Published:Updated:

திருவிளக்கு பூஜை

விகடன் விமர்சனக்குழு
திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜை
##~##

சாத்தூர் ஸ்ரீவிஸ்வநாதர்-விசாலாட்சி கோயிலில், சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, கடந்த 26.3.13 அன்று நடைபெற்றது. சக்தி விகடனின் 109-வது திருவிளக்கு பூஜை இது!

''என் அப்பாவுக்கு ரொம்ப வருஷமாவே உடம்புக்கு முடியலை. அந்த தருணத்துல, சென்னை திருவொற்றியூர்ல நடந்த விளக்கு பூஜைல கலந்துக்கிட்டு வேண்டிக்கிட்டேன். இப்ப அவர் எவ்வளவோ பரவாயில்லை. இன்னும் பூரணமா குணமாகணும்னு இங்கே வந்திருக்கேன்'' என்று மனநிறைவுடன் தெரிவித்தார் நெல்லை வாசகி மாரீஸ்வரி.

''எங்க ஊர்ல சக்தி விகடன் விளக்கு பூஜை எப்ப நடக்கும்னு ஆசையா காத்துக்கிட்டிருந்தேன். அது இப்ப நிறைவேறிருச்சு. குடும்பமும் உறவுகளும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன். மனசுக்கு நிறைவா இருக்கு'' என்கிறார் வாசகி தனலட்சுமி.

''சக்தி விகடன் விளக்குபூஜைல கலந்துக்கிட்டா, நினைச்ச காரியம் ஈடேறும்னு நிறைய பேர் சொல்லியிருக்காங்க. இங்கே வந்திருக்கிற எல்லாரோட பிரார்த்தனைகளும் நிறைவேறணும்'' என்றார் வாசகி சுகந்தி.

திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜை

'பத்தாம் வகுப்புத் தேர்வில் சகோதரி வெற்றி பெற வேண்டும்’ என்று விஜயலட்சுமியும், 'இன்ஜினீயரிங் படிப்பு முடிந்ததும் மகளுக்கு நல்ல வேலை கிடைக்கணும்’ என்று கற்பகவல்லியும், 'கணவரும் குழந்தைகளும் நோய் நொடியில்லாம, ஆரோக்கியமா இருக்கணும்’ என்று சர்மிளாவும் பிரார்த்தித்தனர்.

''எங்களுக்குத் தெரிஞ்சு, ஸ்ரீவிஸ்வநாதர் - ஸ்ரீவிசாலாட்சி சந்நிதில நடந்த முதல் திருவிளக்கு பூஜை இதுதான்! இதுபோல நாங்களும் விளக்கு பூஜை நடத்த முடிவு பண்ணியிருக்கோம். சக்தி விகடனுக்கு நன்றி!’ என துர்கா வார வழிபாட்டு மன்ற வாசகிகள், உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

  - ச.காளிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்