குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

திருவிளக்கு பூஜை - 112

திருவிளக்கு பூஜை - 112

திருவிளக்கு பூஜை - 112
##~##

புதுச்சேரி, குறிஞ்சி நகரில் உள்ள ஸ்ரீவலம்புரி விநாயகர் கோயிலில், கடந்த 23.4.13 அன்று சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. இது சக்தி விகடனின் 111-வது திருவிளக்கு பூஜை.

புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் எனப் பல ஊர்களில் இருந்தும் ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டனர் வாசகிகள்.

திருவிளக்கு பூஜை - 112

''என் கணவரின் உடல்நிலை கொஞ்சம் சரியில்லை. பையன் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதியிருக்கான். கணவர் விரைவில் குணமாகணும். பையன் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணணும்'' என்றார் வாசகி புஷ்பா.

''படிப்பு முடிச்சிட்டேன். இனி, குடும்பத்தைக் காப்பாத்தணும். என் படிப்புக்கேத்த ஒரு நல்ல வேலை கிடைக்கணுங்கறதுதான் என் பிரார்த்தனை. என் கோரிக்கையை ஸ்ரீவிநாயகர் நிறைவேத்தித் தருவார்னு நம்பறேன்'' என்றார் வாசகி கவிதா.

''சண்டையும் பூசலும் இல்லாத உலகத்தைப் பார்க்க விரும்புறேன். அமைதியான, நிம்மதியான வாழ்க்கை உலக மக்களுக்கு அமையணுங்கறதுதான் என் ஆசை, விருப்பம், பிரார்த்தனை எல்லாமே!'' என்று தெரிவித்தார் வாசகி ராஜேஸ்வரி.

''கல்யாணமாகி ரெண்டு வருஷமாகியும் குழந்தை பாக்கியம் இன்னும் கிடைக்கலை'' என்று வாசகி உமாவும், ''நானும் கணவரும் இப்போது போலவே எப்பவும் ஒற்றுமையா, அன்பா இருக்கணும்'' என்று வாசகி ராஜலட்சுமியும் தெரிவித்தனர்.

ஸ்ரீவலம்புரி விநாயகர், நம் வாழ்க்கையை நிச்சயம் வளம் பெறச் செய்வார்.

- நா.இள.அறவாழி, படம்: பா.கந்தகுமார்