.

இதுவும், சென்னை அண்ணாநகர் வாசகி ஜெயந்தி அனுப்பியுள்ள ஸ்ரீதுர்கா ஸப்த ஸ்லோகம் கொண்ட நகல் பிரதியோடு, துர்கா த்வாத்ரிம்சந் நாம மாலா என்கிற ஸ்தோத்திரப் பாடலின் நகல் பிரதியும் சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism