சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

தாமரைக் கண்கள்

தாமரைக் கண்கள்

##~##
தாமரைக் கண்கள்

ருமுறை திருமுருக கிருபானந்தவாரியாரோடு உரையாடிக் கொண்டிருந்தார் கவிஞர் ஒருவர். அப்போது, 'என்னதான் இருந்தாலும் கவிச்சக்கரவர்த்தி கம்பனும் தவறிழைத்துவிட்டாரே..!'' என்றார் கவிஞர்.

உடனே வாரியார், 'தாங்கள் எதற்காக அப்படிச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டார்.

அதற்குக் கவிஞர், 'வீதியில் விஸ்வாமித்திரருடன் நடந்துசென்ற ராமபிரானை, 'மாதர் தாமரைக் கண்ணால் நோக்கினார்’ என்று பாடியுள்ளார். ஆண்கள் முகத்தை தாமரைவதனன் என்றும், பெண்களை குமுதம் போன்ற முகம் என்றும் ஒப்பிடுவது இலக்கிய

தாமரைக் கண்கள்

மரபு. ஆகவே, மாதர் முகத்தைத் தாமரைக்கு ஒப்பிட்டதன் மூலம் கம்பர் தவறிழைத்துவிட்டார், அல்லவா?' என்றார்.

கவிஞரின் விவாதத்தைக் கேட்டு லேசாக சிரித்த வாரியார், தனக்கே உரிய பாணியில் அவருக்குப் பதில் சொன்னார்.

'மாதர் தாமரைக் கண்ணால் நோக்கினார் என்பதை, மாதர் தம் அரைக் கண்ணால் நோக்கினார் என்று பதம் பிரித்து பொருள்கொள்ள வேண்டும். அப்போதுதான் சரியான பதில் வரும்' என்று வாரியார் சொல்ல... இதுவரை இப்படியரு விளக்கத்தை யாரும் சொன்னதில்லையே என்று வியந்துபோனார் கவிஞர்.

அதுதான் வாரியார்!

- சி.ரகுபதி, போளூர்