Published:Updated:

புதுமை போட்டி 7

புதுமை போட்டி 7

புதுமை போட்டி 7

புதுமை போட்டி 7

Published:Updated:
புதுமை போட்டி 7
##~##

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட மகாவிஷ்ணு எடுத்த  ..................... அவதாரங்களில் நான்காவது,  .............................. அவதாரம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த அவதாரத்தில் இறைவனுக்கு மனிதனின் உடலும் ....................................... முகமும் அமைந்திருந்தன. மற்ற அவதாரங்களைக் காட்டிலும் இந்த அவதாரத்துக்கு  ஒரு சிறப்பு உண்டு. ஆமாம்... ஒரு நொடியில் தோன்றி அசுர வதம் நிகழ்த்தி, பக்தனின் பெருமையை நிலைநாட்டிய அற்புத அவதாரம் இது!

சகோதரன் இரண்யாட்சகன் ஸ்ரீவராக மூர்த்தியால் வதைக்கப்பட்டான் என்பதை அறிந்தது முதல், ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் மிகுந்த கோபம் கொண்டிருந்தான் அசுரனான

..................................... . தவமிருந்து தான் பெற்ற வரங்களால் தனக்கு மரணமே சம்பவிக்காது என்ற இறுமாப்பும் அவனது அட்டூழியங்கள் அதிகரிக்க காரணமானது!

விஷ்ணு வழிபாட்டை வேரோடு அழிக்க சங்கல்பித்துக் கொண்டிருந்த இந்த அசுரனுக்கு மகனாகப் பிறந்தவன் ........................................

கருவிலேயே திருவான இந்தத் தெய்வக் குழந்தை எந்நேரமும் மகாவிஷ்ணுவின் நினைவாகவே இருந்தான்.

'................................................’ என்பதே அவன் சதாசர்வகாலமும் உச்சரிக்கும் ஒரே மந்திரமாக இருந்தது.

தெய்வக்குழந்தையின் செயல் அரக்கத் தந்தைக்குப் பிடிக்கவில்லை. ஆணவத்தில் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த அவன், தானே சிறந்தவன் என்றும், தன்னையே போற்றும்படியும் மகனுக்கு உத்தரவிட்டான்.

ஆனால், அந்தத் தெய்வக்குழந்தை அதைச் செய்ய மறுத்தது. அதுமட்டுமின்றி, தான் வணங்கும் இறைவன் ............................... இருப்பார், ..................................  இருப்பார் என்று மார்தட்டியது.

கோபம் தலைக்கு ஏறியது அரக்கனுக்கு! பக்கத்தில் இருந்த தூணை எட்டி உதைத்தான். அதனுள் இருந்து உக்கிரத்தோடு வெளிப்பட்டார் அவதார மூர்த்தி.

புதுமை போட்டி 7

பூமி மற்றும் ஆகாயத்தில் தனது மரணம் நிகழக்கூடாது. அதே போல உள்ளேயோ வெளியிலேயோ, பகலிலோ இரவிலோ, மனிதன், தேவர், அசுரர், மிருகம், பறவை போன்ற யாராலுமோ தனக்கு மரணம் நிகழக்கூடாது என்று வரம் பெற்று இருந்தான் அரக்கன். எந்த ஆயுதமும் தனது மரணத்துக்குக் காரணமாக அமையக்கூடாது என்பதும் அவன் பெற்ற வரங்களில் ஒன்று.

அதனால், தூணில் இருந்து வெளிப்பட்ட அவதார மூர்த்தி, பகலும் இரவும் அற்ற ............................ வேளையில், உள்ளேயும் வெளியேயும் அற்ற  ........................... யில், தனது மடியில் கிடத்தி, மனிதர், விலங்கு இரண்டும் அற்ற ................................. வடிவில், தனது நகங்களையே ஆயுதமாகக் கொண்டு அசுரனை அழித்தார்.

இறுதியில் உக்கிரம் தணிந்த அவர், லட்சுமியைத் தனது மடியில் அமர்த்தி,

..................................... ஆகக்  காட்சி தந்தார்.

போட்டிக்கான விதிமுறைகள்:

 கதையில் ஆங்காங்கே விடுபட்டிருக்கும் இடங்களை சரியான வார்த்தைகளால் நிரப்புங்கள். அத்துடன் சிறப்பு கேள்விக்கான பதிலையும் அதற்கான இடத்தில், ரத்தினச் சுருக்கமாக எழுதுங்கள்.

பின்பு இந்தப் பக்கங்களை அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்தி செய்து அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

 சரியான விடைகளோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமாக பதில் அனுப்பும் 10 வாசகர்களுக்கு தலா 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

உங்கள் விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி 4.12.12.

விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்பவேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இ-மெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!
அனுப்ப வேண்டிய முகவரி:
சக்தி விகடன், புதுமைப் போட்டி-7
757, அண்ணா சாலை,
சென்னை-600 002.

சிறப்புக் கேள்வி:

இந்த இதழில் வெளியாகியுள்ள 'வெற்றியின் பெயர்... ஆரோக்கியம்!’ கட்டுரையிலிருந்து, நீங்கள் அறிந்து கொண்டது என்ன என்பதை, பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்துக்குள் கச்சிதமாக 'நறுக்’கென்று எழுதுங்களேன்!

புதுமை போட்டி 7
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism