Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

'காலமெலாம் பாலனவன் கணேசன் திருமுகத்தோன்
சூலமொடு ஐம்முகத்தோன் சூரனோடு நான்முகனும்...'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்று ஆரம்பிக்கும் ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீசுப்ரமணிய புஜங்கத்தின் தமிழாக்கம் 33 பாடல்கள் கொண்டது. இதைப் படிக்க ஆசைப்படுகிறேன். பல இடங்களில் தேடியும் எனக்கு அந்தப் பாடல்கள் கிடைக்கவில்லை. உங்களில் யாரிடமாவது அந்தப் பாடல்கள் இருந்தால், எனக்கு அதை நகல் எடுத்து அனுப்பி உதவுங்களேன்..!

- லலிதா வெங்கடரமணன், சென்னை-4

ங்கள் ஊரில், அரச மரத்தடியில் சிவலிங்கத்தையும் நந்திகேஸ்வர பெருமானையும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள். அங்கே நாங்கள் பிரதோஷ நாட்களில் பூஜை செய்கிறோம். இப்போது எங்களுக்கு நந்திகேஸ்வர பெருமானை தனியாக வழிபாடு செய்வதற்கான விவரங்கள் அடங்கிய புத்தகம் தேவைப்படுகிறது. சம்ஸ்கிருதம் அல்லது தமிழில் அந்த புத்தகம் எங்கே கிடைக்கும்? வாசகர்கள் யாரிடமாவது அந்தப் புத்தகம் இருந்தாலும் எனக்கு நகல் எடுத்து அனுப்பலாமே..!

- கே.கே.ஜானகிராமன், கோவைபுதூர்

##~##
தி
ருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் என்கிற ஊரில் 1831-ஆம் ஆண்டு அவதரித்து, புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் என்கிற ஊரில் 1878-ஆம் ஆண்டு ஸித்தியான மகான் ஸ்ரீசுந்தர ஸ்வாமிகள். 'மனோன்மணீயம்’ சுந்தரம்பிள்ளை அவர்களின் குருவும் இவரே! ஸ்ரீசுந்தர ஸ்வாமிகளின் வாழ்க்கை சரிதத்தை தொகுக்கும் பணியில் தற்போது நான் ஈடுபட்டு வருகிறேன். இந்த மகானின் பூவுலக வாழ்க்கை தொடர்பான நிகழ்வுகளை அறிந்தவர்கள், அவை தொடர்பான குறிப்புகளை வைத்திருப்பவர்கள் அவற்றை நகல் எடுத்து அனுப்பினால், எனது பணிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும், நிஜானந்த விலாஸம், ஸ்வானுபூதி ரஸாயனம், அனுபவரச மஞ்சரி ஆகிய நூல்களையும் ஸ்ரீசுந்தர ஸ்வாமிகள் எழுதியிருக்கிறார். இந்த நூல்கள் எங்கே கிடைக்கும் என்கிற விவரம் தெரிந்தவர்களும், அதுபற்றிய தகவலை எனக்குத் தெரிவித்து உதவ வேண்டுகிறேன்.

- ஆர்.சுப்ரமணியன், அரிமளம்

ங்களின் குலதெய்வம் எது என்று நீண்ட காலமாகவே தெரியவில்லை. அதனால், குலதெய்வ வழிபாடு செய்ய முடியவில்லை. தற்போது, குலதெய்வத்தை வணங்காத காரணத்தால் பல துன்பங்களுக்கு ஆளாகி வருகிறோம். சமீபத்தில் ஓலைச்சுவடியில் குலதெய்வம் எது என்று பார்த்தபோது, எங்களின் குலதெய்வம், சீர்காழி அருகில் மங்கைமடம் எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் என்பது தெரிய வந்தது. இந்தக் கோயில் மற்றும் அங்குள்ள ஸ்வாமி தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள், அதை எங்களுக்குத் தெரிவித்து உதவ முடியுமா?

- ஆர்.வெங்கடேஷ், பாப்பானேரி

உதவலாம் வாருங்கள்!

''திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடல்கள் அடங்கிய திரட்டை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தேன். இப்போது எனக்கு அந்தப் புத்தகம் தேவைப்படுகிறது. எங்கே கிடைக்கும்?'' என்று, 18.9.12 இதழில் காரமடை வாசகர் அவினாசி முருகேசன் கேட்டிருந்தார்.

