சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை
##~##

சென்னை, பம்மல் ஸ்ரீஅர்க்கீஸ்வரர், ஸ்ரீபிடாரி சூரியம்மன் கோயிலில், கடந்த 9.4.13 அன்று, சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை சிறப்புற நடைபெற்றது. சக்தி விகடனின் 110-வது விளக்கு பூஜை இது!  

 ''விளக்கேத்தி வழிபடுறதே விசேஷம்! அதிலேயும், பெண்கள் பலரும் சேர்ந்து விளக்கு பூஜை நடத்தறதும், அந்த பூஜை எனக்குப் பிடிச்ச கோயில்ல நடக்கறதும்

ரொம்பவே பூரிப்பா இருக்கு. எல்லாரும் நல்லாருக்கணுங் கறதுதான் என் வேண்டுதல். சக்தி விகடனுக்கு நன்றி!'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் வாசகி உமா நடராஜன். ''என் பையன் சினிமா துறையில உதவி கேமராமேனா இருக்கான். அவனுக்குச் சீக்கிரமே கல்யாணம் நடந்து, எனக்கு நல்ல குணமுள்ள மருமகளா அமையணும். என் கணவர் மற்றும் குடும்பத்தார் ஆரோக்கியமா இருக் கணும்!'' என்றார் வாசகி வனஜா முத்து.

திருவிளக்கு பூஜை

''எல்லாரும் குறைவின்றி, நிம்மதியா வாழணும். இதான் என் ஆசை, வேண்டுதல் எல்லாமே!'' என்று ஆதம்பாக்கம் வாசகி லட்சுமியும், ''விலைவாசி குறையணும். இந்த முறை நல்ல மழை பெய்யணும்'' என்று வாசகி சுகந்தா சாரங்கனும் தெரிவித்தனர். ''திருத்தணியில விளக்குபூஜை நடத்தினப்ப, என் மகளுக்கு நல்லபடியா குழந்தை பொறக்கணும்னு வேண்டிக்கிட்டேன். அதன்படியே, எனக்கு அழகா ஒரு பேத்தி பிறந்துட்டா. வீட்டுல கொஞ்சம்

கடன் இருக்கு. கடனெல்லாம் அடைஞ்சு, நிம்மதியா இருக்கணுங்கறதுதான் எனது வேண்டுதல்'' என்றார் வாசகி இந்திரா.

எல்லோரது பிரார்த்தனையும் நிறைவேறும்.

- வ.விஷ்ணு படங்கள்: ரா.மூகாம்பிகை