Published:Updated:

உதவலாம்..வாருங்கள் !

உதவலாம்..வாருங்கள் !

உதவலாம்..வாருங்கள் !

உதவலாம்..வாருங்கள் !

Published:Updated:
உதவலாம்..வாருங்கள் !
##~##

ன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்னுடைய தோழி ஒருத்தி 'சேவல் விடு தூது’, 'மயில் விடு தூது’ ஆகிய நூல்கள் பற்றி என்னிடம் கேட்டாள். எனக்கு, தோழி கேட்ட நூல்கள் பற்றிய தகவல் தெரியாததால் சக்தி விகடன் வாசகர்கள் உதவியை நாடுகிறேன். உங்களுக்கு அந்த நூல்கள் பற்றித் தெரியும் என்றால், அந்த விவரங்களோடு, அவை எங்கே கிடைக்கும் என்று சொன்னாலும் மகிழ்வேன்.

- பாமா காமராஜ், மதுரை-7

உதவலாம்..வாருங்கள் !

25 ஆண்டுகளுக்கு முன்பு என் தோழி ஒருத்தி, அமிர்த கலசத்துடன் கூடிய அமிர்தவல்லி தாயார் விக்கிரகமும், அதன் ஸ்லோகம், அஷ்டோத்திரம், பாமாலை அடங்கிய புத்தகம் ஒன்றும் பரிசாகத் தந்தாள். என்னிடம் இதுவரை பாதுகாப்பாக இருந்த அந்தப் புத்தகம் தற்போது தொலைந்துபோய்விட்டது. சரி, வேறு புத்தகம் வாங்கலாம் என்று பார்த்தால்... தோழி எனக்குப் பரிசாகத் தந்த புத்தகம் எங்குமே கிடைக்கவில்லை. அந்தப் புத்தகத்தில் ஸ்லோகத்தின் ஆரம்பப் பகுதி, 'மஹாலக்ஷ்மி வருவாயம்மா... உன் மலரடி சரணம் புகுந்தேனம்மா... எந்தன் வீட்டில் மனமகிழ்ந்து இருப்பாயம்மா...’ என்று இருக்கும். அதோடு, 'பாற்கடலில் பிறந்தவளாம் ஸ்ரீமகாலக்ஷ்மி’ என்று, 108 அஷ்டோத்திரமும் அதில் இடம்பெற்றிருக்கும். உங்களுக்கு இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்கிற விவரம் தெரியும் என்றால், எனக்கு அதை தெரியப்படுத்த வேண்டுகிறேன். உங்களிடம் அந்தப் புத்தகம் இருந்தாலும், அதை அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

- ராதா ரமேஷ், சென்னை-82

மீபத்தில் ஒருநாள் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தபோது நவதுர்கை அம்மன் கோயிலைக் காட்டினார்கள். மிகவும் அழகாக இருந்தது. திடீரென்று கரன்ட் போய்விட்டதால் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க முடியவில்லை. அந்தக் கோயில் எங்கே இருக்கிறது என்கிற தகவலும் தெரியவில்லை. உங்களுக்கு நவதுர்கை ஆலயம் எந்த ஊரில் இருக்கிறது என்கிற விவரம் தெரியும் என்றால், அதுபற்றிய விவரத்தோடு, அந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியையும் எனக்கு தெரிவியுங்கள்.

இதோடு, ஸ்ரீகாமாட்சி அம்மனின் 1008 போற்றிகள் கொண்ட புத்தகம் எங்கே கிடைக்கும் என்று சொன்னாலும் அல்லது அதை அனுப்பி வைத்தாலும் மகிழ்வேன்.

- டி.ராஜேஸ்வரி, பொள்ளாச்சி

உதவலாம்..வாருங்கள் !

பி.கே.எஸ்.ஐயங்கார் எழுதிய 'யோக தீபம்’ எனும் புத்தகம் தமிழில் வெளியானதை அறிவேன். தற்போது என்னிடம் அந்தப் புத்தகத்தின் சுருக்கம் மட்டுமே உள்ளது. விரிவான தகவல்கள் கொண்ட புத்தகம் இல்லை. சென்னையில் பல புத்தகக் கடைகளில் விசாரித்துவிட்டேன். புத்தகம் கிடைக்கவில்லை. உங்களுக்கு அந்தப் புத்தகம் கிடைக்கும் இடம் தெரிந்தால், எனக்கு அந்த விவரத்தைச் சொல்லுங்களேன்!

