Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

Published:Updated:
உதவலாம் வாருங்கள்!
ன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாகத் தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.
உதவலாம் வாருங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவாரூர், திருக்காரவாசல் உள்ளிட்ட ஏழு தலங்களை, சப்தவிடங்கத் திருத்தலங்கள் என்பார்கள். இதேபோல் 'உபவிடங்கத் தலங்கள்’ என்றும் இருப்பதாகச் சொல்கின்றனர். அவை எந்த ஆலயங்கள்? எப்படிச் செல்வது? விவரம் தெரிந்த அன்பர்கள், தகவல் தாருங்களேன்!

- செ.சந்திரகுமார், சென்னை-44

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோயிலில், அபரக்ரியா செய்யும் திருத்தலம் எதுவென்று தெரியவில்லை. பிரசித்தி பெற்ற இந்தத் தலம் எங்கே இருக்கிறது? அன்பர்கள் தெரிவியுங்களேன்.

- கணபதி, பாலக்காடு

சிறு வயதில் பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஸ்லோகம் (துவாதஸ ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம்) சொல்லி வந்தவள் நான். தற்போது என் பேத்திக்குச் சொல்லித் தர ஆசை; ஆனால், அந்த ஸ்லோகம் மறந்துவிட்டது. துவாதஸ ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம் எனும் நூல் எங்கு கிடைக்கும்? அல்லது எவரிடமேனும் இருப்பின், பிரதி எடுத்து அனுப்பி உதவுங்களேன்.

- என்.லலிதா, மயிலாடுதுறை

##~##
ஸ்ரீ
சக்கரம், பிரமிட் ஆகியவை குறித்த முத்துகிருட்டிணன் என்பவரது ஆராய்ச்சி நூல்களை பல வருடங்களாகத் தேடி வருகிறேன். இந்தப் புத்தகங்கள், எங்கு கிடைக்கும்? சி.டி. அல்லது கேசட்டுகளாக வெளியிட்டிருக்கிறார்களா? இதுகுறித்து விவரம் தெரிந்தவர்கள் தகவல் தெரிவித்தால், வாங்கிப் படித்துப் பயன்பெறுவேன்.

- ராஜேஷ், கோலார்தங்கவயல்

சூர சம்ஹார ஸ்லோகங்கள், சத்ரு நாச மந்திரங்கள், கடன் தொல்லையில் இருந்து விடுபடுதல் மற்றும் செய்யாத குற்றத்துக்கு தண்டனை கிடைக்காமல் இருப்பதற்குச் சொல்லவேண்டிய ஸ்ரீஅனுமன் ஸ்லோகங்கள் ஆகியவை எந்த நூலில் உள்ளன? இவை சி.டி.க்களாகவும் வந்துள்ளதாமே? எங்கு கிடைக்கும்? அன்பர்கள் தகவல் தந்து உதவுங்களேன்!

- மணிஷ், பெங்களூரு

காஞ்சிப் பேரருளாளன் ஸ்ரீவரதராஜ பெருமாளைப் போற்றி எழுதப்பட்ட 'ஸ்ரீவரதராஜஸ்தவம்’ எனும் ஸ்தோத்திரத்தைப் படிக்க ஆவலாக உள்ளேன். இந்த நூல், எங்கே கிடைக்கும்?

- காயத்ரி ராஜாராமன், சென்னை-4

ல வருடங்களுக்கு முன், பொதிகை தொலைக்காட்சியில் 'ரமண ஒளி’ எனும் பெயரில் பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் சரிதம் ஒளிபரப்பானது. இந்தத் தொகுப்பின் குறுந்தகடு எங்கேனும் கிடைக்குமா? முகவரி தந்து உதவுங்களேன்.

- பா.சௌந்தரபாண்டி, மதுரை-1

'அகத்தியம்’ எனும் நூல், பாடல்களும் உரைநடையுமாக விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளதாமே? இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்? இதுகுறித்து அறிந்த அன்பர்கள், தகவல் தந்து உதவினால், மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்.

- ஏ.எஸ்.தீட்சிதர், திருவானைக்காவல்

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

விநாயக சதுர்த்தி நாளில், 21 பத்ரங்களைக் கொண்டு வழிபடவேண்டும் என்பர். அவை என்னென்ன? எங்கு கிடைக்கும்? என்று சென்னை வாசகி சுதாகிருஷ்ணன் கேட்டிருந்தார்.

மாசீ பத்ரம்- மாசிப்பச்சை,  ப்ருஹதீ பத்ரம் - கண்டங்கத்திரி, பில்வ பத்ரம்- வில்வம், தூர்வாம் பத்ரம்- அருகு, துர்த்தூர பத்ரம்-ஊமத்தை இலை, பதரீபத்ரம்- இலந்தை இலை, அபாமார்க பத்ரம்- நாயுருவி, துளஸீ பத்ரம்- துளசி, சூதபத்ரம்- மாவிலை, கரவீரபத்ரம்- அரளி இலை, விஷ்ணுக்ராந்த பத்ரம்- விஷ்ணுகிராந்தி, ஆமலகீ பத்ரம்- நெல்லி இலை, மருவக பத்ரம்- மருக்கொழுந்து, ஸிந்தூர பத்ரம்- நொச்சி இலை, ஜாதீ பத்ரம்- ஜாதிமல்லி இலை, கண்டலீ பத்ரம்- வெள்ளெருக்கு, ஸமீ பத்ரம்- வன்னி இலை, ப்ருங்கராஜ பத்ரம்- கரிசலாங்கண்ணி இலை, அர்ஜுன பத்ரம்- வெண்மருத இலை, அர்க்க பத்ரம் - எருக்கு இலை, தாடிமீ பத்ரம்- மாதுளை இலை. _ என 21 பத்ரங்களின் (இலைகளின்) பெயர் களை எழுதி அனுப்பியிருப்பதுடன் 'பெரும்பாலானவை கிராமப்புறங்களில் கிடைக்கும்; சென்னையில், திருவல்லிக்கேணி ஜாம்பஜாரில் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்’ என்று செகந்திராபாத் வாசகர் வி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை வாசகர்கள் வே.சுப்ரமணியன், பத்மினி பாஸ்கர், உடுமலைப்பேட்டை வாசகர் இரா.பரமேசுவரன், கல்லிடைக்குறிச்சி வாசகர் ஆர்.ஜி.கிருஷ்ணன் ஆகியோரும் 21 பத்ரங்களின் பெயர்களை தெரிவித்துள்ளனர்.

உதவலாம் வாருங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism