புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீஹயக்ரீவ ஸம்பதா ஸ்தோத்திரம்

ஸ்ரீஹயக்ரீவ ஸம்பதா ஸ்தோத்திரம்

##~##

பரிமுகனாம் ஸ்ரீஹயக்ரீவரை துதிக்கும் அற்புதமான ஸ்தோத்திரங்களில் ஒன்று ஸ்ரீஹயக்ரீவ ஸம்பதா ஸ்தோத்திரம். இதை அனுதினமும் படித்து ஸ்ரீஹயக்ரீவரை வழிபட கல்வி-ஞானம் ஸித்திக்கும்.

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி வாதினம்
நரம் முஞ்சந்தி பாபானி தரித்ரமிவ யோஷித: (1)
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோவதேத்
தஸ்ய நிஸ்ஸரதேவாணீ ஜன்ஹுகன்யாப்ரவாஹவத் (2)
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ த்வனி:
விசோபதே ஸ வைகுண்டகவாடோத்காடனக்ஷம: (3)
ச்லோகத்ரயமிதம் புண்யம் ஹயக்ரீவ பதாங்கிதம்
வாதிராஜயதி ப்ரோக்தம் படதாம் ஸம்பதாம் பதம்

ஸ்ரீஹயக்ரீவ ஸம்பதா ஸ்தோத்திரம்

கருத்து:  ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்று சொல்லும் அன்பர்களை, பாவங்களானது... தரிதிரம் வாய்ந்த மனிதனை பணத்தில் ஆசைகொண்ட ஸ்திரீகள் விடுவதுபோல் விட்டுவிடும். (1)

ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்று சொல்லும் அன்பர்களுக்கு, கங்கை பிரவாகம் போன்று வாக்குவன்மை ஏற்படும் (2)

ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்ற திருநாமம் வைகுண்டத்தின் கதவைத் திறக்கும் தகுதி உள்ளதாக திகழ்கிறது.

ஸ்ரீவாதிராஜயதியால் அருளப்பட்டதும் ஹயக்ரீவ எனும் திருநாமத்துடனும் சேர்ந்த இந்தப் புண்ணியமான ஸ்லோகங்களைப் படிப்பவர்கள், சகல வளங்களையும் பெறுவார்கள்.

- திருமலை, முசிறி