Published:Updated:

செவ்வாய் பிரதோஷ பைரவ வழிபாடு: 27 நட்சத்திரக்காரர்களுமான பைரவர்கள் யார், யார்? சிறப்புகள் என்னென்ன?

நவம்பர் 2 வரவிருக்கும் செவ்வாய் பிரதோஷத்தை முன்னிட்டு 27 நட்சத்திரக்காரர்களுமான பைரவர்கள் குறித்த விவரங்களைக் காண்போம்!

சகல லோகங்களும் அஞ்சி நடுங்குமாறு ஆலகால விஷம் தோன்றியது. அதை எடுக்க நெருங்கிய நந்திதேவர் மயக்கத்தால் ஆட்கொள்ளப்பட்டார். அவரை ஆசுவாசப்படுத்தி பாலும் சந்தனமும் கொண்டு அபிஷேகம் செய்து புல்லும் வெற்றிலையும் கொடுத்து விஷத்தின் வெம்மையை நீக்கினார்கள் தேவர்கள். இதுவே பிரதோஷ வேளையில் நந்தியைக் கொண்டாடும் விழாவாக மாறியதற்கு காரணம் என்கிறார்கள் பெரியோர்கள். விஷ வேதனை நீங்கிய நந்தியின் மீது ஆலகாலம் உண்ட நீலகண்டன் திருநடனம் ஆடினார் என்பது நீங்கள் அறிந்ததே.
ஞான பைரவர்
ஞான பைரவர்

பிரதோஷ நேரத்தை 'ரஜனீ முகம்’ என்பார்கள். 'ரஜனீ’ என்றால் இரவு என்று வடமொழியில் பொருள். 'ரஜனீ முகம்’ என்பது இரவின் தொடக்கமான மாலை வேளையைக் குறிக்கும். இப்படி ஒவ்வொரு நாளின் பிரதோஷ வேளையும் சிவவடிவங்களின் ஒவ்வொரு மூர்த்தத்துக்கும் உரியதாக வழிபடப்பட்டன. இதில் செவ்வாய்க் கிழமை பிரதோஷம் பைரவருக்கு உகந்தது என்பார்கள். நாளை (2-11-2021) வரவிருக்கும் செவ்வாய் பிரதோஷத்தை முன்னிட்டு 27 நட்சத்திரக்காரர்களுமான பைரவர்கள் குறித்த விவரங்களைக் காண்போம்!

செவ்வாய்க் கிழமை பிரதோஷம்
செவ்வாய்க் கிழமை பிரதோஷம்

அசுவினி: ஞான பைரவர் - இவர் கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கிறார். இவரை வழிபட ஞானமும் முக்தியும் கிட்டும்.

மகா பைரவர்
மகா பைரவர்

பரணி: மகா பைரவர் - இவர் திருப்பத்தூர் அருகே பெரிச்சி கோயிலில் நவபாஷாண பைரவராக அருள்கிறார். இவரை வணங்க யோகங்கள் கூடும்.

மகா பைரவர்
மகா பைரவர்

கார்த்திகை: ஸ்ரீசொர்ண காலபைரவர் - இவர் திருவண்ணாமலையில் அருள்கிறார். செல்வவளம் அருளும் இவர் கபாலத்துக்குப் பதிலாக அட்சய பாத்திரம் ஏந்துபவர்.

ஸ்ரீகால பைரவர்
ஸ்ரீகால பைரவர்

ரோகிணி: ஸ்ரீகால பைரவர் - இவர் பிரமசிரக் கண்டீஸ்வரர் என்ற பெயரில் திருக்கண்டியூரில் அருள்கிறார். இவரை வணங்க யமபயம் நீங்கும்.

ஸ்ரீவிஜய பைரவர்
ஸ்ரீவிஜய பைரவர்

மிருகசீரிடம்: ஸ்ரீசேத்திரபால பைரவர் - இவர் குத்தாலம் அருகில் சேத்திரபாலபுரத்தில் அருள்கிறார். இவரை வழிபட நோய்கள் தீரும்.

ஸ்ரீசேத்திரபால பைரவர்
ஸ்ரீசேத்திரபால பைரவர்

திருவாதிரை: ஸ்ரீவடுக பைரவர் - பாண்டிச்சேரி-விழுப்புரம் பாதையில் உள்ள ஆண்டாள் கோயிலில் அருள்கிறார். நீண்ட ஆயுள் அருளும் பைரவர் இவர்.

விஜய பைரவர்
விஜய பைரவர்

புனர்பூசம்: ஸ்ரீவிஜய பைரவர் - பழனி சாதுசுவாமிகள் மடாலயத்தில் அருள்கிறார். வெற்றியை அருளும் பைரவர் இவர்.

பைரவர்
பைரவர்

பூசம்: ஸ்ரீ ஆவின் பைரவர் - ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சி நாதர் கோயிலில் இருப்பவர். இவரை வணங்க செல்வவளம் சேரும்.

ஸ்ரீபாதாள பைரவர்
ஸ்ரீபாதாள பைரவர்

ஆயில்யம்: ஸ்ரீபாதாள பைரவர் - காளஹஸ்தியில் அருளும் இவர் தோஷங்களை நீக்குபவர்.

ஸ்ரீகோட்டை பைரவர்
ஸ்ரீகோட்டை பைரவர்

மகம்: ஸ்ரீநர்த்தன பைரவர் - வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் அருளும் இவர் கலைகளில் தேர்ச்சி அளிப்பவர்.

