நவராத்திரி ஸ்பெஷல்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

ஷ்டதிக் பாலகர்களை வழிபாடு செய்தால், குடியிருக்கும் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகள் நீங்கிவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தற்போது எங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு இருப்பதாக அறிகிறோம். அதனால் அஷ்டதிக் பாலகர்களை வழிபட்டு, வாஸ்து குறையை நிவர்த்தி செய்ய நினைக்கிறோம். ஆனால், அஷ்டதிக் பாலகர்களுக்கு எங்கே கோயில் இருக்கிறது என்பது தெரியவில்லை. உங்களுக்கு அந்த விவரம் தெரியும் என்றால், எனக்கு தகவல் தெரிவித்து உதவலாமே..!

- பி.ராஜாமணி, திருப்பூர்

##~##
சே
ங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் எழுதிய 'ஸ்ரீநாராயணீயம்’ - விளக்கவுரை புத்தகம் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது. தற்போது என்னிடம் அந்த நூலின் 4-வது பாகம் மட்டும் இருக்கிறது. 37 முதல் 100 வரையிலான ஸ்ரீநாராயணீயத்தின் அத்தியாயங்களைக் கொண்டது அது. இப்போது எனக்கு 1 முதல் 36 வரையிலான அத்தியாயங்களைக் கொண்ட ஸ்ரீநாராயணீயம் தேவைப்படுகிறது. என்னிடம் உள்ள நாராயணீயம் 1968-ஆம் ஆண்டு பிரசுரம் செய்யப்பட்டது. அந்த நூலில், ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் தலைப்புக் கொடுத்து, ஸ்லோகத்துக்கான முழு விளக்கமும் தரப்பட்டுள்ளது. அதோடு, ஸ்ரீகுருவாயூரப்பன் அருளால் யார் யாரின் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்ந்தன என்கிற விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது. அனந்தராம தீக்ஷிதர் விளக்கவுரை எழுதிய ஸ்ரீநாராயணீயத்தின் 1 முதல் 36 வரையிலான அத்தியாயங்கள் கொண்ட பகுதி எங்கே, யாரிடம் கிடைக்கும்? தகவல் தந்து உதவுவீர்களா?

- சாரு, மும்பை

உதவலாம் வாருங்கள்!

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மிகச் சிறந்த முருக அடியார். இவர் இயற்றிய மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா, நெஞ்சுவிடு தூது, திருப்போரூர் சந்நிதிமுறை, பஞ்சாதிகார விளக்கம், வைராக்ய சகதம், வைராக்கிய தீபம், கொலை மறுத்தல், ஒழிவில் ஒடுக்கம், திருவாசகத்துள் ஒரு பாடல் ஆகிய நூல்களைப் படிக்க ஆசைப்படுகிறேன். அந்த நூல்கள் எங்கே கிடைக்கும்? எந்தப் பதிப்பகத்தால் அவை வெளியிடப்பட்டுள்ளன? இந்த விவரங்களை எனக்குத் தெரிவித்தால் மிகவும் மகிழ்வேன்.

- மு.முருகேசன், திருச்சி-21

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 'ஞானபூமி’ என்ற பக்தி புத்தகத்தில் கவியரசர் கண்ணதாசன், ஆதித்ய ஹிருதயம் பாடலுக்கான விளக்கத்தைத் தமிழில் அழகாக மொழிபெயர்த்துக் கொடுத்து வந்தார். வீடு மாற்றத்தில் அந்தப் பாடல்கள் கொண்ட தொகுப்பு எங்கேயோ தவறிப்போய்விட்டது. இப்போது எனக்கு அந்தத் தொகுப்பு தேவைப்படுகிறது. உங்களில் யாரிடமேனும் இருந்தால், எனக்கு அதை நகல் எடுத்து அனுப்பி உதவுங்கள். கண்ணதாசன் எழுதிய ஆதித்ய ஹிருதயத்தின் தொகுப்பு புத்தகமாகக் கிடைக்கிறது என்றால், அது எங்கே கிடைக்கும் என்கிற தகவலையும் விவரம் தெரிந்த அன்பர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

