ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

தாயுமான சுவாமிகளின் வரலாறு மற்றும் அவர் எழுதிய பாடல்களை, சித்தாந்தசரபம் பூவை கல்யாணசுந்தர முதலியார் விரிவுரையுடன் வெளியிட்டு இருக்கிறார் என அறிகிறேன். அந்தப் புத்தகம் எனக்குத் தேவைப்படுகிறது. ஆனால், எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள், தகவல் தாருங்களேன்!

- பா.ஸ்ரீராமகிருஷ்ணன், கரிவலம்வந்தநல்லூர்

எங்கள் குடும்பத்தில் நான்கு தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்தவர் காசிவாசி சுவாமி சிவானந்தா. இவரது இயற்பெயர் ப.சிவானந்தா. பிரம்மசாரியாக இருந்து, கிடைத்த அரசு வேலையையும் உதறிவிட்டுத் துறவறம் மேற்கொண்ட இவர், திருவாங்கூர் அரசிடம் சாசனங்கள் வாங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சலில், காசியில் இருந்து கொண்டுவந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து கோயிலும் எழுப்பி இருக்கிறார். 1928-ஆம் ஆண்டு, கடைசி முறையாகக் குளச்சல் வந்திருக்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு, சித்தூரில் அவர் ஜீவசமாதி ஆனதாக அந்த ஊர் மக்கள் கடிதம் எழுதியதாகவும், அப்போது எங்கள் குடும்பம் மிக ஏழ்மையாக இருந்த காரணத்தால் அவ்வளவு தொலைவு செல்லமுடியாமல் விட்டுவிட்டனர் என்றும் பின்னர் தெரியவந்தது. இப்போது, காசிவாசி சிவானந்தா சுவாமிகள் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம். அவரது ஜீவசமாதியைத் தரிசிக்க நினைக்கிறோம். ஆனால், அவர் ஜீவசமாதி அடைந்ததாகக் கூறப்படும் சித்தூர், எந்தச் சித்தூர் என்பது தெரியவில்லை. உங்களில் யாருக்கேனும் அவரைப் பற்றியும், அவர் ஜீவசமாதி ஆன இடம் பற்றியும் தெரியும் என்றால், அந்தத் தகவலை எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். நீங்கள் தெரிவிக்கும் தகவல், எங்களது நான்கு தலைமுறையின் நன்றிக்கு உரியதாக இருக்கும்.

- வி.கோபிபிரகாஷ், குளச்சல்

சில மாதங்களுக்கு முன்பு டி.வி. ஒன்றில், குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கடற்கரை ஊரில், நடுக்கடலுக்குள் இருக்கும் கோயிலுக்கு பக்தர்கள் சென்று தரிசித்து வரும் வகையில், கடல் உள்வாங்கி வழிவிடுவதாக ஒளிபரப்பினார்கள் என்று நண்பர்கள் மூலம் அறிந்தேன். குஜராத் மாநிலத்தில் அந்தக் கோயில் எங்கே இருக்கிறது? உங்கள் தகவலை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

- டி.எஸ்.சொக்கலிங்கம், பட்டுக்கோட்டை

'கபாலி! கருணை நிலவும் பொழி வதனம்...’ என்ற பாடலை, சிறு வயதில் எனது சகோதரி அழகாகப் பாடுவாள். இப்போது எனக்கு அந்தப் பாடல் தேவைப்படுகிறது. ஆனால், பாடல் வரிகள் மறந்துவிட்டன. உங்களுக்கு முழுமையாகத் தெரியும் என்றால், எனக்கு எழுதி அனுப்புங்களேன்!

- வி.சந்திரா, திருக்கோவிலூர்

எங்கள் தந்தை, சிதம்பரத்தை பூர்வீகமாகக் கொண்ட அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர். பாரத்வாஜ கோத்திரம். எங்கள் தாயார் மராட்டியர். என் தந்தை வழியில் குல தெய்வம் 'எல்லம்மா’ என்பது மட்டும்தான் தெரியும். தற்போது, அந்தக் குல தெய்வத்தின் இருப்பிடம் அறிந்து, வழிபாடு செய்ய ஆர்வமாக இருக்கிறேன் நான். ஆனால், எல்லம்மா கோயில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரியும் என்றால், அந்தக் கோயில் முகவரியை தொலைபேசி எண்ணுடன் தெரிவிக்க வேண்டுகிறேன். முடிந்தால், அந்த அம்மனின் புகைப்படத்தையும் அனுப்பி வைக்கவும். இதேபோல், சிதம்பரத்தை அடுத்து, நகர எல்லையில் 'எல்லைக் காளியம்மன்’ என்று ஒரு கோயில் இருப்பதாக அறிகிறேன். அந்த அம்மன்தான் எல்லம்மா என்று அழைக்கப்படுகிறாரா? இந்த சந்தேகத்துக்கும் தக்க பதில் கிடைக்க வேண்டுகிறேன்.

