Published:Updated:

உதவலாம். வாருங்கள்!

உதவலாம். வாருங்கள்!

உதவலாம். வாருங்கள்!

உதவலாம். வாருங்கள்!

Published:Updated:

ன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை

உதவலாம். வாருங்கள்!

'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் திருவடி தரிசனம் தந்து, அவர் திருப்புகழ் பாடிப் போற்றிய திருத்தலம் ஞானமலை. வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில், மங்கலம் என்ற ஊருக்கு அருகில் கோவிந்தச்சேரி என்ற கிராமத்தில் ஞானமலை அமைந்துள்ளது. இந்த மலைக் கோயிலில் தினமும் முருகப்பெருமானுக்கு ஒருகால பூஜை செய்ய விருப்பமுள்ள அர்ச்சகர் அல்லது அடியார், இதனை இறைப் பணியாகச் செய்ய முன்வரலாம். அவருக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

- வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன், சென்னை-100

அத்யாத்ம ராமாயணத்தில் ஸ்ரீராமஹ்ருதயம் 32-ஆவது ஸ்லோகம், 'ராமம் வித்திம் பரம் ப்ரும்ம’ என்று ஆரம்பிக்கும். இந்த ஸ்லோகத்தை தமிழில் பாராயணம் செய்ய ஆசைப்படுகிறேன். இப்போது எனக்கு மேற்படி ஸ்லோகத்தில் 32 முதல் 50 வரையிலானவை தேவைப்படுகின்றன. இந்த ஸ்லோகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவா? ஆம் என்றால், எங்கே கிடைக்கும் என்கிற விவரத்தை வாசகர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன். வாசகர்கள் யாரேனும் அதை நகல் எடுத்து அனுப்பி வைத்தாலும் மகிழ்வேன்.

- கே.ஆர்.ஆனந்தலக்ஷ்மி, சென்னை-5

உதவலாம். வாருங்கள்!

பாம்பன் சுவாமிகள் பாடல்களுக்கு பி.ராமன், சபாரத்தினம் ஆகியோர் உரை எழுதியுள்ளனர் என்று அறிகிறேன். இந்தப் புத்தகங்கள் எங்கே கிடைக்கும்? இதேபோல், 'செல்வம் அளிக்கும் செவ்வேள் முருகன்’ என்ற புத்தகமும் எனக்குத் தேவைப்படுகிறது. இது எங்கே கிடைக்கும் என்கிற விவரத்தையும் வாசகர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

- இராஜேந்திரன், மதுரை

எங்களின் பூர்வீகம் காஞ்சிபுரம் என்று அறிகிறேன். எங்களது தாத்தா- பாட்டி வாழ்ந்து வந்தது, திருக்கழுக்குன்றத்தில். நாங்கள் தொண்டை மண்டல துளவ வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர்கள். கோத்ரம்- பிண்டேலே மகரிஷி. இப்போது நாங்கள் குலதெய்வ வழிபாடு செய்ய ஆசைப்படுகிறோம். ஆனால், எங்கள் குலதெய்வம் எது என்பது தெரியவில்லை. யாருக்கேனும் தெரிந்தால், எங்களுக்கு அதுபற்றித் தெரிவிக்க வேண்டுகிறோம்.

- சி.ஆர்.சுந்தரம், சென்னை-91

நாங்கள் யாதவர் குலத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் குலதெய்வம் அங்காளீஸ்வரி என்றும், அந்த அம்மனுக்கான கோயில் திண்டுக்கல்லில் உள்ளது என்றும் கூறுகிறார்கள். ஆனால், திண்டுக்கல்லில் அந்தக் கோயில் எங்கே இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இப்போது, எங்கள் குடும்பத்தில் சில பிரச்னைகள் இருப்பதால், குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. எங்களின் குலதெய்வக் கோயில் பற்றித் தெரிந்தவர்கள் தயவுசெய்து எனக்குத் தகவல் தாருங்களேன்!

- காஞ்சனா கோவிந்தசாமி, கோவை-35

நான் ஓர் இசைக்கல்லூரி மாணவன். எனது ஆராய்ச்சிப் படிப்புக்கு 'பெரியபுராணத்தில் இசை’ என்கிற தலைப்பைத் தேர்வு செய்துள்ளேன். என் ஆராய்ச்சிக்குத் தேவையான புத்தகங்கள் உங்களில் யாரிடமாவது இருந்தால், அதை எனக்கு அனுப்பிவைத்து உதவ வேண்டுகிறேன்.

- ரா.சண்முகநாதன், மதுரை-1

அருட்கவி சாதுராம் சுவாமிகளின் புகைப்படம் மற்றும் அவர் இயற்றிய அருட்பாடல்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. உங்களிடம் அவை இருப்பின், எனக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.

- இராம.பார்த்திபன், வயலூர்

உதவிக்கரம் நீட்டியவர்கள்

'குஜராத் மாநிலத்தில் உள்ள ஓர் ஊரில், நடுக்கடலுக்குள் இருக்கும் கோயிலுக்கு பக்தர்கள் சென்று தரிசித்து வரும் வகையில், கடல் உள்வாங்கி வழிவிடுவதாக டி.வி. ஒன்றில் ஒளிபரப்பினார்கள். அந்த இடம் எது?’ என்று, 22.1.13 இதழில் பட்டுக்கோட்டை வாசகர் டி.எஸ்.சொக்கலிங்கம் கேட்டிருந்தார்.

'குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரைத் திருத்தலம் கோலியாக். இங்கேதான் நடுக்கடலுக்குள் புகழ்பெற்ற நிஷ்களங்கேஷ்வர் (சிவன்) கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கடற்கரையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள சிவனாரை வழிபட, கடல் உள்வாங்கி வழிவிடும் அதிசயம் அற்புதமானது. பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக இந்த ஆலயத்தில் 5 சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. ஆலயத்தின் முன்புள்ள கல்லால் ஆன கொடிமரம் சுமார் 25 அடி உயரம் கொண்டது. கடலின் நீர்மட்டம் உயர்ந்தபிறகு, கோயிலைப் பார்க்கமுடியாது. கொடிமரத்தை மூழ்கடிக்கும் அளவுக்குத் தண்ணீர் நிரம்பியிருக்கும். கடலின் நீர்மட்டம் குறைந்த பிறகு, பக்தர்கள் கோயிலுக்கு செல்ல ஆரம்பிக்கிறார்கள். சென்னை-அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அகமதாபாத் சென்று, அங்கிருந்து பாவ்நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து, பாவ் நகர் செல்ல வேண்டும். பாவ்நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவு பயணித்தால், கோலியாக் கடற்கரைக் கோயிலை அடையலாம்’ என்று, சென்னை வாசகி இராஜேஸ்வரி மதி தெரிவித்துள்ளார்.

'கோலியாக்கில் கடல் உள்வாங்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கக்கூடியது. தினமும் காலை 6 மணிக்கு கடல் உள்வாங்க ஆரம்பிக்கும். படிப்படியாக கடல் உள்வாங்கிக்கொண்டே போகும். 7 மணிக்கு சுமார் 1 கி.மீ. தொலைவில் கடலுக்குள் உள்ள கோயில் நம் பார்வைக்குத் தெரியும். பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட லிங்கத்தை வழிபட்ட பிறகு, மதியம் 12 மணிக்குள் கரைக்குத் திரும்பிவிட வேண்டும். அந்த நேரத்தில் கடல் நீர் மறுபடியும் பெருகத் துவங்கும். கடல் உள்வாங்குவதும், மீண்டும் கடல்நீர் பெருகி கரையைத் தொடுவதும் நம்பமுடியாத அதிசயம்தான்! இந்த அற்புதக் காட்சியை நான் நேரில் கண்டது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது’ என்று தெரிவித்துள்ளார், புதுச்சேரி வாசகர் ஜே.தீனதயாளன்.

'தாயுமான சுவாமிகளின் விரிவான வரலாறு கொண்ட புத்தகம் எனக்குத் தேவைப்படுகிறது. எங்கே கிடைக்கும்?’ என்று, 22.1.13 இதழில் கரிவலம்வந்தநல்லூர் வாசகர் பா.ஸ்ரீராமகிருஷ்ணன் கேட்டிருந்தார்.

'எண் 4, டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை- 600 018 என்கிற முகவரியில் இயங்கிவரும் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், தாயுமான சுவாமிகளின் வரலாறு என்னும் நூலை வெளியிட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ள சென்னை வாசகி இராஜேஸ்வரி மதி, சென்னை கன்னிமரா நூலகத்திலும் மேற்படி நூலை வாங்கிப் படித்துப் பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.