- சு.இராமமூர்த்தி, அன்னஞ்சி

கேரள மாநிலம் கொடுங்கலூர் ஸ்ரீபகவதி அம்மனுக்குப் பாடப்பெறும் பரணி பாடல்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. அந்தப் பாடல்கள் கொண்ட தொகுப்பு உங்களிடம் இருக்கும் பட்சத்தில், அதை எனக்கு நகல் எடுத்து அனுப்பிவைத்தால் மிகவும் மகிழ்வேன். அதோடு, பாம்பே சகோதரிகள் தமிழில் பாடிய லலிதா சகஸ்ரநாமம் சி.டி-யும் எனக்குத் தேவைப்படுகிறது. அது எங்கே கிடைக்கும்? உங்களுக்குத் தெரிந்தால் தகவல் தாருங்களேன்!

- கே.முத்துச்செல்வி, தென்காசி

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

'எங்கள் வீட்டுக் குழந்தைக்குச் சமீபத்தில் கண்ணில் சிறு குறை ஏற்பட்டது. அதற்குப் பரிகாரம் செய்ய ஏற்ற கோயில் எது?' என்று 4.9.2012 இதழில், சென்னை வாசகர் சி.எஸ்.மூர்த்தி என்பவர் கேட்டிருந்தார்.

'தஞ்சை மாவட்டத்தில் திரிலோக்கி அருகே உள்ள சூரியமூலை சிவன் கோயில் மற்றும் காஞ்சிபுரம்- அரக்கோணம் சாலையில் கூரம் என்கிற ஊரில் உள்ள கூரத்தாழ்வார் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், கண் சம்பந்தப்பட்ட குறைகள் நீங்கும்'' என்று கூந்தலூர் வாசகர் வி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

'சமயபுரம் மாரியம்மனை வேண்டி கண்மலர் வாங்கிச் சார்த்துவதாக வேண்டிக்கொண்டாலும், கண் சம்பந்தப் பட்ட நோய்கள் தீரும்'' என்று தெரிவித்துள்ளார் திருச்சி திருவெறும்பூர் வாசகி எஸ்.விஜயா சீனிவாசன்.

திருச்சி வாசகர் ஜே.முத்துக்குமார் என்பவர், கண் நோய் தீர்க்கும் கோயில்கள் பற்றிய முழு விவரங்கள், கண் கோளாறு நீங்க சொல்லவேண்டிய ஸ்லோகங்கள், பார்வையைச் சீராக்கும் பகலவன் பதிகம் ஆகியவற்றை நகலெடுத்து அனுப்பி வைத்துள்ளார். இந்த நகல் பிரதிகள் வாசகர் சி.எஸ்.மூர்த்திக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

'சிவபாத சுந்தரம் என்பவர் எழுதிய 'சேக்கிழார் அடிச்சுவட்டில்...’ என்கிற புத்தகம் எங்கே கிடைக்கும்?'' என்று, 26.6.2012 இதழில் திருச்சி வாசகர் எஸ்.குமரகுருபரன் கேட்டிருந்தார்.

'சோ.சிவபாத சுந்தரம் என்பவர் எழுதிய 'சேக்கிழார் அடிச்சுவட்டில்...’ என்கிற இந்தப் புத்தகத்தை 'எண்.10, தீனதயாளு தெரு, சென்னை-17’ என்கிற முகவரியில் இயங்கி வரும் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1978-ல் வெளியானது' என்று, தென்காசி வாசகர் எஸ்.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

'ஸ்ரீராமர், சீதை, ஆஞ்சநேயர், லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னன் ஆகியோரது கவசப் பாடல்கள் அனந்த ராமாயணத்தில் உள்ளதாக அறிகிறேன். அந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்?'' என்று, 4.9.2012 இதழில் சென்னை வாசகி சுபத்ரா பாஸ்கர் கேட்டிருந்தார்.

'வாசகி சுபத்ரா பாஸ்கர் கேட்டுள்ள கவசப் பாடல்கள் அனந்த ராமாயணம் ஐந்தாம் பாகத்தில் மநோஹர காண்டம்- பூர்ண காண்டத்தில் உள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள கிரி டிரேடிங் ஏஜன்ஸிக்குச் சென்றால், அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொள்ளலாம்'' என்று, சென்னை அண்ணாநகர் வாசகி ஜெயந்தி தெரிவித்துள்ளார்.