Published:Updated:

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

உதவலாம்... வாருங்கள்!

Published:Updated:
##~##

கவத்கீதைக்கான தெளிவுரையை லோகமான்ய பாலகங்காதர திலகர் 'கீதா ரகசியம்’ என்ற பெயரில், ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதை ஸ்ரீதரன் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அந்தப் புத்தகம் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது என்று அறிகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. தற்போது எனக்கு அந்தப் புத்தகம் தேவைப்படுகிறது. ஆனால், எந்தப் பதிப்பகத்தார் அதை வெளியிட்டார்கள் என்பது ஞாபகம் இல்லை. தற்போது அந்தப் புத்தகம் விற்பனையில் இருக்கிறதா? இருக்கிறது என்றால், எந்தப் பதிப்பகத்தார் அதை வெளியிட்டு இருக்கிறார்கள்? தெரிந்தோர் விவரம் தர வேண்டுகிறேன். அதேபோல், முருகப்பெருமானின் ஆறு திருமுகங்களுக்கும் தனித்தனியாக சஹஸ்ரநாமம் அடங்கிய புத்தகம் விற்பனையில் இருப்பதாகவும் அறிகிறேன். அந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்று சொன்னாலும் மகிழ்வேன்.

 - வெ.கிருஷ்ணமூர்த்தி, சென்னை-44

உதவலாம்... வாருங்கள்!

திருச்சுழியில் கோயில்கொண்டுள்ள திருமேனிநாதரின் மேல் ஆராவமுதாச்சார்யர் பாடிய 'கொம்பில்லாத அந்தாதி’ நூலைப் படிக்க ஆசைப்படுகிறேன். ஆனால், அந்த நூல் எங்கே கிடைக்கும் என்பது தெரியவில்லை. உங்களில் யாருக்கேனும் அந்த நூல் கிடைக்கும் இடம் தெரிந்தால், அதுபற்றித் தகவல் தாருங்களேன்.

- ந.பாண்டுரங்கன், மதுரை-10

ங்களது மூதாதையர் வாழ்ந்த ஊர் மதுரைக்கு அருகில் உள்ள பெரிய கண்ணூர் அல்லது சிறிய கண்ணூர் என்பது மட்டுமே எங்களுக்குத் தெரிகிறது. அந்த ஊரில் சிவன் கோயில் ஒன்று உள்ளதாகவும், அந்தக் கோயில் ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர் ஆலயம் என்னும் பெயரில் அழைக்கப்படுவதாகவும் வீட்டுப் பெரியவர்கள் சொன்னார்கள். இப்போது நாங்கள் அந்தக் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய ஆசைப்படுகிறோம். அந்தக் கோயிலின் முழு முகவரியோடு, தொலைபேசி எண்ணும் கிடைத்தால் மிகவும் மகிழ்வோம். மேற்கண்ட விவரம் தெரிந்தவர்கள் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

- காமாக்ஷி சங்கரன், சென்னை-42

ஜ்ஜயினி மாகாளி அம்மனும், உச்சிமாகாளி அம்மனும் ஒருவரா? இந்த அம்மனின் வரலாற்றுத் தகவல்களைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். உங்களில் யாரிடமேனும் இந்த அம்மன் பற்றிய தகவல்கள் இருப்பின், தயவுசெய்து அதை நகல் எடுத்து எனக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.

- ஈ.மு.சுந்தரமூர்த்தி, குறண்டி

ங்களது பூர்வீகம் கோவணந்தல் என்று சொல்வார்கள். அந்த ஊருக்கு எங்கள் குடும்பத்தாரின் போக்குவரத்து இல்லாததால் குலதெய்வம் எது என்று அறியமுடியாமல் போய்விட்டது. அதேநேரம், அருள்வாக்கு கேட்ட இடத்தில், எங்களின் குலதெய்வம் பொம்மியம்மா என்று பதில் வந்தது. ஆனால், அந்த தெய்வம் எந்த ஊரில் கோயில் கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. உங்களுக்கு அந்த அம்மன் ஆலயம் அமைந்துள்ள ஊர் மற்றும் அந்த கோயில் தொடர்பான தகவல்கள் தெரியுமெனில், எனக்கும் தந்து உதவ வேண்டுகிறேன்.

- பி.ஆர்.ராஜலக்ஷ்மி, சென்னை-43

உதவலாம்... வாருங்கள்!