'திரு.மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய பாடல்கள் அடங்கிய பழைமையான தொகுப்பு நூல் சென்னை அடையாறில் உள்ள உ.வே.சா. நூலகத்தில் உள்ளது. மேற்படி நூலகத்திற்குச் சென்று, அந்த புத்தகத்தில் இருந்து நமக்குத் தேவையான பக்கங்களை நகல் எடுத்துக்கொள்ளலாம். மற்ற இடங்களில் இந்தப் புத்தகம் கிடைப்பது அரிது...' என்று, சென்னை வாசகர் ஸ்ரீசனத்குமாரன் என்பவர் தெரிவித்துள்ளார்.

''ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் இயற்றிய பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் என்கிற பாராயண நூலை படிக்க ஆசைப்படுகிறேன். அந்த நூல் எங்கே கிடைக்கும்? அதை எப்போது பாராயணம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்?'' என்று, 18.9.12 இதழில் கரூர் வாசகர் முருகேசன் கேட்டிருந்தார்.

'ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் வாழ்வும் வாக்கும் என்கிற நூலை பின்னத்தூர் வெ.சீனிவாசன் என்பவர் எழுதியுள்ளார். இந்த நூலை, 'எண்.10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை-17’ என்கிற முகவரியில் இயங்கி வரும் நர்மதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூலில், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் என்கிற பாடலும் இடம்பெற்றுள்ளது' என்று தஞ்சாவூர் வாசகி மீனாட்சி முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

'ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் பாடல்களை முருகப்பெருமான் கோயிலிலோ அல்லது வீட்டில் முருகப்பெருமான் திருவுருவப் படத்துக்கு முன்போ பாராயணம் செய்யலாம்...' என்று தெரிவித்துள்ள திருச்சி வாசகி சரோஜா சுதர்சன்ராம், பரிபூஜன

பஞ்சாமிர்த வண்ணம் பாடல்கள் அடங்கிய தொகுப்பையும் அனுப்பியுள்ளார். அந்தப் பாடல்கள் தொகுப்பு கொண்ட புத்தகம் வாசகர் கரூர் முருகேசனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை கிழக்குத் தாம்பரத்தைச் சேர்ந்த வாசகர் எம்.ஏ.ராஜசேகரன், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் நூலின் மூலத்தையும், பொழிப்புரையையும் நகல் எடுத்து அனுப்பியுள்ளார். இதுவும், சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

திருச்சி உறையூர் வாசகி சாத்தம்மை பெரியகருப்பனும் பாம்பன் சுவாமிகள் இயற்றிய பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல்களையும், அதற்கான எளிய தமிழ் விளக்கத்தையும் நகல் எடுத்து அனுப்பியுள்ளார். இதுவும், வாசகர் கரூர் முருகேசனுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

இதேபோல், 'எண்.37, போயஸ் சாலை, சென்னை-86 என்கிற முகவரியில் இயங்கிவரும் சாஸ்தா பதிப்பகமும் 'கௌமாரம் -  ஷண்மத ஸ்தாபனம்’ என்கிற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்திலும் பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன' என்று, பெங்களுரு வாசகர் அனந்தபத்மநாபன் தெரிவித்துள்ளார்.

''தமிழகத்தில் உள்ள மாரியம்மன் கோயில்களின் வரலாறு, வழிபாடு செய்யும் முறைகள் அடங்கிய புத்தகம் எனக்குத் தேவைப்படுகிறது. அது எங்கே கிடைக்கும்?'' என்று, 4.9.12 இதழில் அரிக்காரம்பாளையத்தைச் சேர்ந்த வாசகர் சு.முருகேசன் கேட்டிருந்தார்.

'ஸ்ரீமதி ரஞ்சனா பாலசுப்ரமணியன் என்பவர், 'ஸ்ரீமஹா மாரியம்மன்’ என்கிற தலைப்பில் மாரியம்மனின் வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகள் அடங்கிய புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். அவரது முகவரியான, 'ஏ-2, ஆனந்த் அபார்ட்மென்ட்ஸ், புதிய எண்.10, 4-வது டிரஸ்ட் குறுக்குத் தெரு, மந்தைவெளிப்பாக்கம், சென்னை-28’ என்கிற முகவரியில் இந்தப் புத்தகம் கிடைக்கும்'' என்று, செகந்திராபாத் வாசகி வெ.சியாமளா ரமணி தெரிவித்துள்ளார்.