Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!
##~##
வே

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ங்கடாசலபதி திருமலை வந்த வரலாறு, வகுளமாலிகை சரிதம், திருமலை திருப்பதி வரலாறு உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய தொடர் ஒன்றை 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புத்தகத்தில் படித்தேன். படிப்பதற்கு மிகவும் பக்திப் பரவசமாக இருக்கும். அந்தத் தொடரின் பெயரோ, புத்தகத்தின் பெயரோ நினைவில் இல்லை. இப்போது எனக்கு 50 வயது ஆகிறது. மீண்டும் அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் புத்தகம் இப்போது கிடைக்குமா, எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. என் வயதுள்ள வாசகர்களுக்கு அந்தப் புத்தகம் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. உங்களில் யாருக்கேனும் அது பற்றித் தெரிந்திருந்தால், எனக்குத் தகவல் சொல்லுங்களேன்.

- எல்.வி.கணேசன், சென்னை-53.

'பிள்ளைப் பேறில்லாத
பிராமண ஸ்திரீயருத்தி
தன்னொணா கணவன்மனம்
சான்றொழுகி பலநாளும்...’

- இந்தப் பாடலை என்னுடைய 7, 8 வயதில் படித்ததாக ஞாபகம். இப்போது இந்தப் பாடலைப் படிக்கவேண்டும் என்கிற ஆவல் எழுந்துள்ளது. ஆனால், இது எந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்கிற விவரம் தெரியவில்லை. இந்தப் பாடல் வரிகள் முழுமையாக இடம்பெற்றுள்ள புத்தகம் எது, எங்கே கிடைக்கும் என்கிற விவரம் தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லுங்கள். அந்தப் பாடல் கைவசம் இருந்து, நகல் எடுத்து அனுப்பினாலும் மகிழ்வேன்.

- தியாகி சி.பழனிராஜா, புதுச்சேரி-110

உதவலாம் வாருங்கள்!

தேவி பாகவதம் புத்தகத்தை எந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது? விவரம் தெரிந்த வாசகர்கள், பதிப்பக முகவரியை எனக்குத் தந்து உதவுவீர்களா?

- சி.ஆனந்திஜோதி, விருதுநகர்

'நல்ல மருந்து மிக நல்ல மருந்து... சுகம் நல்கும் வைத்தியநாத மருந்து...’ என்கிற, ஸ்ரீவைத்தியநாத ஸ்வாமி பற்றிய பாடல்கள் தொடர்பான விவரம் எனக்குத் தேவைப்படுகிறது. மேலே நான் குறிப்பிட்ட பாடல் வரிகள் மட்டும்தான் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. மீதமுள்ள வரிகள் மறந்துவிட்டன. அந்தப் பாடலை முழுமையாகத் தெரிந்தவர்கள் எனக்கு எழுதி அனுப்புங்களேன்..!

- எஸ்.இந்திரா, சென்னை-43

ன் தாயார் அந்தக் காலத்தில் பாணபத்திரர் சரித்திரத்தையும், குதம்பாய் என்ற பாடலையும் மிக அழகாகப் பாடுவார். இப்போது எனக்கு அந்தப் பாடல்கள் தேவைப்படுகின்றன. யாரேனும் அந்தப் பாடல்களை புத்தகமாக அல்லது சி.டி-யாக வெளியிட்டிருக்கிறார்களா? எனில், யார் வெளியிட்டு இருக்கிறார்கள், எந்த முகவரியில் அது கிடைக்கும் என்கிற விவரத்தை எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். மேற்படி பாடல்களை எழுதி அனுப்பினாலும் மகிழ்வேன்.

- கே.சௌந்தரவல்லி, மும்பை-14

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

'திசங்கரர் அருளிய ஸ்ரீசுப்ரமணிய புஜங்கத்தின் தமிழாக்கம் 33 பாடல்கள் கொண்டது. இந்தப் பாடலை எனக்கு அனுப்பி உதவ முடியுமா?’ என்று, 2.10.12 இதழில், சென்னை வாசகி லலிதா வெங்கடரமணன் என்பவர் கேட்டிருந்தார்.