ஸ்ரீகோட்டை பைரவர்
ஸ்ரீகோட்டை பைரவர்

பூரம்: ஸ்ரீகோட்டை பைரவர் - பட்டீஸ்வரம் தேனுபுரீசுவரர் கோயிலில் அருளும் இவர் புகழ் மிக்க வாழ்வு அளிப்பவர்.

ஸ்ரீசக்கர பைரவர்
ஸ்ரீசக்கர பைரவர்

உத்திரம்: ஸ்ரீஜடாமண்டல பைரவர் - சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயிலில் அருளும் இவர் எதிரிகளின் தொல்லைகளை நீக்குபவர்.

சட்டநாதர் பைரவர்
சட்டநாதர் பைரவர்

அஸ்தம்: ஸ்ரீயோக பைரவர் - திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் அருளும் இவர் ஆரோக்கியம் அருளுபவர்.

ஸ்ரீஜடாமண்டல பைரவர்
ஸ்ரீஜடாமண்டல பைரவர்

சித்திரை: ஸ்ரீசக்கர பைரவர் - தர்மபுரி கோட்டை சிவன் கோயிலில் அருளும் இவர் கடன் பிரச்னைகளைத் தீர்ப்பவர்.

ஸ்ரீசம்ஹாரமூர்த்தி பைரவர்
ஸ்ரீசம்ஹாரமூர்த்தி பைரவர்

சுவாதி: ஸ்ரீ ஜடாமுனி பைரவர் - புதுக்கோட்டை திருவரங்குளம் ஆலயத்தில் அருள்பவர். மனநிம்மதியை அருள்பவர்.

ஸ்ரீகதாயுத பைரவர்
ஸ்ரீகதாயுத பைரவர்

விசாகம்: ஸ்ரீகோட்டை பைரவர் - திருமயம் கோட்டை கோயிலில் அருளும் இவர் வழித்துணையாக வருபவர்.

சொர்ண பைரவர்
சொர்ண பைரவர்

அனுஷம்: ஸ்ரீசொர்ண பைரவர் - புதுச்சேரி - கடலூர் வழியில் தனி ஆலயத்தில் அருள்கிறார். நவநிதிகளும் அளிப்பவர்.

ஸ்ரீகால பைரவர்
ஸ்ரீகால பைரவர்

கேட்டை: ஸ்ரீகதாயுத பைரவர் - சூரக்குடி சொக்கநாதர் கோயிலில் அருள்பவர். வீரதீரம் அளிப்பவர்.

ஸ்ரீவடுகநாத பைரவர்
ஸ்ரீவடுகநாத பைரவர்

மூலம்: ஸ்ரீசட்டநாதர் பைரவர் - சீரகாழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அருள்பவர். இவரை வணங்க அட்டமாசித்திகளும் கிட்டும்.

ஸ்ரீசொர்ண பைரவர்
ஸ்ரீசொர்ண பைரவர்

பூராடம்: ஸ்ரீகால பைரவர் - அவிநாசி அவிநாசியப்பர் கோயிலில் அருள்பவர். இவரை வணங்க காரிய ஸித்தி கிட்டும்.

ஸ்ரீமார்த்தாண்ட பைரவர்
ஸ்ரீமார்த்தாண்ட பைரவர்

உத்திராடம்: ஸ்ரீவடுகநாத பைரவர் - கரூர்- கல்யாணபசுபதீஸ்வரர் கோயிலில் அருள்பவர். மங்கல வாழ்வு அளிப்பவர்.

ஸ்ரீவடுகநாத பைரவர்
ஸ்ரீவடுகநாத பைரவர்

திருவோணம்: ஸ்ரீமார்த்தாண்ட பைரவர் - திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டி வளரொளி நாதர் கோயிலில் அருளும் இவர் வழக்குகளைத் தீர்ப்பவர்.

அசிதாங்க பைரவர்
அசிதாங்க பைரவர்

அவிட்டம்: அசிதாங்க பைரவர் - சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அஷ்ட பைரவர் சந்நிதியில் அருளும் இவர் பேராற்றல் வழங்குபவர்.

அசிதாங்க பைரவர்
அசிதாங்க பைரவர்

சதயம்: ஸ்ரீசர்ப்ப பைரவர் - சங்கரன் கோவிலில் அருளும் சர்ப்பம் ஏந்திய பைரவர். இவரால் சாபங்கள், சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.

கோட்டை பைரவர்
கோட்டை பைரவர்

பூரட்டாதி: கோட்டை பைரவர் - ஈரோடு கொக்கரையான் பேட்டை பிரம்ம லிங்கேஸ்வரர் கோயிலில் அருள்பவர். இவரால் தீமைகள் விலகும்.

பைரவர்
பைரவர்

உத்திரட்டாதி: ஸ்ரீவெங்கல ஓசை பைரவர் - கும்ப கோணம் அருகே சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயிலில் அருள்பவர். இவரால் விதி மாறி நலம் கிட்டும்.

ஸ்ரீவெங்கல ஓசை பைரவர்
ஸ்ரீவெங்கல ஓசை பைரவர்

ரேவதி: ஸ்ரீசம்ஹாரமூர்த்தி பைரவர் - திருச்சி தாத்தையங்கார் பேட்டை காசி விசுவநாதர் கோயிலில் அருள்பவர். இவரை வணங்க வளமிக்க வாழ்வு மலரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு