புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

சகலகலாவல்லிமாலை! - ஸ்ரீமூக பஞ்ச சதி

சகலகலாவல்லிமாலை! - ஸ்ரீமூக பஞ்ச சதி

##~##

கல்விச் செல்வம் கைகூட...  சகலகலாவல்லிமாலை!

பண்ணும் பரதமும் கல்வியும்
            தீஞ்சொற் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்த
           நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும்
          கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்
          சகல கலா வல்லியே

கருத்து: சகலகலாவல்லியே! சரஸ்வதிதேவியே! வேதத்தால் போற்றப்படுபவளே! பஞ்ச பூதங் களிலும் பரவி இருப்பவள் நீ! அன்பர்களின் கண்ணிலும் கருத்திலும் நிறைந்து இருப்பவளும் நீயே! நான் எண்ணும்போது, கல்விச் செல்வம் எளிதாக எனக்குக் கை கூடும்படியாக அருள் புரிவாயாக!

சகலகலாவல்லிமாலை! -  ஸ்ரீமூக பஞ்ச சதி

ஸ்ரீமூக பஞ்ச சதி

ச்யாமா காசன சந்த்ரிகா
த்ரிபுவனே புண்யாத்ம நாமானனே
ஸீமா சூன்ய கவித்வ வர்ஷ ஜனனீ
யா காபி காதம்பினீ
மாராராதி மனோ விமோஹனவிதௌ
காசித்தம: கந்தலீ
காமாக்ஷ்யா: கருணா கடாக்ஷ லஹரீ
காமாய மே கல்பதாம்

கருத்து:  ஸ்ரீகாமாட்சி தேவியின் கருணை நிறைந்த கடைக் கண்களின் வரிசையானது இணையில்லாத கறுப்பு நிறம் கொண்ட சந்திரிகை போலவும்; மூவுலகங்களிலும் புண்ணியம் செய்தவர்களின் வாக்கில் அளவில்லாத நூல் இயற்றும் திறமையைப் பொழியும் மேகக் கூட்டம் போலவும்; மன்மதனை எரித்த சிவபெருமானின் மனதை மோகம் கொள்ளச் செய்வதில், இணையில்லா இருள் குவியல் போலவும் இருக்கிறது. தேவியின்  அந்த அருள் வெள்ளம் என் விருப்பத்தை நிறைவேற்றட்டும்.

- கீதா, சென்னை-49