ஸ்ரீசுப்ரமணியபுஜங்க பாடல்கள் அடங்கிய புத்தக வெளியீட்டை சென்னை கிழக்கு தாம்பரம் வாசகர் என்.முத்துக்குமாரும், நகல் பிரதிகளை பெங்களூரூ வாசகர் எஸ்.பானுசர்மா, பெரிய காஞ்சிபுரம் வாசகர் எஸ்.மணிமுடி, திண்டுக்கல் வாசகர் மு.நடராசன், சென்னை வாசக மற்றும் வாசகிகள் அன்னபூரணி சபரிராஜ், ஏ.ஞானாம்பிகை, என்.பிரேமா, வி.கிருஷ்ணமூர்த்தி, எம்.ஏ.ராஜசேகரன் ஆகியோரும் அனுப்பி இருக்கிறார்கள். சென்னை மேற்கு மாம்பலம் வாசகி எஸ்.பாக்கியலக்ஷ்மி சுந்தரம் அனைத்துப் பாடல்களையும் கைப்பட எழுதி அனுப்பி இருக்கிறார். இவை அனைத்தும், வாசகி லலிதா வெங்கடரமணனுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

'திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் அவதரித்து, புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் என்கிற ஊரில் ஸித்தியான மகான் ஸ்ரீசுந்தர சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். சுவாமிகளின் பூவுலக வாழ்க்கை தொடர்பான நிகழ்வுகள் உங்களுக்குத் தெரிந்திருந்தால், எனக்கு எழுதி அனுப்புங்கள்...’ என்று, 2.10.12 இதழில் அரிமளம் வாசகர் ஆர்.சுப்ரமணியன் கேட்டிருந்தார்.

'மகான் ஸ்ரீசுந்தர சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகங்கள் ராஜபாளையத்தில் உள்ள லிங்கம்மாள் சாஸ்திர பிரதிஷ்டா என்கிற ஆன்மிக நூலகத்தில் உள்ளன. அங்கு சென்றால் சுந்தர சுவாமிகளின் முழுமையான வரலாற்றை நகல் அல்லது குறிப்பெடுத்துக்கொள்ளலாம்...’ என்று கூறியுள்ள கரிவலம்வந்தநல்லூர் வாசகர் பா.ஸ்ரீராமகிருஷ்ணன், மகான் ஸ்ரீசுந்தர சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகத் தொகுப்பை நகல் எடுத்தும் அனுப்பியுள்ளார். இந்த நகல் பிரதிகள் வாசகர் ஆர்.சுப்ரமணியனுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

'எங்கள் குலதெய்வம் சீர்காழி அருகில் மங்கைமடம் எனும் ஊரில் உள்ள நரசிம்மர். அந்தக் கோயில் தொடர்பான விவரங்களை வாசகர்கள் யாரேனும் தரமுடியுமா?’ என்று, 2.10.12 இதழில் பாப்பானேரி வாசகர் ஆர்.வெங்கடேஷ் கேட்டிருந்தார்.

'வெங்கடேஷ் கேட்டுள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயில், மங்கைமடம் எனும் இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் திருவாலி என்ற ஊரில் அமைந்துள்ளது. சீர்காழிக்கு அருகில் உள்ள பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்களில் ஐந்தாவது திருத்தலம் இது. சீர்காழியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள திருவெண்காடு சென்று, அங்கிருந்து 2 கி.மீ. தொலைவு பயணித்தால் மங்கைமடம் வந்துவிடலாம். அங்கிருந்து நரசிம்மர் கோயில் அமைந்துள்ள திருவாலிக்கு பஸ் அல்லது ஆட்டோவில் செல்ல வேண்டும். பிரதோஷம் இங்கு விசேஷமான நாள். அன்றைய தினத்தில் ஸ்ரீநரசிம்மருக்கு அபிஷேகம் செய்த எண்ணெய்யைப் பிரசாதமாகத் தருவார்கள். அதைத் தலையில் தேய்த்து நீராடினால், மனோபலம் கூடும், மனோவியாதி அகலும் என்பது நம்பிக்கை!’ என்று, சென்னை வாசகர் பி.ஆர்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.