ப்போது 80 வயது ஆனாலும், இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவன் நான். என்னுடைய இளம் வயதில், அதாவது சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒலிபெருக்கி வாயிலாக நான் கேட்டு ரசித்த இரண்டு பாடல்களை மறுபடியும் கேட்க ஆசைப்படுகிறேன். முதல் பாடல்,

'கிழவிமேல் காதல் கொள்ளடா...
அவ்வைக் கிழவிமேல் காதல் கொள்ளடா...’ என்று ஆரம்பிக்கும்.

இரண்டாவது பாடல்,

'பாட்டுக்கொரு புலவன் பாரதியடா- அவன்
பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா’ என்று ஆரம்பிக்கும்.

இந்தப் பாடல்கள் இப்போது எந்த ஆன்மிக ஆல்பத்திலாவது இருக்கிறது என்றால், அதுபற்றிய விவரத்தை எனக்கு யாரேனும் தெரிவிப்பீர்களா?

- எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி, நவல்பூர்

உதவலாம்... வாருங்கள்!

'அருட்கவி சாதுராம் சுவாமிகளின் புகைப்படம் மற்றும் அவர் இயற்றிய அருட்பாடல்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. எங்கே கிடைக்கும்?’ என்று, 19.2.13 இதழில் வயலூர் வாசகர் இராம.பார்த்திபன் கேட்டிருந்தார்.

'எண்.33, நடேசன் தெரு, தி.நகர், சென்னை-17 என்கிற முகவரியில், சாதுராம் சுவாமிகளின் குருவான இரெட்டியப்பட்டி சுவாமிகளின் பெயரில் இயங்கிவரும்  வாசகச் சாலைக்குச் சென்றால், சாதுராம் சுவாமிகளின் புகைப்படம் மற்றும் அவர் இயற்றிய பாடல்களைப் பெற்றுக்கொள்ளலாம்’ என்று சென்னை வாசகர் எஸ்.மனோஹரன் தெரிவித்துள்ளார்.

உதவலாம்... வாருங்கள்!

'எங்கள் குலதெய்வம் அங்காளீஸ்வரி என்றும், அந்த அம்மன் கோயில் திண்டுக்கல்லில் உள்ளது என்றும் கூறுகிறார்கள். அந்தக் கோயிலின் அமைவிடம் பற்றிய விவரம் தேவை’ என்று, 19.2.13 இதழில் கோவை வாசகி காஞ்சனா கோவிந்தசாமி கேட்டிருந்தார்.

'திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் முன்வாசலுக்குத் தென்புறத்தில் தீயணைப்பு நிலையம் அமைந்துள்ளது. இதற்கு நேர்கிழக்காக 100 மீட்டர் தொலைவு சென்றால் ஸ்ரீஅங்காளீஸ்வரி அம்மன் கோயிலை அடையலாம்’ என்று, கிருஷ்ணாபுரம் வாசகர் பி.முருகானந்த காந்தி தெரிவித்துள்ளார்.

'அத்யாத்ம ராமாயணத்தில் ஸ்ரீராம ஹ்ருதயத்தில் இடம்பெற்ற ஸ்லோகங்களுக்கான தமிழ் விளக்கம் தேவை’ என்று, 19.2.13 இதழில்  சென்னை வாசகி கே.ஆர்.ஆனந்தலக்ஷ்மி கேட்டிருந்தார்.

மேற்படி வாசகி கேட்ட ஸ்லோகங்களுக்கான தமிழ் விளக்கங்களை மானாமதுரை வாசகி எம்.சரஸ்வதி நகல் எடுத்து அனுப்பியுள்ளார். இது, சம்பந்தப்பட்ட வாசகிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

'ஞானமலையில் கோயில்கொண்டுள்ள முருகப்பெருமானுக்கு ஒருகால பூஜை செய்ய விருப்பமுள்ள அர்ச்சகர் அல்லது அடியார் தேவை’ என்று, 19.2.13 இதழில் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் கேட்டிருந்தார்.

ஞானமலை முருகப்பெருமான் கோயிலில் ஒருகால பூஜை செய்ய விரும்புவதாகக் கடிதம் எழுதியுள்ள மார்த்தாண்டம் வாசகர் இரா.திருச்செந்தில், 'எனக்குச் சிறு வயது முதலே இறைப்பணி செய்யவேண்டும் என்கிற ஆசை உண்டு. முருகப்பெருமான் என் இஷ்ட தெய்வம். அவருக்குத் தொண்டு செய்ய வாய்ப்புக் கிடைத்தால் என் பிறவிப்பயனை அடைவேன்...’ என்று தெரிவித்துள்ளார். வாசகர் இரா.திருச்செந்திலின் கடிதம் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக உங்களுக்குள் நெடுநாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு மற்ற வாசகர்கள் (துல்லியமாக தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்’ இதழில் பிரசுரமாகும். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.