- வஸந்த்குமார், டொம்பிவிலி, மகாராஷ்ட்ரா

திருநெல்வேலியில் கோயில்கொண்டுள்ள ஸ்ரீநெல்லையப்பர் பற்றிச் சிறுசிறு தகவல்களாகத்தான் இதுவரை படித்திருக்கிறேன். ஸ்ரீநெல்லையப்பர்மீது கொண்டுள்ள தீவிர பக்தியால், அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அவரைப் பற்றி வெளிவந்த புத்தகங்கள் அதற்கு உதவும் என்று நினைக்கிறேன். ஸ்ரீநெல்லையப்பர் பற்றி எந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகத்தில் முழுமையான தகவல்கள் உள்ளன? உங்களுக்குத் தெரிந்தால், எனக்கு அந்தத் தகவலைத் தந்து உதவுங்களேன்!

- எஸ்.எஸ்.வாசன், வந்தவாசி

'குழந்தையானந்த சுவாமிகளின் வரலாற்றைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். அவர் தொடர்பான விவரங்கள், புத்தகங்கள் தேவை' என்று, 25.12.12 இதழில் மதுரை வாசகர் பா.சௌந்திரபாண்டி கேட்டிருந்தார்.

'மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல; புதிரானதும்கூட! அத்தகைய மகான்களுள், நான்கு இடங்களில் ஜீவசமாதி ஆனதாகக் குறிப்பிடப்படுபவர் மகான் குழந்தையானந்த சுவாமிகள். கிட்டத்தட்ட 250 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படும் இந்த மகானின் வாழ்க்கை வரலாறு பல்வேறு அற்புதங்களை உள்ளடக்கியது...' என்று தெரிவித்துள்ள சென்னை வாசகி இராஜேஸ்வரி மதி, குழந்தையானந்த சுவாமிகளின் வரலாறு அடங்கிய நகல் பிரதிகளை அனுப்பிவைத்துள்ளார். இது, சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

'குழந்தையானந்த சுவாமிகளின் ஜீவசமாதி மதுரை அரசரடி(காளவாசல்)யில் உள்ளது. இங்கே அந்த சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகங்களை விற்பனை செய்கிறார்கள். இங்கே வந்தால், தேவையான விவரங்கள் அடங்கிய புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்'' என்று, மதுரை வாசகர் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

'எனக்கு நடராஜர் பத்து, துர்கா புஜங்கம், தேவி மானஸ பூஜா ஆகிய புத்தகங்கள் தேவை' என்று, 25.12.12 இதழில் செகந்திராபாத் வாசகி வெ.சியாமளா ரமணி கேட்டிருந்தார்.

மேற்படி வாசகி கேட்ட புத்தகங்களுள் 'நடராஜர் பத்து’ பாடல்களின் விளக்கம் கொண்ட நகல் பிரதிகளை திண்டுக்கல் வாசகர் மு.நடராஜன் அனுப்பியுள்ளார். இந்த நகல் பிரதிகள் சம்பந்தப்பட்ட வாசகிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

' 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ என்கிற புத்தகம் எனக்குத் தேவைப்படுகிறது. அது எங்கே கிடைக்கும்?' என்று, 11.12.12 இதழில் திருவள்ளூர் வாசகி செஞ்சுலக்ஷ்மி கேட்டிருந்தார்.

'திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் பற்றிய தெளிவான விளக்கப் புத்தகத்தை டாக்டர் நாவலர் கு.சடகோபன் என்பவர் எழுதியுள்ளார். அல்லயன்ஸ் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. புத்தகத்தின் விலை ரூ.195. எண்.244, ராமகிருஷ்ண மடம் சாலை, சென்னை-4 என்கிற முகவரியில் இயங்கிவரும் மேற்படி பதிப்பகத்தை அணுகினால், புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்'' என்று பெருந்துறை வாசகர்

கே.ஆர்.ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.