- எஸ்.வாசகன், சென்னை-17

ரு புத்தகத்தில் 'திருக்கோளுர் பெண் பிள்ளை ரகசியம்’ என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்றை சமீபத்தில் படித்தேன். ராமானுஜரிடம், திருக்கோளுர் பெண் 81 புராண- இதிகாச கதைகளைக் கூறி, 'நான் அப்படி இல்லை’ என கூறுவதாக அதில் படித்தேன். அதில், சில கதைகளே... அதுவும் சுருக்கமாக இருந்தன. எனக்கு, அந்த 81 புராணக் கதைகளையும் விரிவாகப் படிக்க ஆசை. அந்த விரிவான புத்தகம் எங்கே கிடைக்கும் என்று தெரிந்தவர்கள், எனக்கு அதை தெரியப்படுத்துங்களேன்..!

- செஞ்சுலக்ஷ்மி, திருவள்ளுர்

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய எல்லா பக்திப் பாடல்களுமே எனக்கு பிடிக்கும். அவர் பாடிய பாடல்களில், குறிப்பாக 2 பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்துவிட்டன. அந்தப் பாடல்களைக் கேட்டால்... எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் உள்ளத்தால் உருகி ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்கள். 'குழலாக பிறப்பேனோ கண்ணா... உந்தன் விரல் தீண்ட கனி வாயில் இசை பாடுவேன்...’ என்கிற பாடலும், 'நான் என்ன கேட்பது, நீ என்ன தருவது... நாராயணா என்னும் உன் நாமம் சொன்ன பின்னே...’ என்கிற பாடலும்தான் நான் மேலே சொன்னவை. இந்தப் பாடல்கள் எந்த ஆன்மிக ஆல்பத்தில் உள்ளன என்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரியும் என்றால், அந்தத் தகவலோடு, சென்னையில் அந்த ஆல்பம் கிடைக்கும் இடத்தையும் தெரிவித்து உதவுங்களேன்..!

- சந்திரா நாராயணன், சென்னை-91  

உதவலாம்..வாருங்கள் !

'திருப்பதி வேங்கடாசலபதி தொடர்பான முழுமையான வரலாற்று நூல் மற்றும் தெளிவான உரைநடை கொண்ட கருடபுராணம், கந்தபுராணம் எங்கே கிடைக்கும்?'' என்று, 13.11.12 இதழில் அயோத்தியாபட்டணம் வாசகர் இரா.ஜெயபிரகாஷ் நாராயணன் கேட்டிருந்தார்.

'மேற்படி வாசகர் கேட்ட 3 நூல்களுமே, இ.ஜி.சி. டிரேடர்ஸ், எண்.56, இரண்டாவது குறுக்குத்தெரு, ஸ்ரீநிவாசா நகர், கொளத்தூர், சென்னை- 600 099 என்கிற முகவரியில் கிடைக்கும்'' என்று, சென்னை வாசகி இராஜேஸ்வரி மதி தெரிவித்துள்ளார்.

உதவலாம்..வாருங்கள் !

'கார்த்திகேயன் என்பவர், கந்தபுராணத்துக்கு தெளிவான உரைநடை எழுதி இருக்கிறார். அந்த புத்தகத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள கிரி டிரேடிங் புத்தகக் கடையில் வாங்கலாம். புத்தகத்தின் விலை ரூ.65' என்று, மதுரை வாசகி மீனாட்சி பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.

'திருப்பதி வேங்கடாசலபதியின் முழுமையான வரலாறு கொண்ட புத்தகங்கள் திருமலா- திருப்பதி தேவஸ்தான வெளியீடுகளாகவும் வெளிவந்துள்ளன. சென்னை மயிலாப்பூரில் இயங்கிவரும் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பதிப்புகளாகவும் அவை வெளியிடப்பட்டுள்ளன. தவிர, ஆன்மிக புத்தகங்கள் விற்கப்படும் கடைகளிலும் அவற்றை வாங்கிக்கொள்ளலாம்'' என்று, சென்னை வாசகர் கிருஷ்ண.ராஜகோபால் கூறியுள்ளார்.

'விருட்ச சாஸ்திரம் என்கிற நூலைப் படிக்க ஆசைப்படுகிறேன். அது எங்கே கிடைக்கும்?'' என்று, 13.11.12 இதழில் முத்தியால்பேட்டை வாசகர் கி.கோவிந்தராஜன் கேட்டிருந்தார்.

பி.எஸ்.ஆச்சார்யா எழுதி, நர்மதா பதிப்பகம் வெளியிட்டுள்ள 'அதிர்ஷ்டம் அளிக்கும் விருட்ச சாஸ்திரம்’ என்கிற புத்தகத்தை  சென்னை வாசகர் என்.பி.பிரகாஷ் அனுப்பிவைத்துள்ளார். இந்தப் புத்தகம் வாசகர் கி.கோவிந்தராஜனுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism