Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

Published:Updated:
உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

சில மாதங்களுக்கு முன்பு, ஒரு பத்திரிகையில் ஸ்ரீஆஞ்சநேயர் உருவப்படம் ஒன்று பார்த்தேன். அந்த உருவச்சிலையைச் சுற்றி மூலிகைக் கொடி படர்ந்திருந்தது. அந்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் பல நோய்களைக் குணப்படுத்தும் என்று கூறியிருந்ததையும் அந்தக் கட்டுரையில் படித்தேன். அதன்பின், எனக்குச் சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்படும்போதெல்லாம் அந்த ஆஞ்சநேயரை மனதில் நினைத்துப் பிரார்த்தனை செய்வேன். உடனே அந்தப் பிரச்னை தீர்ந்துவிடும். அந்த அளவுக்கு ஆஞ்சநேயரின் உருவம் என் மனதில் பதிந்துவிட்டது. இப்போது அந்த ஆஞ்சநேயரை, அவர் வீற்றிருக்கும் கோயிலுக்குச் சென்று வழிபட ஆசைப்படுகிறேன். அந்தக் கோயில் எங்கே இருக்கிறது, எப்படிச் செல்ல வேண்டும் என்கிற விவரம் தெரியவில்லை. உங்களுக்கு அந்த ஆஞ்சநேயர் பற்றிய விவரம் தெரியும் என்றால், தகவல் தெரிவித்து உதவலாமே..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ஏ.பிருந்தா, கோலார் தங்கவயல், கர்நாடகா

'விருட்ச சாஸ்திரம்’ என்கிற நூலைப் படிக்க ஆசைப்படுகிறேன். பல புத்தகக் கடைகளில் தேடியும் அந்த நூல் கிடைக்கவில்லை. உங்களில் யாருக்கேனும் அந்த நூல் எங்கே கிடைக்கும் என்கிற விவரம் தெரிந்தால், அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன். அதன் நகல் பிரதி கிடைத்தாலும் மகிழ்வேன்.

- கி.கோவிந்தராஜன், முத்தியால்பேட்டை

திருப்பதி வேங்கடாசலபதி பற்றிய முழுமையான வரலாறு, தெளிவான உரைநடை கொண்ட கருடபுராணம் மற்றும் கந்தபுராணம் ஆகிய நூல்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. இவற்றை எங்கே வாங்கலாம்? உங்களிடம் இருந்தாலும் அனுப்பிவைத்து உதவ வேண்டுகிறேன்.

- இரா.ஜெயபிரகாஷ் நாராயணன், அயோத்தியாப்பட்டனம்

##~##
செ
ஞ்சி அருகே நாககோட்டை என்னும் ஊரில், நாககன்னி அம்மன் கோயில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அந்தக் கோயிலில் நாக பைரவர், நாக ஆஞ்சநேயர் இருப்பதாகவும் அறிகிறேன். இந்தக் கோயில் பற்றி நான் எவ்வளவோ விசாரித்துவிட்டேன். ஆனால், கோயில் அங்கே இருப்பது தொடர்பான உறுதியான தகவல் மட்டும் கிடைக்கவில்லை. உங்களுக்கு அந்தக் கோயில் பற்றி தெரியுமானால், அந்தக் கோயில் எங்கே உள்ளது, எப்படிச் செல்ல வேண்டும் ஆகிய விவரங்களைத் தெரிவிப்பீர்களா?

- எம்.பிரபாகர், பவானி

சிருங்கேரி ஸ்ரீஸ்ரீ ஸ்வாமிகள் அருளிய 'விருஷ்டி ஷட்கம்’ எனும் 6 ஸ்லோகங்களின் தமிழாக்கம் என்னிடம் உள்ளது. இது, 'செல்வத் திறவுகோல்’ என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. தற்போது என்னிடம் அந்தப் புத்தகம் இல்லை.  விருஷ்டி ஷட்கம் புத்தகமாகக் கிடைக்குமா என்றும் பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டேன்,  கிடைக்கவில்லை. இந்தப் புத்தகமும், மனம் உருகிப் படித்தால் மழை பொழிய வைக்கும் சக்தி வாய்ந்த 'மழை மாலை’ புத்தகமும் எனக்குத் தேவைப்படுகிறது. அவை எங்கே கிடைக்கும் என்கிற விவரம் தெரிந்த அன்பர்கள் எனக்கு உதவ வேண்டுகிறேன்.

- வி.பார்வதி, மதுரை

ங்கள் குலதெய்வம் ஒத்தைவாழி அம்மன் என்று சொல்கிறார்கள். ஆனால், அந்த அம்மன் வீற்றிருக்கும் கோயில் எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை. விருத்தாசலம், சேலம் பகுதியில் அந்த அம்மன் கோயில் இருக்கலாம் என்கிறார்கள். அதுவும், ஆற்றோரமாக அமைந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். உங்களுக்கு அந்த அம்மன் கோயில் பற்றித் தெரியும் என்றால், எனக்குத் தகவல் தெரிவித்து உதவுங்களேன்!

- பி.மகேஸ்வரி, புதுச்சேரி-9

உதவலாம் வாருங்கள்!

'திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் எழுதிய நூல்களைப் படிக்க ஆசைப்படுகிறேன். அந்த நூல்கள் எங்கே கிடைக்கும்?'' என்று, 16.10.12 இதழில் திருச்சி வாசகர் மு.முருகேசன் கேட்டிருந்தார்.

'திருப்புகழ் பதிப்பகம், 52, முத்தையா முதலி இரண்டாவது தெரு, ராயப்பேட்டை, சென்னை-14 என்ற முகவரியிலும், கே.மோகன், அபிராமி பிரிண்டிங் ஒர்க்ஸ், 1, மேயர் சிவராஜ் தெரு (ராயப்பேட்டை போலீஸ் நிலையம் அருகில்), ராயப்பேட்டை, சென்னை-14 என்ற முகவரியிலும் திருப்போரூ சிதம்பர சுவாமிகள் எழுதிய நூல்களை வாங்கிக்கொள்ளலாம்'' என்று, சென்னை கிழக்குத் தாம்பரம் வாசகர் எம்.ஏ.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

'மேற்படி புத்தகங்களை சென்னை அருகே உள்ள திருப்போரூர் கந்தஸ்வாமி கோயிலை ஒட்டியுள்ள கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்'' என்று, உடையார்பாளையம் வாசகர் ம.மணி என்பவர் தெரிவித்துள்ளார்.

உதவலாம் வாருங்கள்!

'பிரதோஷ காலத்தில் ஸ்ரீநந்திகேஸ்வர பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள ஆசைப்படுகிறேன். அந்த வழிபாட்டை எப்படிச் செய்வது என்கிற விளக்கம் கொண்ட புத்தகம் எங்கே கிடைக்கும்?'' என்று, 2.10.12 இதழில் கோவைபுதூர் வாசகர் கே.கே.ஜானகிராமன் என்பவர் கேட்டிருந்தார்.

'பிரதோஷ வழிபாடு மற்றும் ஸ்ரீநந்திகேஸ்வர பெருமான் வழிபாடு பற்றிய புத்தகத்தை, எண்.50, கச்சேரி சாலை, புதிய பேருந்து நிலையம், கும்பகோணம் என்கிற முகவரியில் இயங்கி வரும் ஸ்ரீபாலாஜி பதிப்பகம் வெளியிட்டுள்ளது...' என்று, திருப்பத்தூர் வாசகர் கே.லட்சுமிபதிராஜு தெரிவித்துள்ளார்.

சென்னை சேலையூர் வாசகர் பாரதி ராமதாஸ், பிரதோஷ வழிபாடு பற்றிய வெளியீடு ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார். அது, வாசகர் கே.கே.ஜானகிராமனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 'சென்னை மயிலாப்பூரில் உள்ள கிரி டிரேடிங் நிறுவனத்தில் பிரதோஷ பூஜை பற்றிய தனிப் புத்தகம் விற்பனைக்குக் கிடைக்கிறது' என்றும் வாசகர் பாரதி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

'தண்ணீரினுள் மூழ்கியவண்ணம் அருள்புரியும் நீலநிற பள்ளிகொண்ட பெருமாளை தரிசிக்க ஆவலாக இருக்கிறேன். உங்களுக்கு அது பற்றித் தெரியுமா?' என்று, 18.9.12 இதழில், சென்னை வாசகி லோகிதா மதன்குமார் கேட்டிருந்தார்.

'திருவள்ளுர் அருகே உள்ளது காக்களுர். இங்குள்ள பூங்கா நகரில் சிவ-விஷ்ணு கோயிலில் ஸ்ரீஜலநாராயணர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது' என்று, சென்னை வாசகர் ராஜசேகரன் என்பவர் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism