தொடர்கள்
Published:Updated:

அதிசய தேன் அபிஷேகம்!

அதிசய தேன் அபிஷேகம்!

அதிசய தேன் அபிஷேகம்!

ள்ளக்குறிச்சியில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் அமைந்துள்ள திருத்தலம் ரிஷிவந்தியம். இங்கே உள்ள ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில் மூலவரின் லிங்கத்தில் அம்மனின் திருஉருவம் அமைந்துள்ளது. இதை, சாதாரணமாக நாம் காணமுடியாது. இந்த லிங்கத்துக்கு தினமும் அர்த்தசாம பூஜையின்போது தேனால் அபிஷேகம் செய்வர். அப்போது, லிங்கத்தின் பாணப் பகுதியில் அம்மனின் உருவம் மெள்ள வெளிப்படும். அபிஷேகம் முடிந்ததும் அம்மனின் உருவம் மறைந்துவிடும்.

ரிஷிவந்தியம் வரும் பக்தர்கள், அவசியம் தரிசிக்க வேண்டிய அற்புதம் இது.

- பி.கோவிந்தசாமி, ஊத்தங்கரை

##~##