Published:Updated:

`72 விசைப்படகுகள்.. 22 நாட்டுப் படகுகள்.. 3,000 பக்தர்கள்!' -களைகட்டும் கச்சத்தீவு திருவிழா

கச்சத் தீவு அந்தோணியார் கோயில்
கச்சத் தீவு அந்தோணியார் கோயில் ( உ.பாண்டி )

இன்றைய திருவிழாவில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 3,000 பக்தர்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணம், மன்னார், நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10,000 பக்தர்கள் பங்கேற்பார்கள் என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மீனவர்களின் பாதுகாவலராக போற்றப்படும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரத்திலிருந்து 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படகுகளில் கச்சத் தீவுக்குப் புறப்பட்டனர்.

கச்சத் தீவு அந்தோணியார் ஆலயம்
கச்சத் தீவு அந்தோணியார் ஆலயம்
உ.பாண்டி

கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 72 விசைப்படகுகளில் 2,532 பக்தர்களும் 22 நாட்டுப் படகுகளில் 371 பக்தர்களும் புறப்பட்டுச் சென்றனர்.

பக்தர்கள் செல்லும் படகுகள் கச்சத் தீவை அடைந்தவுடன் மாலை 6 மணிக்கு கச்சத்தீவு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து திருச்சிலுவை ஆராதனை, சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடர்ந்து திருப்பலி, புனித அந்தோணியாரின் தேர்ப்பவனியும் நடைபெறும். நாளை காலை சிறப்பு வழிபாடு, திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது.

டி.ஐ.ஜி, எஸ்.பி ஆய்வு
டி.ஐ.ஜி, எஸ்.பி ஆய்வு
உ.பாண்டி

ராமேஸ்வரத்திலிருந்து கச்சத் தீவு திருவிழாவுக்குச் செல்லும் பக்தர்களை மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் வழியனுப்பி வைத்தார். முன்னதாக கச்சத்தீவு செல்லும் பக்தர்களிடம் மேற்கொள்ளப்பட வேண்டிய சோதனைகள் மற்றும் பக்தர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள பொருள்களின் விவரம், மேலும் பயணத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி ரூபேஷ் குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் காவல் துறையினருக்கு எடுத்துரைத்தனர்.

கச்சத் தீவு செல்ல உள்ள பக்தர்கள்
கச்சத் தீவு செல்ல உள்ள பக்தர்கள்
உ.பாண்டி

இந்த நிலையில், திருவிழாவில் கலந்துகொள்ள கச்சத்தீவு வரும் பக்தர்களுக்கான குடிநீர், பாதுகாப்பு ஏற்பாடுகள், தற்காலிக கூடாரங்கள், இறங்குதுறை, மின்சார வசதிகள் உள்ளிட்டவற்றை இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். மேலும், பக்தர்களின் பாதுகாப்புக்காக தற்பாதுகாப்பு கவசம் மற்றும் மீட்புக் குழுக்கள், மருத்துவக் குழுக்கள் ஆகியனவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

படகில் செல்லும் பக்தர்கள்
படகில் செல்லும் பக்தர்கள்
உ.பாண்டி

இன்றைய திருவிழாவில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 3,000 பக்தர்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணம், மன்னார், நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10,000 பக்தர்கள் பங்கேற்பார்கள் என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு