குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

திருக்கயிலாய புண்ணிய யாத்திரை!

திருக்கயிலாய புண்ணிய யாத்திரை!

திருக்கயிலாய புண்ணிய யாத்திரை!

* போட்டிக்கான உங்கள் ஆன்மிகப் பயண அனுபவக் கட்டுரை எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 15.6.2013

வாழ்க்கையை முழுமைப்படுத்தும் அற்புத அனுபவம் அல்லவா அது! எம்பெருமான் மட்டுமின்றி, வழிதோறும் பல தெய்வங்கள் உறையும் பனிமலை யாத்திரையின் சிலிர்ப்பை வார்த்தைகளில்தான் சொல்லி விளங்க வைக்க முடியுமா? எத்தனை பேருக்கு நிறைவேறி இருக்கிறது இந்த பிறவிப் பயன் ஆசை? அளவில்லா புண்ணியத்தை இம்மைக்கும் மறுமைக்குமாக அள்ளித் தரும் பரவசமான கயிலாய யாத்திரைக்குச் சென்று வரும் வாய்ப்பைப் பரிசாகப் பெறுவதற்கு, இதோ உங்களுக்கு ஒரு போட்டி!

உங்கள் சக்தி விகடன் தனது 10-ஆம் ஆண்டில் பெருமித நடைபோடும் இந்த இனிய தருணத்தில், ஸ்ரீஅன்னபூரணி யாத்ரா சர்வீஸுடன் கைகோத்து நடத்தும் இந்த ஆன்மிக அனுபவப் போட்டியில் கலந்துகொள்ளுங்கள். எங்கள் செலவிலேயே பயணித்து, மானசரோவர் புண்ணிய ஏரியில் நீராடி, பனிமுடி தரிசனம் காணும் அந்தச் சிலிர்ப்பான அனுபவத்தைப் பெறும் வாசகர் நீங்களாகவும் இருக்கலாம்.

சென்னையில் இருந்து காட்மாண்டு வரை விமானப் பயணம்; பிறகு, அங்கிருந்து திருக்கயிலாயம் சென்று, கயிலையான் பாதம் பணிந்து, மீண்டும் சென்னை திரும்பி வரும் வரையிலான பயணக் கட்டணம், விமானக் கட்டணம், உணவு, உறைவிடம் என இந்த யாத்திரைக்காக ஆகும் மொத்தச் செலவு ஒரு நபருக்குச் சுமார் 1 லட்சம் ரூபாய். உங்களுக்கும் உங்களுக்குத் துணையாக மற்றொருவருக்குமாக இரண்டு வாசக நேயர்களுக்கு இந்த அரிய வாய்ப்பை அளிக்கப் போகிறோம்.

##~##

நீங்கள் செய்யவேண்டியது என்ன?

ஏற்கெனவே நீங்கள் மேற்கொண்ட ஏதேனும் ஒரு ஆன்மிகப் பயண அனுபவத்தைக் கட்டுரையாக 'சக்தி விகடன்' பார்வைக்கு எழுதி அனுப்புங்கள். அந்தப் பயணம் உங்களைச் சிலிர்க்கச் செய்திருக்கும்; திகைப்பூட்டும் அனுபவத்தைத் தந்திருக்கும்; எதிர்பாராத அதிசயத்தை உங்கள் வாழ்வில் நிகழ்த்திக் காட்டி இருக்கும்; ஏன்... வேடிக்கை மிக்க சம்பவங்கள் அதில் இடம்பெற்று, உங்களை ரசித்துச் சிரிக்கவும் வைத்திருக்கலாம்!

தமிழ்நாட்டுக்குள்தான் என்றில்லை; உலகின் எந்த மூலைக்கு நீங்கள் அந்த ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டிருந்தாலும், இந்தப் போட்டியில் பங்குபெறலாம்.

உங்கள் கட்டுரை, முழுநீள வெள்ளைத் தாளில் மூன்று பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். அந்த ஆன்மிக பயணத்தின்போது நீங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்தால், அவற்றையும் இணைத்து அனுப்புங்கள்.

பரிசீலனைக்கு வருபவற்றில் இருந்து மிகச் சிறப்பான கட்டுரை ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு, அது சக்தி விகடனில் பிரசுரிக்கப்படும். அதை எழுதிய வாசகர் தன்னுடன் இன்னொருவரையும் அழைத்துக்கொண்டு கயிலாய யாத்திரை செல்லும் வாய்ப்பைப் பெறுவார். உடல்நிலை அல்லது வேறு காரணங்களால் அந்த வாசகர் பயணம் செல்ல இயலாவிட்டாலும், அவர் பரிந்துரைக்கும் யாரேனும் இருவர், பரமனின் பனிமுடி தரிசிக்க இனிதே பறந்து சென்று திரும்பலாம்.

யாத்திரைப் பரிசுக்கான அந்த ஒரு கட்டுரை தவிர, இன்னும் சிலவும் தேர்ந்தெடுக்கப்படும். அவை விகடன் டாட்காம் இணைய தளத்தில் பிரசுரமாகி, உலகம் முழுவதிலும் உள்ள ஆன்மிக அன்பர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும். அந்தக் கட்டுரைகளுக்கும் முத்தான பரிசுகள் காத்திருக்கின்றன.

* போட்டிக்கான உங்கள் ஆன்மிகப் பயண அனுபவக் கட்டுரை எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி: 15.6.2013

என்ன... துளி நேரமும் வீணாக்காமல் போட்டிக்கான கட்டுரையை எழுதத் துவங்கிவிட்டீர்கள்தானே..!

திருக்கயிலாய யாத்திரை நடைபெறும் காலம்:

ஆகஸ்ட் 11-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை 14 நாட்கள்!

முக்கிய நிபந்தனைகள்:

திருக்கயிலாய புண்ணிய யாத்திரை!

இந்த யாத்திரையில் கலந்துகொள்பவர்கள் 65 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

திருக்கயிலாய புண்ணிய யாத்திரை!
திருக்கயிலாய புண்ணிய யாத்திரை!

 உங்களிடம் பாஸ்போர்ட் இருக்க வேண்டும்.

திருக்கயிலாய புண்ணிய யாத்திரை!

 இதயம், மூட்டு வலி பிரச்னைகளுக்காக அறுவைச் சிகிச்சைகள் செய்துகொண்டவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்ள இயலாது.

திருக்கயிலாய புண்ணிய யாத்திரை!

 பயணத்துக்கு ஏற்ற உடல் நலம் பெற்றவர்தானா என்பதற்கான 'டிரெட்மில்' சான்றிதழ் தேவை. அந்த மருத்துவ சான்றிதழை, உங்கள் கட்டுரை தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் சமர்ப்பித்தால் போதுமானது.

திருக்கயிலாய புண்ணிய யாத்திரை!

 வானிலை அல்லது தவிர்க்க இயலாத வேறு காரணங்களால் பயணத் திட்டம் மாறினால், அதற்கு சக்தி விகடன் நிறுவனமோ, அன்னபூரணி யாத்ரா சர்வீஸ் நிறுவனமோ பொறுப்பல்ல.

திருக்கயிலாய புண்ணிய யாத்திரை!

சென்னை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்று, யாத்திரை முடிந்து, மீண்டும் சென்னை விமான நிலையத்துக்குக் கொண்டு வந்து விடுவது வரை யாத்ரா சர்வீஸின் பொறுப்பாகும்.

திருக்கயிலாய புண்ணிய யாத்திரை!

 ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.