தொடர்கள்
Published:Updated:

பாவம் போக்கும் காயத்ரீ யக்ஞம்

பாவம் போக்கும் காயத்ரீ யக்ஞம்

##~##

சுக்ல யஜுர் வேதத்தை இந்த உலகுக்குத் தந்த மகரிஷி யாக்ஞவல்கியர் குறித்தும், சென்னை- பழைய பல்லாவரத்தில்  அமைந்துள்ள, ஆலயத்துடன் கூடிய யாக்ஞவல்கிய சபா மண்டபம் குறித்தும் 22.1.13 மற்றும் 5.2.13 தேதியிட்ட  சக்தி விகடன் இதழ்களில் விரிவாகப் படித்து மகிழ்ந்தோம். அந்த வரிசையில் கூடுதலாக இன்னொரு தகவல்...

சென்னை ஜமீன் பல்லாவரத்தில், பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீயாக்ஞவல்கிய ஸபா மண்டபத்தில், ஸ்ரீஸ்ருதி மாதா ஸ்ரீ தேவி காயத்ரி யக்ஞ சமிதி சார்பில், உலக நன்மைக்காக மாதம்தோறும் காயத்ரீ யக்ஞம் நடைபெற்று வருகிறது. இதற்காக சிறப்பு ஹோமகுண்டம் வளர்க்கப்படும். ஹோமத்தில் பங்கேற்பவர்கள், காயத்ரீ மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே வெள்ளை எள்ளை நெய்யுடன் கலந்து ஹோம குண்டத்தில் இடுவது விசேஷம். இதனால், அனைத்துப் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். யாகத்தின் நிறைவில், பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

பாவம் போக்கும் காயத்ரீ யக்ஞம்

ஒவ்வொரு மாதமும் 3-வது ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தப்படும் இந்த காயத்ரீ யக்ஞம், 2005 ஜனவரி முதல் இங்கே தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- கிருஷ்ணன், சென்னை-70